• Home  /  
  • Learn  /  
  • குழந்தையின் வயதிற்கேற்ப எந்த விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர வேண்டும்?
குழந்தையின் வயதிற்கேற்ப எந்த விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர வேண்டும்?

குழந்தையின் வயதிற்கேற்ப எந்த விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர வேண்டும்?

4 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

குழந்தைகளுக்கு முதன்முதலில் அமையும் தோழர்களே பொம்மைகள்தான். உயிருள்ள ஒரு ஜீவனாக கருதி அவரிடம் மிரட்டியும் கொஞ்சியும் விளையாடுவார்கள்.
பொம்மைகளில் பற்பல விதங்கள் உள்ளன.

 

  • ஃபர் பொம்மைகள்
  • மரப்பொம்மைகள்
  • பிளாஸ்டிக் பொம்மைகள்
  • மண் பொம்மைகள்
  • ரப்பரால் ஆன பொம்மைகள்

குழந்தைகளின் வயதையும் இப்போதெல்லாம் கணக்கில் எடுத்து, அதற்கேற்றவாறு கடைகளில் பொம்மைகள் விற்கப்படுகின்றன.

உங்கள் குழந்தைக்கு இவற்றில் எந்த பொம்மையை வாங்க போகிறீர்கள் என்பதை முன்பே தீர்மானித்துக் கொண்டு வாங்குவதே சிறந்தது.

குழந்தைக்களுக்கு இந்த பொம்மைகள் வெறும் தோழர்கள் மட்டும் அல்ல. பொம்மைகளை தம்பியாகவும், தங்கையாகவும், ஹீரோவாகவும், வில்லனாகவும் கருதுவர். இந்த பொம்மைகளுடன் பேசுவார்கள், சிரிப்பார்கள், விளையாடுவார்கள், உணவூட்டி விடுவார்கள், தூங்குவார்கள், குளிப்பாட்டுவார்கள், அழகுபடுத்துவார்கள், மற்றும் சண்டை போடுவார்கள். பொம்மைகளை சுற்றியே குழந்தைகளின் வாழ்க்கை அமையும். முழுநேரமும் இந்த பொம்மைகளையே குழந்தைகள் கையாளுவதால், அவர்களின் விளையாட்டு பொருட்களில் பாதுகாப்பு தேவை.

எந்த வயதிற்கேற்ப எந்த விளையாட்டு பொருட்களைக் குழந்தைக்கு வாங்கித் தர வேண்டும்?

நீங்கள் குழந்தைக்கு வாங்கித் தரும் பொம்மைகள் எல்லாம் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும்.

 

  • 0-3 மாத குழந்தைகளுக்கு வண்ணமயமான, சுழலக்கூடிய, இசை எழுப்பும் பொம்மைகளை வாங்கிக் கொடுக்கவும். இக்காலங்களில் அவர்களின் தொட்டிலின் மேல் இந்த பொம்மை சுழன்று கொண்டே இருக்கும். அவர்கள் அழுத்தாலும், இந்த பொம்மைகளை அவர்களின் முன்பு ஒலிக்கச் செய்யலாம்.

 

  • 3- 6 மாத குழந்தைகள் குப்புற படுத்துக்கொண்டு தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களைக் கவனிப்பார்கள். ஆதலால் அவர்களுக்கு ஒலி எழுப்பிக் கொண்டு நகரும் பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கைகளைத் தட்டி ஒலி எழுப்பக் கூடிய கிளுகிளுப்பு பொம்மைகளையும் வாங்கிக் கொடுக்கலாம். கையால் பிடிக்க முடிகிற மென்மையான பொம்மைகளையும் வாங்கலாம்.

 

  • 6-9 மாதங்களில் குழந்தைகள் தவழவும் உட்காரவும் முயற்சிப்பார்கள். அவர்கள் எழுந்து நிற்கவும் முயற்சி எடுப்பார்கள். இக்கால வேளையில் அவர்கள் தங்களிடம் உள்ள பொருட்களை எடுப்பது, தள்ளுவது, மற்றும் எறிவது போன்ற செயல்களைச் செய்வார்கள். இக்கால வேளையில் நகரும் பொம்மைகளை வாங்கித் தரவும். லைட் உள்ள கார், பஸ், ரயில் போன்றவற்றை வாங்கித் தரலாம். ஆட்டம் போடும் கோழி, நாய், பூனை போன்ற பொம்மைகளையும் வாங்கலாம். இந்த பொம்மைகள் அவர்களின் வாயில் நுழையாத அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளவும்.

 

  • 9 வது மாதத்திற்கு மேல் குழந்தைகளுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டுகளை வாங்கிக் கொடுக்கலாம். அதே போல, சிறிய சைக்கிள் அல்லது சிறிய கார் வாங்கிக் கொடுக்கலாம். வண்டியோட்டவும் ஆரம்பித்து இருப்பார்கள்.

· ஒரு வயதிற்கு மேலான குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கவும். பால், பேட் மற்றும் பிளாக்ஸ் அடுக்கும் பொம்மை வகைகளை வாங்கிக் கொடுக்கவும்

எந்த பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்?

 

  • சில பொம்மைகளில் ஸ்க்ரூ, பேட்டரிகள், மணிகள் போன்றவை உள்ளன. ஆதலால் அது போன்ற பொம்மைகளை குழந்தைகளுக்கு முதலில் வாங்கித் தருவது தவறு. குழந்தைகள் அவற்றை விழுங்கிவிட வாய்ப்பு உண்டு.
  • கூர்மையான பொம்மைகளைத் தவிர்க்கவும்
  • முதல் காலக்கட்டத்தில், ஃபர் பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்கவும். அவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது
  • ஒரு வயதிற்கு மேல் சைக்கிள் அல்லது கார் வாங்கித் தருமுன் தன்  குழந்தைகளால் உண்மையிலேயே இந்த வாகனங்களை கையாள முடிகிறதா என்று பார்த்த பிறகுதான், இவற்றைக் குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும்.

6 வயது வரை ரப்பர் பொம்மைகளை வாங்கி தரவேண்டாம். பலூன்களையும் தவிர்க்கவும்.

 

  • அதிக எடையுள்ள விளையாட்டு பொருட்களைத் தவிர்க்கவும்
  • காந்தம் இருக்கும் விளையாட்டுகளைத் தவிர்க்கவும்
  • கயறு இருக்கின்ற விளையாட்டு பொருட்களையும் தவிர்க்கவும்
  • மறக்காமல் யாரேனும் கிஃப்டாக கொடுத்த பொம்மையை நீங்கள் நன்றாக சரிப்பார்த்து அதற்குப்பின் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
  • நீங்கள் உங்கள் குழந்தைக்கு இங்கே குறிப்பிட்டது போல இல்லாமல், எந்த மாதிரி விளையாட்டு பொம்மைகளை எந்த வயதில் வாங்கித் தந்தீர்கள் என்பதைக் கீழே கமென்ட் செய்யவும்

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.