திட உணவைத் தாய்ப்பால் கொடுக்கும்போதே தொடங்கி விடலாமா?
ஆம். தாய்ப்பால் கொடுக்கும்போதே, திட உணவைத் தொடங்கி விடுதல் நல்லது தான். ஆனால், அதற்கான கால வேளையில் தொடங்குவதே உத்தமம்.
எந்த காலத்தில் திட உணவைக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்?
- இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் 6 ஆம் மாதத்தில் திட உணவைக் கொடுக்கலாம் என்று கூறுகிறது
- ஆனால் குழந்தைகளுக்கு 17 வது வாரத்தில் இருந்து 27 வது வாரம் வரையிலான காலக்கட்டத்தில், திட உணவை அறிமுகப்படுத்தினால் பற்பல நோய்கள், வயிற்று கோளாறுகள் மற்றும் அலெர்ஜி போன்ற வியாதிகள் வரும் வாய்ப்பு மிகவும் குறைவே.
- முடிந்தவரை குழந்தைக்கு 4 வது மாதத்தில் திட உணவை அளிக்காமல் 6 வது மாதத்தில் திட உணவைக் கொடுப்பது மிகவும் நல்லது.
- அதற்குப்பின் மெதுவாக தாய்ப்பால் ஊட்டுதலைக் குறைத்துக் கொண்டு, திட உணவைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்
குழந்தை திட உணவைச் சாப்பிட தயாராகி விட்டானா என்று எப்படி தெரிந்து கொள்வது?
- குழந்தையின் கழுத்து நின்ற பிறகு, அதாவது மூன்றாவது மாதத்திற்குப் பிறகு, நீங்கள் தொடங்கலாம்.
- குழந்தை சுயமாக உட்கார ஆரம்பித்த பிறகு நீங்கள் திட உணவைக் கொடுக்கலாம்
- குழந்தை தன்னுடைய நாக்கை உள்ளேயும் வெளியேயும் சுழற்ற ஆரம்பித்த பிறகு திட உணவைக் கொடுக்கலாம்
- வாயை எப்போதும் அசைப்போட்டபடி இருக்கும்
- நீங்கள் உணவு உண்ணும்போது உங்களைப் பார்த்து, தன நாக்கை வெளியே நீட்டி சைகை கொடுத்தால், உங்கள் குழந்தை திட உணவை சாப்பிட தயாராகி விட்டான் என்பதே அர்த்தம்.
திட உணவைக் கொடுக்கலாம் என்று நீங்கள் தீர்மானித்த பிறகு பின்பற்ற வேண்டிய செயல்கள் என்ன?
- குழந்தைக்கு உணவு தயாரிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் உணவு கொடுக்க பயன்படுத்தும் பாத்திரங்களை வெந்நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ளவும்
- குழந்தைக்கு மறக்காமல் உட்கார்ந்த நிலையில்தான் உணவைத் தர வேண்டும். படுத்த நிலையில் இருக்கும்போது எக்காரணம் கொண்டும் உணவளிக்காதீர்கள்.
- உணவைத் தயார் செய்த 2 மணிநேரத்திற்குள் குழந்தைக்கு ஊட்டி விடுங்கள். நீண்ட நேரம் வைத்திருந்த உணவை குழந்தைக்குத் தருவதைத் தவிர்க்கவும். முடிந்தவரை குழந்தைக்கு அவ்வப்போது தயாரித்த உணவை லேசான சூட்டில் கொடுப்பதே உத்தமம்.
#babychakratamil