பார்லி கஞ்சி

cover-image
பார்லி கஞ்சி

 

ஏன் பார்லி கஞ்சி?

 • பார்லி என்பது ஃபைபர் நிறைந்த உணவாகும். ஆதலால் குடல் சார்ந்த ஏதேனும் கோளாறு இருந்தால், இந்த கஞ்சியை குழந்தைக்கு அளிக்கவும். நல்ல விதமான விளைவுகளை உடனே காணலாம்.
 • எலும்புகளும் நல்ல தெம்பாக இருக்கும்
 • ஆதலால், முதல் திட உணவாக குழந்தைக்கு இந்த உணவை ஊட்டலாம்.

 

தேவையானவை:

 • 1 டேபிள்ஸ்பூன் பார்லி
 • 2 கப் தண்ணீர்

 

தயாரிக்கும் முறை:

 • பார்லியில் 2 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்
 • பிறகு, அந்த பார்லியை நன்றாக ஆறவைத்து அதற்கு பின் மசித்துக் கொள்ளவும்
 • மசித்தப் பிறகு, இந்த பார்லி கலவையை நன்றாக வடிகட்டி கொள்ளவும்
 • பிறகு சிறிது அளவு வெந்நீர் இந்த கலவையுடன் சேர்த்து அளிக்கவும்
 • குழந்தை வளர்ந்த பிறகு, இந்த கலவையுடன் நீங்கள் பனங்கல்கண்டு அல்லது வெல்லம் சேர்த்து குழந்தைக்கு ஊட்டலாம். சர்க்கரை வேண்டாம்.


கவனிக்கவேண்டியவை:

 • உமி நீக்காத முழு பார்லி மற்றும் உமி நீக்கப்பட்ட பார்லி, இவ்விரண்டையுமே நீங்கள் குழந்தைக்குத் கொடுக்கலாம்
 • உமி நீக்காத முழு பார்லி அதிகம் கடைகளில் எளிதில் கிடைக்காது. ஆனால், உமி நீக்கப்பட்ட பார்லி கடைகளில் எளிதில் கிடைக்கும்.
 • இந்த பார்லி கஞ்சி எளிதில் ஜீரணிக்கக் கூடியவை
 • அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை இந்த பார்லி உணவில் கிடையாது. ஆதலால், தாய்ப்பால் நிறுத்தியவுடன் முதல் உணவாக இந்த பார்லி கஞ்சியைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்
 • இதில் வைட்டமின்கள், தாதுச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன.

 

100 கிராம் பார்லியின் அளவில், எத்தனை சத்துக்கள் உள்ளன என்பது பின்வருமாறு:

 • தண்ணீர் - 9.44 கிராம்
 • புரதச்சத்து - 12.5 கிராம்
 • மாவுச்சத்து - 73.5 கிராம்
 • இரும்புச்சத்து - 3.6 கிராம்
 • ஃபாஸ்ஃபோரஸ் - 264 மில்லிகிராம்
 • ஜின்க் - 2.77 மில்லிகிராம்
 • தையாமின் - 0.646 மில்லிகிராம்
 • நியாசின் - 4.6 மில்லிகிராம்
 • ஃபோலேட் - 19 மியூகிராம்
 • வைட்டமின் ஈ - 0.57 மில்லிகிராம்
 • எனெர்ஜி - 354 கிலோகலோரி
 • லிப்பிட் - 2.3 கிராம்
 • கால்ஷியம் - 33 மில்லிகிராம்
 • மெக்னீசியம் - 133 மில்லிகிராம்
 • பொட்டாசியம் - 453 மில்லிகிராம்
 • காப்பர் - 0.49 மில்லிகிராம்
 • ரிபோஃபிலேவின் - 0.285 மில்லிகிராம்
 • வைட்டமின் பி6 - 0.318 மில்லிகிராம்
 • வைட்டமின் ஏ - 22 IU
 • வைட்டமின் கே - 2.2 மில்லிகிராம்

 

#babychakratamil #babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!