குழந்தையுடன் சேர்ந்து தூங்குவது சரியா?

குழந்தையுடன் சேர்ந்து தூங்குவது சரியா?

4 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

குழந்தையுடன் சேர்ந்து தூங்குவது சரியா? அப்படி எத்தனை நாள் வரை குழந்தையுடன் சேர்ந்து தூங்கலாம் என்று இந்த சந்தேகம் உலகில் உள்ள எல்லா தாய்மார்களுக்கும் வரும். அதனைக் குறித்து கேள்வி-பதில் முறையில் நாம் விவரமாக காணலாம்.

 

குழந்தையுடன் சேர்ந்து தூங்குவது சரியா?

சரிதான்

குழந்தையுடன் சேர்ந்து தூங்குவதன் பயன் என்ன?

 

 • குழந்தைகளுடன் பெற்றோர்கள் சேர்ந்து தூங்கும்போது, குழந்தைகள் தாம் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்ற ஒரு நம்பிக்கை முளைக்கிறது.
 • அவர்களின் தன்னம்பிக்கையும் அதிகமாக வாய்ப்புள்ளது.
 • தாம் தனியாக இல்லை. தனது பெற்றோர்களுக்கு தன் மீது அதிக பாசமும் அக்கறையும் இருக்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும்.
 • ஆதலால், குழந்தைகளும் நாளடைவில் நெருக்கமாக பெற்றோருடன் பழகுவர்.

 

சிலர் குழந்தையுடன் சேர்ந்து தூங்கினால் அபாயம் ஏற்படும் என்று கூறுகின்றனர். அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா?

 

 • சில ஆய்வுகள் அப்படி கூறுவது உண்மைதான். ஆனால் அது மிகமிக அரிதானது. சிட்ஸ் (சடன் இன்ஃபன்ட் டெத் சிண்றோம்) அதாவது திடீர் குழந்தை மரணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதே ஆய்வின் முடிவு.
 • மிகவும் அரிதான சில நேரங்களில் மட்டும்தான், பெற்றோர்கள் தம்மை அறியாமல் குழந்தையின் மீது புரண்டு விடுகின்றனர். அப்படி நடக்கும்போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் . அதனால் தான் மரணமும் ஏற்படுகின்றது.
 • எந்த பெற்றோரும் இப்படி ஆழ்ந்து தூங்க மாட்டார்கள். அதனால், நீங்கள் குழந்தையுடன் சேர்ந்தே தூங்கலாம். தவறில்லை.
 • வேண்டுமென்றால், உங்களின் படுக்கைக்கு பக்கத்தில் ஒரு குட்டிப் படுக்கையோ அல்லது தொட்டிலையோ வைத்துக் கொள்ளலாம்.
 • உங்கள் படுக்கையறையில் அவ்வளவு இடம் இல்லை என்றால் நீங்கள் உங்களுடனே குழந்தையைத் தூங்க வைக்கலாம்.
 • முடிந்தவரை நீங்களே கவனமாக குழந்தையுடன் தூங்கவும். அவ்வளவுதான்.

 

குழந்தையுடன் சேர்ந்து தூங்கும்போது ஏதேனும் தடையோ அசவுகரியமோ உள்ளதா?

 

 • இது ஒரு தனிப்பட்ட கேள்வி. அசவுகரியம் இருக்கிறதா இல்லையா என்று அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும்
 • உங்களின் கூடவே குழந்தை உறங்கினால், அதன் அசைவுகளில் ஒரு கவனம் இருக்கும். குழந்தை அழுகிறதா இல்லையா என்று கவனமாக இருக்கலாம். பசியால் அழுதால் உடனே பாலூட்டவும் வழியுண்டு.
 • அசவுகரியம் என்னவென்றால், செக்ஸ் வாழ்வில் தடை ஏற்படலாம். அதே போல, பெற்றோர்களால் ஆழ்ந்து தூங்க முடியாது. குழந்தையைக் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் தூங்கும்போதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
 • ஆதலால், உங்களுக்கு எது சவுகரியமோ, எது முக்கியமோ அதற்கேற்றவாறு நடந்து கொள்ளவும்.

 

குழந்தை எந்த வயது வரை உங்களுடன் சேர்ந்து தூங்கலாம்?

 

 • குழந்தை தானாகவே எப்போது தனிமையை விரும்புகிறானோ, அந்த நாள் வரை குழந்தையுடன் நீங்கள் சேர்ந்து தூங்கலாம்.
 • நீங்களே குழந்தையைத் தனியறையில் போய் தூங்க சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்
 • பொதுவாக சில குழந்தை ஏழு அல்லது பத்து வயது வரையே, பெற்றோருடன் சேர்ந்து தூங்க விரும்புகின்றனர்.
 • சில குழந்தை தனியாக தூங்கும்போது பயம் ஏற்படும்.  ஆதலால், அதையும் மனதில் வைத்துக்கொண்டு, உங்கள் குழந்தைக்கு எது சரியோ, அவ்வாறே நீங்கள் அணுகலாம்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you