கேரட் கூழ்

கேரட் கூழ்

4 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

ஏன் கேரட் கூழ்?

 • குழந்தைகளுக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் தன்மை இந்த கேரட்டிற்கு உண்டு
 • கேரட்டில் வைட்டமின்-ஏ அதிகம் உள்ளதால், கண் பார்வையை மேலும் மேம்படுத்தும்
 • பார்வைக் கோளாறுகளை வரவிடாமல் கட்டுப்படுத்தும்

 

தேவையானவை:

 • ஒரு நடுத்தர அளவிலான கேரட்
 • ஒரு சிட்டிகை சீரகத்தூள் அல்லது பட்டைத்தூள்

 

தயாரிக்கும் முறை:

 • கேரட்டை நன்றாக கழுவி, அதன் தோலை நன்றாக சீவிக் கொள்ளவும்
 • பின்பு, இந்த கேரட்டை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
 • நன்றாக நறுக்கிய இந்த கேரட் துண்டுகளை மற்றொரு சிறிய கிண்ணத்தில் வைக்க வேண்டும்
 • நீர் ஊற்றிய பிரஷர் குக்கரில் அந்த கலவையை வைத்து 2 விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும்
 • அடுப்பை அணைத்து நன்றாக சூடு ஆறிய பிறகு, கைகளால் நன்றாக மசிக்கவும். இல்லையென்றால், கேரட்டை நன்றாக மிக்ஸியிலும் வேண்டுமென்றால் அரைத்துக்கொள்ளவும்
 • சுவைக்காக இந்த கேரட் கூழுடன் சீரகத்தூளோ அல்லது பட்டைத்தூளோ ஒரு சிட்டிகை அளவு சேர்த்துக் கொள்ளவும்
 • தாய்ப்பாலை இத்துடன் குழையுமாறு சேர்த்தால், குழந்தைகளால் எளிதாக சாப்பிட முடியும்
 • பீட்ரூட் அல்லது பாலக்கீரை இந்த கலவையுடன் சேர்த்தால், ருசி மிகவும் அதிகமாகவே இருக்கும்

 

கவனிக்கவேண்டியவை:

 • கேரட் வாங்கும்போது முடிந்த வரை சுத்தமானதாகவும், புதியதாகவும் இருக்க வேண்டும். அதில் கவனம் இருக்கட்டும்
 • கேரட்டின் மேல் எந்த கறையோ, கருப்பு நிற புள்ளிகளோ இல்லாமல் இருக்க வேண்டும்
 • கேரட்டில் பீட்டா கரோட்டீன் அளவு அதிகம் உள்ளது. கரோட்டீன் இருந்தால்தான் உடலில் வைட்டமின் ஏ சத்தை உருவாக்க முடியும்

 

100 கிராம் பார்லியின் அளவில், எத்தனை சத்துக்கள் உள்ளன என்பது பின்வருமாறு:

 • கலோரிகள் – 41
 • தண்ணீர் – 88%
 • புரதச்சத்து – 0.9 கிராம்
 • மாவுச்சத்து – 9.6 கிராம்
 • சர்க்கரை – 4.7 கிராம்
 • ஃபைபர் – 2.8 கிராம்
 • கொழுப்புச்சத்து – 0.2 கிராம்

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you