சவ்வு துடைத்தல் என்றால் என்ன?
சவ்வு துடைத்தல் என்பது பிரசவ வலியை ஊக்குவிக்கும் வழியாகும்.
எப்படி சவ்வு துடைப்பது?
- டாக்டர் சுத்தமான கையுறைகளை மாட்டிக் கொண்டு, யோனிகுழாய் வழி கருப்பையில் விரலைவிட்டு கருசவ்வுப் பையின் சவ்வை விரலால் சுழற்றி துடைப்பார்.
- இப்படி செய்வதால் சவ்வை சிறிதாக நீக்கிவிட முடிகிறது
- பிரசவ வலிக்கு காரணம் ப்ரோஸ்ட்டாகிளான்டின் என்கிற சுரப்பியாகும். பிரசவத்திற்காக கருப்பையை சுருங்க வைப்பதும் இதே சுரப்பிதான்
- முதலில் உங்கள் கருப்பைவாய் விரிந்துள்ளதா என்று பரிசோதிப்பார். விரிந்திருந்தால், நேராக சவ்வைத் துடைத்து விடுவார்.
- கருப்பைவாய் விரியாமல் இருந்தால், டாக்டர் மெதுவாக நீட்டி கருப்பைவாயை மசாஜ் செய்வார். இதனால் கருப்பைவாய் மென்மையாகி விரிந்து கொடுக்கும்.
எப்போது டாக்டர் இந்த சவ்வு துடைத்தல் முறையை ஆலோசனையாக கொடுப்பார்?
- பிரசவ நாளைக் கடந்திருந்தால், முக்கியமாக இந்த முறையை 39 முதல் 41 வாரத்திற்குள் செய்தாக வேண்டும்
- இயற்கையான முறையில் பிரசவ வலி வருவதற்கு, இது சிறந்த வழியாகும்
- பிரசவ வலியை ஊக்குவிக்கும் மருந்தை அருந்த விருப்பமில்லையென்றால், இந்த முறையைத் தேர்ந்தெடுக்கலாம்
சவ்வு துடைத்தலுக்கு நீங்கள் உங்களை எப்படி தயார் செய்து கொள்வது?
- நீங்கள் குறிப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை.
- டாக்டரின் கிளினிக்கில் பத்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும்
- சாதாரண பரிசோதனை போலவே நீங்கள் மேசையில் படுத்துக் கொள்ளவும்
- நன்றாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக விடவும்
சவ்வு துடைத்தல் பாதுகாப்பானதா?
- பல ஆய்வுகளும் எந்த வித அபாயங்களையும் தெரிவித்ததில்லை.
- எந்த கர்ப்பிணிகள் சவ்வு துடைத்தலை ஆதரிப்பதில்லையோ, அவர்கள் முடிவில் சிசேரியன்தான் தேர்ந்தெடுக்கிறார்.
- ஆதலால், இந்த முறை பாதுகாப்பானதுதான்
- பற்பல கர்ப்பிணிகளில் ஒரு தடவைதான் இந்த முறையை டாக்டர்கள் கையாண்டனர். இதன் விளைவு நன்றாகவே உள்ளது
சவ்வு துடைத்தவுடனே பிரசவ வலி வருமா?
- உடனே வராது. ஆனால் சவ்வு துடைத்த இரண்டு நாட்களுக்குள் பிரசவ வலி இயற்கையாகவே வந்துவிடும்.
- இரண்டு நாட்களில் எந்த வலியும் வரவில்லை என்றால், மருந்து கொடுத்து வலியை ஊக்குவிக்கவோ அல்லது செசேரியனோ டாக்டர் தேர்ந்தெடுப்பார்.
- என்னவாக இருந்தாலும் 42-ஆம் வாரத்தைக் கடக்க கூடாது.
- 42-ஆம் வாரத்தைக் கடந்தால், குழந்தைக்கு தேவையான அளவு பிராணவாயு, நஞ்சுக்கொடியால் அளிக்க முடியாமல் போய்விடும். அதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்
- ஆதலால், அதற்கு முன்னே டாக்டர் பிரசவ முறையைத் தீர்மானிக்க வேண்டும்
இந்த முறையில் கவனிக்க வேண்டியவை ஏதேனும் உள்ளதா?
- ஆம். இந்த முறையை நல்ல அனுபவமுள்ள டாக்டர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும்
- சவ்வு துடைத்த பிறகு சிறிது உதிரப்போக்கு அல்லது சுளுக்கும் வர வாய்ப்புள்ளது.
- உதிரப்போக்கும் வலியும் அதிகமாக இருந்தால் மறக்காமல் மருத்துவமனைக்குச் செல்லவும்
- உங்களால் இந்த அசவுரியத்தை சகித்துக்கொள்ள முடிந்தால், நீங்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்கலாம்
சவ்வு துடைத்தல் யாருக்கு கூடவே கூடாது?
- குழந்தையின் தலை கீழ் பார்த்து இல்லாமல் இருப்பவர்கள்
- 40 வாரம் கர்ப்பமோ அல்லது அதற்கு மேல் தாண்டுதல்
- யோனிக்குழாயில் தொற்று நோய்
- சவ்வுகளில் கீறல்
- பனிக்குடம் உடைந்திருத்தல்
- நஞ்சுக்கொடி கருப்பை வாயின் கீழ்ப்பகுதியில் இருத்தல்
உங்களுக்கு எந்த கோளாறும் இல்லையென்றால் முடிந்தவரை இயற்கை முறையில் வலி வந்து பிரசவிப்பதுதான் நல்லது. உங்கள் டாக்டரிடம் மறக்காமல் இந்த முறை உங்களுக்கு சரி வருமா என்று ஒன்றுக்கு இரண்டு தடவை கேட்டு அதற்கேற்ப நடந்துகொள்வது நல்லது.
பேனர் படம்: mindfulmamma
#babychakratamil