4 May 2019 | 1 min Read
Dr. Mrinalini
Author | 86 Articles
இந்த கேள்விக்குப் பதில் நம் புராணங்களே கூறும். மகாபாரதத்தில் ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணன் சுபத்ராவிடம் ஒரு கதை கூறிக்கொண்டு இருந்தார். அக்கதையில் அவளின் மகனான அபிமன்யுவைக் குறித்தும் அவன் எப்படி சக்ரவியூகத்தில் சிக்கிக் கொள்கிறான் என்றும் விவரித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சுபத்ரா தூங்கி விட்டாள். ஆனால் அவள் கருவிலிருந்த அபிமன்யுவோ, அந்த கதையைக் கேட்டுக் கொண்டிருந்ததாக புராணத்தில் உள்ளது. அதைபோலவே, பிரகலாதன் கருவில் இருக்கும்போதே விஷ்ணுவின் பெருமையை நாரதர் மூலம் அறிந்ததால்தான், சிறு வயதிலிருந்தே பிரகலாதன் தீவிர விஷ்ணு பக்தன் ஆனான்.
இக்கதைகளின் மூலம் நாம் அறிவது ஓரிரு செய்திகள்தான். கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு காது கேட்கும். கருவிலிருக்கும்போதே குழந்தையின் குணம் தீர்மானமாகிவிடும்.
இந்த கதைகளை மனதில் வைத்துக்கொண்டு, எல்லா தாய்மார்களும் தம் கருவிலிருக்கும் குழந்தையுடன் பேசிக் கொண்டிருப்பதையும், கதை சொல்வதையும் நாம் காண்கிறோம். இது வெறும் புராணம் மட்டுமல்ல. விஞ்ஞானமும் கலந்திருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகம் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தால், பிற்காலத்தில் குழந்தையும் அதிகம் பாட்டு கேட்பான். அதே போல, கர்ப்பிணிகள் அதிகம் புத்தகம் படித்திருந்தால், குழந்தையும் அதிகம் புத்தகம் படிப்பான். ஆதலால்தான், கர்ப்பிணிகள் பெரிதும் கோபப்படவோ பதற்றப்படவோ கூடாது என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.
ஆமாம். ஆனால் தன் தாயின் குரலை மட்டும்தான் அடையாளம் காண முடியும்.
வெளிப்புற குரல்கள் அதிகமாக கேட்காது. காரணம், கருவிலுள்ள குழந்தையைச் சுற்றி பற்பல அடுக்குகளும், பனிக்குட நீரும் உள்ளன. ஆதலால் வெளிப்புற குரல்கள் குறைவாகவே கேட்கும். கருவில் குழந்தையின் இதய துடிப்பு அதிகமாகும்போதும் வயிற்றில் உதிக்கும்போதும், குழந்தை உங்களை கவனிக்கிறார் என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
A