• Home  /  
  • Learn  /  
  • எதிர்ப்பாராமல் கர்ப்பம் ஆகிவிட்டீர்களா? – என்ன செய்வது?
எதிர்ப்பாராமல் கர்ப்பம் ஆகிவிட்டீர்களா? – என்ன செய்வது?

எதிர்ப்பாராமல் கர்ப்பம் ஆகிவிட்டீர்களா? – என்ன செய்வது?

6 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

எதிர்ப்பாராமல் கர்ப்பம் ஆகிவிட்டீர்களா? என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்களா? என்னதான் தேவையான பாதுகாப்பு முறைகளை எடுத்திருந்தாலும், சில நேரம் அவை வேலைக்கு ஆகாது. கர்ப்ப பரிசோதனை செய்து நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று கண்டறிந்தால், சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். சிலருக்கு கவலைக்குரியாதாகவும் இருக்கலாம்.

 

இந்த செய்தி மகிழ்ச்சியைத் தந்தால் சரி. ஏன் சிலருக்கு சோகத்தைக் கொடுக்கிறது?

 

  • கர்ப்பம் தரிப்பது என்பது ஒருவித தயாரிப்பாகும். தம்பதியர் இருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், பணரீதியாகவும் தயாராக வேண்டும்.
  • சில பெண்கள் தன் வேலையை விட முடியாத நிலையில் இருப்பார்கள். வேலை ரீதியாகவும் அதிக பொறுப்புகள் இருக்கலாம்.
  • சிலர் திருமணம் முடிந்து சில காலம் இடைவெளி வேண்டும் என்று எண்ணுவார்கள்
  • கணவனின் பங்கும் மிகவும் முக்கியமானது. மனரீதியாகவும், பணரீதியாகவும் தந்தையாக அவர் தயாரா என்பது தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய விவரம்.

 

எதிர்ப்பாராமல் கர்ப்ப விவரத்தை அறிந்தவுடன், கணவனும் மனைவியும் பரஸ்பரம் கேட்க வேண்டிய கேள்விகள் என்ன?

 

  • நாம் இருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், பணரீதியாகவும் ஒரு குழந்தையின் வருகைக்கு தயாரா?
  • ஏதேனும் மனைவியின் உடலில் கோளாறு இருக்கிறதா?
  • வேலையையும், பிரசவத்திற்கு பின் குழந்தையையும் எப்படி கையாளுவது?
  • உதவிக்கு பெரியவர்கள் இருக்கிறார்களா? இல்லையெனில், எல்லாம் சுயமாக தான் செய்ய வேண்டுமா?
  • உடலுறவில் ஏதேனும் மாறுதல்கள் வருமா?
  • புதுவித பொறுப்புகளை ஏற்றெடுக்க நாம் இருவருமே தயாரா?

 

இந்த கேள்விகளுக்குத் தெளிவான பதில் தீர்மானித்த பிறகே,  அவர்கள் இருவரும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

 

டாக்டரை எப்போது மற்றும் எப்படி அணுக வேண்டும்?

 

  • உங்கள் கர்ப்ப பரிசோதனையில் நேர்மறையாக முடிவு வந்தால், நீங்களும் உங்கள் கணவரும் 1-2 நாட்களுக்குள் தீர்மானம் எடுக்கவும்
  • அடுத்து டாக்டரைச் சென்று நீங்கள் இருவருமே சந்தியுங்கள்.
  • டாக்டரும் தான் விரிவான பரிசோதனை செய்து, முடிவைக் கூறுவார். கர்ப்பம் தரிக்க பெண் உடல்ரீதியாக தயாரா; ஏதேனும் கோளாறுகள் இருக்கிறதா; அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக விவரிப்பார்.
  • உங்கள் தீர்மானத்தைத் டாக்டரிடம் தெரிவிக்கவும்.
  • கர்ப்பம் தரிக்க தயாரென்றால், கர்ப்பிணி தான் என்ன செய்ய வேண்டும்; எதைச் செய்யக் கூடாது; உண்ணும் முறை, செய்யவேண்டிய பரிசோதனைகள், என்ற எல்லா விவரங்களையும் தெளிவாக கூறுவார்.
  • ஒருவேளை நீங்கள் கர்ப்பம் தரிக்க தயாரில்லை என்றால், டாக்டரிடம் தெரிவிக்கவும். கருக்கலைப்பை பெண்ணின் உடல் தாங்குமா? ஏதேனும் கோளாறுகள் பிற்காலத்தில் ஏற்பட வாய்ப்புண்டா? அவளுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு முறை என்ன? கருக்கலைப்பின் நன்மை தீமை ஆகியவற்றை டாக்டர் தெளிவாக விவரிப்பார்.
  • அதற்கு பின், அந்த தம்பதியரின் தீர்மானத்தின்படி, டாக்டர் தேவையானவை செய்வார்.

 

சிலருக்கு குடும்ப ரீதியாக அதிக அழுத்தம் இருக்கலாம். மற்றவர்களின் ஆலோசனைகள் உங்களை நிலைகுலைய செய்யலாம். ஆனால், முடிவில் மனைவியும் கணவரும்தான் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். அது நேர்மறையானாலும் சரி. எதிர்மறையானாலும் சரி.

 

ஒரே ஒரு விவரத்தை மனதில் வைத்துக் கொள்ளவும். நீங்கள் எல்லாவிதத்திலும் உங்கள் குழந்தையை மகிழ்ச்சியுடன் வளர்க்க தயாரானால் மட்டுமே, நீங்கள் குழந்தையைப் பெற்றுக்கொள்வது நல்லது.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.