கர்ப்ப காலத்தில் என் குழந்தையின் அசைவை எப்போது அறிய முடியும்?
- கர்ப்ப காலத்தில் குழந்தையின் அசைவை 18 -ஆம் வாரத்தில் அறிய முடியும்.
- முதல் பிரசவமாக இருந்தால் 20 – ஆம் வாரத்தில் அறிய முடியும்.
- ஆனால் அடுத்த பிரசவம் முதல், 16 – ஆம் வாரத்திலேயே அறிகுறிகளை அறிந்து விடலாம்
- பிரசவ காலம் நெருங்க நெருங்க, மணிக்கு 16 முதல் 45 அசைவுகளை உணரலாம்
குழந்தையின் அசைவு எண்ணிக்கை குறைந்து விட்டால், அதற்கு அர்த்தம் என்ன?
- அசைவு எண்ணிக்கையில் ஏதேனும் மாறுதல் வந்தால் உடனே நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகவும்
- 24-ஆம் வாரத்தில் – 24 வாரத்திற்குள்கருவிலுள்ள குழந்தையின் எந்தவித அசைவுகளையும் உணர முடியவில்லையென்றால், மருத்துவரை அணுகவும். ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்னும் எடுக்க வேண்டிவரும்
- 24 -28 வாரங்கள் – ஒரு விரிவான பரிசோதனை செய்ய வேண்டிவரும். உங்களின் ரத்த அழுத்த பரிசோதனை, கருப்பையின் அளவு, சிறுநீரில் புரதத்தின் அளவு முதலியவற்றை கண்டறிய வேண்டும். ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்னும் எடுக்க வேண்டிவரும்.
- 28 வாரங்களுக்கு மேல் – கருவிலுள்ள குழந்தையை பரிசோதனை செய்ய வேண்டிவரும். 20 நிமிடங்களுக்கு கருவிலுள்ள குழந்தையின் இதய துடிப்பைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்னும் எடுக்க வேண்டிவரும். பனிக்குடத்தின் அளவு, கருப்பையின் அளவு, குழந்தையின் வளர்ச்சி, பிரசவ கோளாறு ஆகியன கண்டறியலாம்.
குழந்தையின் அசைவில் கோளாறு என்று எப்போது கவனிக்க வேண்டும்?
- இரு மணிநேரத்திற்குள் நீங்கள் பத்துக்கு குறைவான அசைவுகளை உணர்ந்தால்
- வெளிப்புற சத்தத்திற்கு குழந்தை அசைவுகளால் பதிலளிக்கவில்லை
- அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு குழந்தையின் அசைவு எண்ணிகையில் குறைவு
என் இரவில் குழந்தை கருவிலிருந்து உதைக்கிறது?
- காலை நேரங்களில் வெளிப்புற சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் வெளிப்புறத்தில் மிகவும் மெளனமான சூழலாக இருக்கும்.
- ஆதலால், குழந்தை காலால் உதைத்து தன் முக்கியத்துவத்தை உறுதி செய்கிறான்.
என் குழந்தையின் அசைவை நான் எப்போது அறிய வாய்ப்பு இல்லை?
- நீங்கள் மிகவும் பிஸியாக இருந்தால், உங்கள் குழந்தையின் அசைவை உணர முடியாமல் போகலாம்
- நஞ்சுக்கொடி கர்ப்ப பையின் முன்னிலையில் இருந்தால், குழந்தையின் அசைவை உணர முடியாமல் போகலாம்
- குழந்தையின் பின்புறம் கர்ப்ப பையின் முன்னிலையில் இருந்தால், குழந்தையின் அசைவு குறைவாக இருக்கும்
ஒவ்வொரு நாளும் குழந்தையின் உதையை நான் எண்ண வேண்டுமா? எந்த வேளையில் எண்ண வேண்டும்?
கீழ்க்கண்ட வேளைகளில் நீங்கள் குழந்தையின் உதையை எண்ணலாம்.
- சாப்பாடு உண்ட பிறகு, அசைவை உணரலாம்
- நீங்கள் தூங்கும்போது அசைவை உணரலாம்
- குழந்தை சுறுசுறுப்பாக இருந்தாலும் அசைவை உணரலாம்
வேண்டுமென்றால் ஒரு கால அட்டவணையை தயாரித்து, குழந்தையின் அசைவை குறிப்பிடலாம்.
என் குழந்தையின் அசைவு குறைந்துவிட்டால், வீட்டில் நான் என்ன செய்யலாம்?
- சாந்தமாக சரியான முறையில் உட்காரவும்
- குளிர்பானம் அருந்தி, கால்களை ரெண்டும் மேலே தூக்கி வைக்கவும். குளிரும், சர்க்கரை அளவும் குழந்தையை அசைக்க வைக்கும்
குழந்தை என் கருவிலிருந்து எப்படி உடல் ரீதியாக பதிலளிக்கும்?
- உதைத்தல்
- விக்கல்
- உருளல்
- குத்தல்
குழந்தையின் அசைவை அறிவதே மிகவும் முக்கியமான மைல்கல்லாகும். குழந்தையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதே அதன் அசைவுகள்தான். ஆதலால், கர்ப்பிணிகள் அந்த அசைவை நன்றாக உணர்ந்து மகிழ்வீர்!
நீங்கள் உங்கள் குழந்தையின் அசைவை எப்போது உணர்ந்தீர்கள்? உங்கள் கணவனும் அந்த அசைவை உணர்ந்தார்களா? மறக்காமல் உங்கள் அனுபவத்தை ஷேர் செய்யவும்…
#babychakratamil