வீட்டிலேயே உடனடி கர்ப்ப பரிசோதனை

cover-image
வீட்டிலேயே உடனடி கர்ப்ப பரிசோதனை

மாதவிடாய் சுழற்சி சரியான நேரத்தில் வராமல் தவறிப்போனதா? வாந்தி மற்றும் மயக்கமும் இருக்கிறதா? உடனே நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. இதை உறுதிப்படுத்த நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டி வரும். ஆனால், மருத்துவரைச் சந்திக்கும் முன் வீட்டிலேயே எப்படி உங்கள் கர்ப்பத்தை உறுதிப் படுத்துவது?

 

உடனடி எச்ஸிஜி கர்ப்ப பரிசோதனை (HCG pregnancy test) என்ற கருவிப்பெட்டியை மருந்து கடையிலிருந்து வாங்கவும்.

 

இந்த பரிசோதனை செய்வதோடு நாம் கர்ப்பமா இல்லையா என்று வீட்டிலேயே எளிதில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

 

சிலருக்கு இந்த பரிசோதனை சரியாக எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு குழப்பம் இருக்கும். இந்த கட்டுரை அவர்களுக்கே!

 

உடனடி எச்ஸிஜி கர்ப்ப பரிசோதனை


பெண்ணின் உடலில் கரு உருவாகும்போது, HCG என்ற சுரப்பி அதிகமாக சுரக்கும். இந்த HCG அளவை இந்த பரிசோதனை மூலமாக கண்டறியலாம். HCG பாஸிடிவ் என்று வந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

 

முதலில் கவனிக்கவேண்டியவை

 • பரிசோதனை செய்வதற்கு முன், எக்ஸ்பைரி தேதியை மறக்காமல் கவனிக்கவும்.
 • பரிசோதனையைத் தொடங்குவதற்கு முன், கருவிப்பெட்டியின் உள்ளே உள்ள செயல்முறை குறிப்பையும் மறக்காமல் படிக்கவும்


செய்முறை

 • காலையில் எழுந்தவுடன் முதன்முதலில் வெளியேற்றும் சிறுநீரை ஒரு சுத்தமான உலர்ந்த கப்பில் எடுத்துக் கொள்ளவும்
 • இந்த ஸ்ட்ரிப்பின் நடுபாகத்தை தொட்டு விடாதீர்கள்
 • இந்த பரிசோதனையுடன் கிடைக்கின்ற ட்ராப்பரை பயன்படுத்தி, ட்ராப்பரால் சிறுநீரை ஸ்ட்ரிப் மீது ஊற்றவும்
 • 5-10 நிமிடம் வரை காத்திருக்கவும். அதற்குள் உங்களுக்கு முடிவு தெரிந்துவிடும்
 • ஆனால் 30 நிமிடம் வரை முடிவு தெரிய காத்திருக்க வேண்டாம்

 

பரிசோதனையின் முடிவு

 • இந்த ஸ்ட்ரிப்பில் ரெண்டு சிவப்பு கோடுகள் தெரிந்தால், HCG பாஸிடிவ் என்று அர்த்தம். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று உறுதியாக தெரிய வரும். கோடுகள் லேசாக இருந்தாலும் உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்
 • ஒரே ஒரு சிவப்பு கோடு மட்டும் தெரிந்தால், HCG நெகடிவ் என்று அர்த்தம். நீங்கள் கர்ப்பம் தரிக்கவில்லை என்று உறுதியாக தெரிய வரும்

 

தவறான முடிவுகள்


சில நேரங்களில் இந்த பரிசோதனை தவறான முடிவையும் குறிக்கலாம். அவை என்னவென்று காணவும்

 • கருவில் கட்டி இருந்தால், HCG சுரக்கப்படும்
 • குழந்தையின்மை சிகிச்சையிலிருந்தாலும் HCG சுரக்கப்படும்
 • குழந்தை பிறந்த பிறகும் கருச்சிதைவுக்கு பிறகும் HCG சுரக்கப்படும்
 • இந்த பரிசோதனை பெட்டியில் குறை இருக்க வாய்ப்புண்டு
 • இந்த பரிசோதனையை மிக விரைவிலேயே எடுத்திருக்கலாம்

 

ஆதலால், முடிவில் மருத்துவரிடமிருந்து மறக்காமல்  ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!