குழந்தைகளைக்கு ஏதேனும் ஏற்ப்பட்டால் முதலில் ஓடி வர தாய் இருக்கிறாள். குழந்தைக்கு பாலூட்ட, குளிப்பாட்ட, அழகாக்க, தூங்க வைக்க… அப்படி எல்லா வேலையும் தாய்தான் செய்கிறாள். ஆனால், தந்தைக்கான கடமை என்று ஒன்று உள்ளது. குழந்தைக்கு முதன்முதலில் ஒரு தந்தை கற்றுத் தர வேண்டிய பாடம்? அது என்னவென்று பல தந்தைக்கும் தெரியாது.
பின்வரும் குணங்களை ஒரு தந்தைதான் குழந்தைக்குக் கற்றுத் தர வேண்டும், அந்த வாழ்க்கை பாடம் என்னவென்று பின்வருமாறு:
எல்லோரையும் மதிக்கவும்:
- மற்றவர்களை எப்படி மதிப்பது என்ற பாடம் ஒரு தந்தை தன் குழந்தைக்கு முதலில் கற்றுத் தர வேண்டும்.
- அதிலும், ஒரு ஆண் குழந்தையாக இருந்தால் மற்ற பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று மறக்காமல் கற்றுத் தர வேண்டும்.
- தன் தந்தை தனது தாயுடன் மற்றும் தன் தாய் தனது தந்தையுடன் எப்படி பேசி பழகுகின்றார் என்பதை குழந்தை நன்றாக கவனிக்கின்றான். அப்படியே அக்குழந்தை பார்த்து பழகி மற்றவர்களுடன் பேச ஆரம்பிப்பார்.
- ஆதலால், தனது தாயும் தந்தையுமே முதல் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும்
- வீட்டில் ஏதேனும் ஒரு செயலைச் செய்யவோ அல்லது ஒரு நிகழ்வை நடத்தவோ, பெற்றோர்கள் சமமாக பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும்.
- அந்த குணத்தைக் குழந்தைக்கும் சரிவர கற்றுத்தர வேண்டும். எப்போதும் தயங்கி இருக்கக் கூடாது. வேலை செய்யாமல் ஓடி ஒளியவும் கூடாது.
- செயலில் தவறு நடந்தாலும் தவறில்லை. சரியாக பொறுப்பேற்று அக்காரியத்தை நிகழ்த்த வேண்டும்.
- பொறுப்பை ஏற்று நடத்த எப்போதும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
உழைக்க வேண்டும்
- எந்த செயலையும் ஏனோதானோ என்று செய்யாமல் நன்றாக உழைத்து அக்காரியத்தை முடிக்க வேண்டும்.
- உழைப்பின் பெருமையை ஒரு தந்தை தன் குழந்தைக்கு நன்றாக உணர்த்த வேண்டும்.
- தாயும் தந்தையும் சேர்ந்து உழைப்பதால் தான், குழந்தையால் நன்றாக வாழ முடிகிறது. குடும்பம் செழிப்பாக இருப்பதற்கு, நல்ல உழைப்பே காரணம் என்று குழந்தைக்கு போதிக்க வேண்டும்
- தாயின் உழைப்பை வீட்டிலும், தந்தையின் உழைப்பை அவரின் ஆபீஸிலும், குழந்தைக்கு நேரடியாக காட்டிக் கொடுப்பது நல்லது.
விடாமுயற்சியுடன் செயல்படவும்
- வெற்றி தோல்வி முக்கியமில்லை. ஒரு போட்டியில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்ற எண்ணமே குழந்தைக்கு இருக்க வேண்டும்.
- ‘நன்றாக பங்கேற்று சிறப்பாக செயல்படவும்’. இந்த பாடமே ஒரு தந்தை தன் குழந்தைக்கு போதிக்க வேண்டியது
- தோல்வியைக் கண்டு தளர வேண்டாம். வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள் மட்டும்தான் என்ற உண்மையை குழந்தைக்கு போதிக்கவும்
பதற்றமில்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கவும்
- வாழ்வில் எத்தனை சோகம் இருந்தாலும், மகிழ்ச்சிதான் முக்கியம் என்ற மந்திரத்தைக் குழந்தைக்கு மறக்காமல் போதிக்க வேண்டும்.
- எதற்கும் பதற்றமும் கோபமும் கூடாது. ‘பதறாத காரியம் சிதறாது’ என்ற உண்மையை குழந்தைக்குப் போதிக்கவும்.
‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’, என்ற பழமொழியை மனதில் வைத்துக்கொண்டு, இந்த ஐந்து தாரக மந்திரங்களை உங்கள் குழந்தைக்கு மறக்காமல் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும் பருவத்திலேயே பகிர்க்கவும்.
#babychakratamil