பரங்கிக்காய் (பம்ப்கின்) கூழ்

cover-image
பரங்கிக்காய் (பம்ப்கின்) கூழ்

 

ஏன் பரங்கிக்காய் கூழ்?

 • உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். பரங்கிக்காயில் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது. அதே போல், வைட்டமின் ஏ, ஸி, ஈ போன்ற சத்துகளும் இதில் உள்ளன. இதை உண்பதால், மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்.
 • பரங்கிக்காயில் ஆண்டிஒக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால் கண் கோளாறை நன்றாக தடுக்கும். முகத்திற்கும், முடிக்கும் நல்ல பொலிவு கிடைக்கும்.
 • சோர்வைத் தடுத்து நல்ல சுறுசுறுப்பும் இருக்கும்

 

தேவையானவை:


ஒரு துண்டு பரங்கிக்காய்
ஒரு கப் தண்ணீர்

 

செய்முறை

 • பரங்கிக்காயை தண்ணீரால் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்
 • சுத்தப்படுத்திய பரங்கிக்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
 • துண்டுகளாக வெட்டிய பிறகு, ஆவியில் வேக வைக்கவும்.
 • காய்கறிகளை வேக வைப்பதால் ஒரு நல்ல பலன் உண்டு. குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் அடையும். அதே போல், சத்துகளும் காய்கறிகளில் வீணடையாமல் தங்கி இருக்கும்.
 • வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்த பின், பிரஷர் குக்கரில் தண்ணீர் நிரப்பி வைக்கவும்
 • குக்கரில் துண்டுகளைப் பாத்திரத்தில் வைத்து ஒரு விசில் விடவும்
 • வேகவைத்த பரங்கிக்காய் துண்டுகளை எடுத்து கையால் நன்றாக மசித்துக் கொள்ளவும்
 • உங்களுக்கு வேண்டுமென்றால், மிக்சியிலும் நன்றாக அரைத்துக்கொள்ளவும்
 • இக்கலவை கெட்டியாக இருந்தால், தாய்ப்பாலைச் சேர்த்துக் கொள்ளவும்

 

கவனிக்கவேண்டியவை:


கடைகளில் இருந்து அல்லது சந்தையில் இருந்து பரங்கிக்காய் வாங்கும்போது, ஏற்கனவே வெட்டி வைத்த காயை வாங்காதீர்கள்
இந்த உணவு எந்த வித அலர்ஜியையும் ஏற்படுத்தாது. ஆதலால், முதல் திட உணவாக நீங்கள் இதைக் குழந்தைக்குக் கொடுக்கலாம்

 

100 கிராம் பரங்கிக்காயில், எத்தனை சத்துக்கள் உள்ளன என்பது பின்வருமாறு:

 • கலோரிகள் – 49
 • புரதச்சத்து – 1.76 கிராம்
 • மாவுச்சத்து – 12.01 கிராம்
 • ஃபைபர் – 2.7 கிராம்
 • கொழுப்புச்சத்து – 0.17 கிராம்

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!