4 May 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
இது ஒரு கோடை புயலை கையாள்வது போல – திடீரென ஆரம்பமாகிறது , திடீரென்று முடிவடைகிறது. ஒரு நிமிடம் குழந்தை தனது பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது, அடுத்த கணம் அவர்கள் கூச்சலிடுவார்கள்..
என் 5 வயது குழந்தை அடம்பிடிப்பது ஏன்?
5 வயதில் பொதுவாக உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும். அவர்கள் கட்டுப்பாட்டை இழக்கக்கூடாது என்றாலும், அவர்களை உணர்ச்சிகள் விளிம்பில் இருந்து தள்ளும் போது அவர்கள் அதிர்ச்சியூட்டும் முறையில் நழுவலாம். உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில காரணங்கள் பின்வருமாறு:
சுற்றுவட்டார அழுத்தம்
களைப்பு
பயம்
கிண்டலுக்கு உள்ளாகுதல்
பள்ளியில் கல்வி சுமை
நட்பு பிரச்சனைகள்
மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் கோபப்படுவது
உங்கள் குழந்தை கோபமடையும் போது அவர்களால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் குழந்தைக்கு அவர்களுடைய கோபத்தைத் தோற்றுவிப்பதற்கான சரியான காரணத்தை அறிந்துகொள்வது சிறந்தது.
குழந்தை அடம்பிடிப்பதை சமாளிப்பது எப்படி?
அடம்பிடிப்பது சகஜம் எனினும் அந்த சூழ்நிலையில் கோவப்படாமல் சமாளிப்பது பெற்றோர்களுக்கு கடினமான செயலாக இருக்கிறது. கோவம் கொள்வது இயல்பே ஆனால் இது உங்கள் குழந்தைக்கு கடுமையானதாக இருக்கும். எனவே கோவத்தை தவிர்த்து, செயலில் உறுதியாக இருக்க வேண்டும் மேலும் அடம்பிடிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயம் இல்லை என்பதை தெளிவாக கூற வேண்டும், அவர்கள் உணர்ச்சியின் பிழம்பில் சிக்கி தவிக்கும் போது நீங்கள் உறுதுணையாக இருப்பது அவசியம்.
○ஒன்றாக கோபத்தை கையாள்வது ஒரு விதம்:
உங்கள் குழந்தை மற்றும் நீங்களும் ஒன்றாக சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். இந்த வழியில், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் கோபம் தான் பிரச்சனைக்கு காரணமே தவிர அவர்கள் இல்லை என்பதை உணர செய்ய வேண்டும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், ஒரு குழந்தை தனது பெற்றோர்களை பார்த்து சில விஷயங்களை செய்கிறார்கள். எனவே நீங்களும் கோபத்தை சரி வர கையாள வேண்டும். எனவே நீங்கள் இருவரும் நிலைமையை சிறப்பாக கையாள முடியும்.
○உங்கள் பிள்ளைக்கு கோபத்தை அடையாளம் காட்டுங்கள்:
உங்கள் குழந்தைக்கு கோபம் வரும்போதோ, திடீரென்று கொடூரமாக பேசுவதையோ உணர்ந்துகொள்ள முடிந்தால், எதிர்காலத்தில் அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இன்னும் நேர்மறையான முடிவுகள் எடுக்க முடியும். உங்கள் குழந்தைக்கு அவர்கள் கோபப்படுவதைப் பற்றியும் அதனால் என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் பேசுங்கள். அவர்களிடம் சில மாற்றங்களை கவனிக்கலாம்:
இதயம் வேகமாக துடிக்கலாம்
பற்களை கடிக்கலாம்
தசைகள் பதட்டமடையலாம்
கைகளை மடக்கலாம்
படப்படப்பாக இருக்கலாம்
சில குறிப்புகள் கொடுங்கள்:
○பிள்ளையை உற்சாகப்படுத்துவதன் மூலம் ஊக்கப்படுத்துங்கள்.
○10 வரை எண்ண சொல்லலாம்
மெதுவாக, ஆழமான சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
○இடத்தை விட்டு நகர்ந்து சொல்லலாம்
○அவர்கள் நம்புவோருடன் பேச சொல்லலாம்
அழுத்தத்தின் அறிகுறிகள்:
சண்டைக் போடுவது பள்ளி ஆண்டுகளில் ஒரு பகுதியாக இருந்தாலும் கூட, அடிப்படை வளரும் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் அவர்களை கவனிக்க வேண்டும். உங்கள் பிள்ளை களைப்படைந்திருக்கிறாரா? குடும்பத்தில் ஏதாவது பதற்றம் இருக்கிறதா? சமீபத்தில் நீங்கள் பிஸியாக இருந்தீர்களா? உங்களுக்கும் உங்கள் மனைவியுக்கும் இடையில் சில எழுச்சிகள் உள்ளனவா? இத்தகைய சூழ்நிலைகள் ஒரு அழுத்தத்தை தூண்டிவிடும்.
உங்கள் பிள்ளையின் அடம்பிடிக்கும் குணம் மோசமாகிவிட்டால், மனநல நிபுணரிடம் பேசுவது சிறந்தது, அவற்றின் வெளிப்பாடுகளுக்கு பிற காரணங்களைக் கண்டறிவது அவசியம்.
A