ஐந்து சிறந்த வெளிப்புற பாரம்பரிய விளையாட்டுகள்

cover-image
ஐந்து சிறந்த வெளிப்புற பாரம்பரிய விளையாட்டுகள்

 

கோடைகாலத்தில் சுற்றுலா பயணம் போக முடியாத குழந்தைகளுக்கு ஆடல், பாடல், வரைதல், பந்து விளையாடுதல் போன்ற கலைகளைக் கற்றுத் தரும் வகுப்புகளில் பெற்றோர்கள் சேர்த்து விடுவர். நன்றாக சம்பாதிக்கும் பெற்றோர்கள் இருந்தால் தமது குழந்தைகளைப் பற்பல வகுப்புகளில் சேர்த்து விடலாம். ஆனால் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர்களின் நிலை? அவர்களுக்கும் தம் குழந்தைகளைப் புத்திசாலிகளாக வளர்த்த வேண்டும். கவலை வேண்டாம்! நமது பாரம்பரிய விளையாட்டுகளில் இப்போதைய விளையாட்டுகளுக்கு நிகரான பல பலன்களும் உண்டு.

 

இதோ, குழந்தைகளுக்கான 5 வெளிப்புற பாரம்பரிய விளையாட்டுகளை நாங்கள் இங்கே விவரிக்கிறோம். விளையாடும் முறை மட்டுமல்ல, இந்த விளையாட்டுகளின் பலன்களையும் நாங்கள் விவரிக்கிறோம்.

 

கிச்சுக்கிச்சு தாம்பளம்

  • மணலைக் குவித்துக்கொண்டு, அதனுள் ஒரு கல்லையோ அல்லது சிறிய குச்சியையோ மறைத்து வைக்கவும். அதற்குபின், அது எந்த இடத்தில் மறைக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
  • இந்த ஆட்டத்தை விளையாடுவதின் பலனாக ஒருவனின் துப்பறியும் ஆற்றல், யோசிக்கும் திறன் மற்றும் அறிவுத்திறன் மேலும் மேம்படும்.

 

பச்சைக்குதிரை

  • ஒருவர் குனிந்து நிற்க, மற்றவர்கள் அவரைத் தாவிச் செல்வர். குனிந்திருப்பவர் போகப்போக உயரத்தைக் கூட்டுவார். அதற்கேற்றது போல், மற்றவர்கள் தாவ வேண்டும்.
  • இவ்விளையாட்டின் பலன் குழந்தைக்கு உடல் வலிமை மேம்படும். உயரமாக குதிக்கும் திறன் வளரும். வளர்ச்சியும் அதிகமாகும்

 

கயிறாட்டம்

  • கயிறை மேலிருந்து கீழ் சுற்ற, அதற்கேற்ப குதிக்க வேண்டும். கயிற்றில் கால் மாட்டிக் கொள்ள கூடாது என்பது தான் இந்த விளையாட்டின் கரு.
  • இந்த ஆட்டத்தை விளையாடுவதின் மூலம் சரியான முறையில் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியும். உடல் உறுப்புகள் நன்றாக செயல்படும்.பெண்களின் கருப்பை வலுவாக இருக்கும். உடலில் உள்ள கழிவுகளும் சரியாக வெளியேறும்

 

கிட்டிப்புள்

  • ஒரு பெரிய குச்சியைப் பயன்படுத்தி நுனி சீவிய சிறிய குச்சியை அடிப்பதே இந்த விளையாட்டின் வழிமுறை.
  • இதை விளையாடுவதன் மூலம், குழந்தையின் குறித்திறன் மேம்படும். சிக்கலைத் தீர்க்கும் சிந்தனையும் வலுவாகும்.

 

பம்பரம்

  • இந்த விளையாட்டும் கிட்டிப்புள் போன்று குறி பார்த்து விளையாடும் விளையாட்டு. பம்பரத்தை ஒரு வட்டத்தில் வெளியேற்றி, கயிற்றைப் பயன்படுத்தி அதனை சுற்றி ஆட்டுவிக்க வேண்டும்.
  • குழந்தையின் குறித்திறன் மேம்படும். சிக்கலைத் தீர்க்கும் சிந்தனையும் வலுவாகும். அதுமட்டுமல்லாது, பொறுமை குணத்தை வளர்த்தும். சுறுசுறுப்பாக போட்டியை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்தும்.

 

இப்படி ஒவ்வொரு விளையாட்டும் நமக்கு ஒவ்வொரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்.  உங்களுக்கும் இப்படி ஏதேனும் வெளிப்புற பாரம்பரிய விளையாட்டு தெரிந்திருந்தால், மறக்காமல் ஷேர் செய்யவும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!