• Home  /  
  • Learn  /  
  • மும்பையில் ஸ்டெம் செல்களின் உதவியால் உயிர் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை – உலகளாவிய அதிசயம்!!
மும்பையில் ஸ்டெம் செல்களின் உதவியால் உயிர் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை – உலகளாவிய அதிசயம்!!

மும்பையில் ஸ்டெம் செல்களின் உதவியால் உயிர் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை – உலகளாவிய அதிசயம்!!

26 Apr 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

ஆம், நீங்கள் கேட்டது சரிதான்! உலகிலேயே முதன்முதலில், இந்தியாவில் அதுவும் மும்பையிலுள்ள சூர்யா மருத்துவமனையில், ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி முன்கூட்டியே பிறந்த பத்து மாத பச்சிளம் குழந்தையின் உயிர் மீட்கப்பட்டுள்ளது

 

ஸ்டெம்செல்களை சிகிச்சையில் பயன்படுத்த இதுவரை ஐஸிஎம்ஆர் – மருத்துவ ஆய்வுக்கான இந்திய கவுன்சிலிலிருந்து ஒப்புதல் கிடையாது. அப்படி இருந்தும் எப்படி இந்த சூர்யா மருத்துவமனை மட்டும் ஸ்டெம் செல் சிகிச்சையளித்தது? இதற்கு பின்னுள்ள கதை என்னவென்று விரிவாக காண்போம்.

 

மும்பையில் சான்டிவலி என்கிற பகுதியில், மீனாக்ஷி துபே மற்றும் அவர் கணவர் பிரமோத்  வசித்து வருகின்றனர். கடந்த வருடம் 2018 ஜூன் மாதத்தில் ருத்ரான்ஷ் என்ற மகன் பிறந்தான். தாய்க்கு தன் கர்ப்பப்பையின் உள்வளர்ச்சி நின்று போனதால், பிரசவ தேதிக்கு முன்னே சிசேரியன் மூலம் டெலிவரி ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

 

ஆனால், புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையின் நிலையோ மிகவும் பரிதாப நிலையாக இருந்தது. இந்த குழந்தையின் எடை வெறும் 600 கிராம் தான் இருந்தது. அதுமட்டுமல்லாமல், குழந்தையின் நுரையீரல் மிகவும் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தது. என்னதான் மருந்துகள் அளித்தாலும் ஒரு பலனும் இருக்கவில்லை. வெண்டிலேட்டரிலிருந்து குழந்தையை வெளியே கொண்டுவர முடியவில்லை.

 

குழந்தை பிறந்து 27வது நாளில், குழந்தையை சூர்யா மருத்துவமனையில் கொண்டுவரப்பட்டது. “எத்தனையோ மருந்துகளும் ஸ்டேரோய்ட்களும் அளித்து, நான்கு மாதங்கள் கடந்தன. இருந்தும் குழந்தையை வெண்டிலேட்டரிலிருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை”, என்று நியோநேட்டலோஜிஸ்ட் மருத்துவர் ஹரி பாலசுப்பிரமணியன் கூறினார்.

 

கடந்த அக்டோபர் மாதத்தில், குழந்தையின் பெற்றோரிடம் இனி குழந்தை உயிர் பிழைப்பது கடினம்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்கு குழந்தையின் தந்தை பிரமோத், “நீங்கள் ஏதாவது செய்து குழந்தையைப் பிழைக்க வைக்கவும்”, என்று கூறினார்.

 

பெற்றோர்களின் வலியுறுத்தலால் டாக்டர் காப்ரா வேறு ஏதேனும் சிகிச்சை முறை இருக்கிறதா என்று தேடினார்கள். இந்நேரத்தில் ஆஸ்ட்ரேலியா மற்றும் தென் கொரியாவில் நடந்த இரண்டு ஆய்வுகளைக் குறித்து படித்தார்கள். தொப்புள் கொடியின் உதிரத்திலிருந்து எடுக்கப்பட்ட மீசங்கைமல் ஸ்டெம்செல்களைப் பயன்படுத்தி வளர்ச்சி குறைந்த நுரையீரலின் நிலையைச் சரி செய்துவிடலாம் என்பதே அந்த ஆய்வு. இதுவரை இந்த நுரையீரல் கோளாறைக் குணப்படுத்த இந்த ஸ்டெம்செல்கள் பயன்படுத்தவில்லை. இந்த கோளாறை வராமல் தடுக்க மட்டுமே இந்த ஸ்டெம்செல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

குழந்தையின் தந்தை டாக்டரின் மூலம் இந்த கண்டுபிடிப்பைப் பற்றித் தெரிந்தவுடன், ஸ்டெம்செல்களை ஏற்பாடு செய்தார். அக்டோபர் மாதத்தில், மூச்சு வாங்க உதவும் டியூபைப் பயன்படுத்தி மொத்தம் நாற்பது மில்லியன் மீசங்கைமல் ஸ்டெம்செல்களை நேரடியாக நுரையீரலில் செலுத்தினார்கள். சிடி ஸ்கேன் மூலம் அதிசயமிக்க மாற்றங்கள் 14 நாட்களுக்குள் காண முடிந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, குழந்தையை வெண்டிலேடரிலிருந்து வெளியே கொண்டு வர முடிந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் மாபெரும் மாற்றங்களைக் காண முடிந்தது. “இந்த ஸ்டெம்செல்கள்  நுரையீரலின் வளர்ச்சியை மேம்படுத்தி அதைச் சுற்றியுள்ள தசைகளின் வளர்ச்சிக்கும் துணை புரிகிறது”, என்றார் டாக்டர் காப்ரா.

 

நேர்மறையான அதிசயத்தக்க மாற்றங்களைக் கண்டவுடன் தந்தையும் தாயும் அதிகமாக மகிழ்ச்சியடைந்தனர். “இதுவரை இந்த பரிசோதனை வெறும் மிருகங்களில் மட்டும்தான், அதுவும் ஆய்வு மையங்கள் மட்டும்தான் நடந்துள்ளன. அப்படி இருக்க இந்த மருத்துவமனை மட்டும் எந்த அடிப்படையில் இந்த ஸ்டெம்செல் தெராபியைக் கையாண்டது?” என்று மைய அரசு மருத்துவமனை ஆளுநர்களை வினவியது. அதற்கு பதிலாக குழந்தையின் தந்தை, “எனக்கு விஞ்ஞானத்தின் மீது அதீத நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு நாளும் புதியதொரு கண்டுபிடிப்பு நிகழ்கின்றது. இது ஒரு சோதனைதான். ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை”, என்று தெளிவாக விடையளித்தனர். பிரமோத் சார்க்கு பேபிசக்ரா வகை ஒரு சல்யூட்!

 

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மறக்காமல் உங்கள் எண்ணங்களை ஷேர் செய்யவும்.

 

பதாகை பட : usada

 

#babychakratamil #babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you