பருப்பு சூப்

பருப்பு சூப்

6 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

ஏன் பருப்பு சூப்?

 

பருப்பில் புரதச்சத்து மிகவும் ஏராளமான அளவில் இருக்கிறது. இந்த பருப்பு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக்குகிறது. மற்றும் இந்த பருப்பு சாப்பிட்டால் அலர்ஜியை முற்றிலும் தவிர்க்கலாம். அப்படிப்பட்ட குணம் இப்பருப்பு சூப்பில் இருக்கின்ற பூண்டில் உள்ளன. ஆதலால் முதல் திட உணவாக குழந்தைக்கு இந்த உணவையே ஊட்டலாம்.

 

தேவையானவை:

 

 • ஒரு டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு (அ) துவரம்பருப்பு  
 • ஒரு பல் உரித்த பூண்டு
 • தேவையான அளவு மஞ்சள் தூள்
 • 8 டேபிள்ஸ்பூன் தண்ணீர்

 

தயாரிக்கும் முறை:

 

 • பருப்பை மொத்தம் 15 நிமிடம் நீரில் ஊறவைக்க வேண்டும், அதற்கு பின் அதனை நன்றாக கழுவவும்
 • இதனுடன் மஞ்சள், பூண்டு மற்றும் ஒரு சிறு அளவு அரைக்கப்பட்ட மிளகு சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்
 • பருப்பு நன்றாக குழைந்து வெந்த பிறகு, கரண்டியால் நன்றாக அதனை மசிக்கவும்
 • பருப்பு சூப் ரெடி!

 

கவனிக்கவேண்டியவை:

 

 • முதன்முதலாக நீங்கள் குழந்தைக்குத் தருகின்ற திட உணவானதால், பாசிப்பருப்பை பயன்படுத்தி சூப் தயாரிக்கவும். அதற்குப்பின், துவரம்பருப்பு கொடுத்தால் சிறந்ததாகும்.
 • துவரம்பருப்பு முதலில் கொடுத்தால், சில குழந்தைகளுக்கு  வாயுத்தொல்லை ஏற்படலாம். ஆதலால், ஏதொரு பருப்பாக இருந்தாலும் சரி. பருப்பை மறக்காமல் நன்றாகவே மசிக்க வேண்டும்
 • துவரம்பருப்பு சூப் தயாரிக்கும்போது ஒரு சிட்டிகை வெந்தயமும் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது
 • பூண்டைச் சேர்ப்பதாக இருந்தால், சிறிய துண்டாக வெட்டி, அதனை நன்றாக நசுக்கிவிட்டு சேர்க்கலாம். அப்படி செய்யும்போது, பூண்டில் உள்ள சத்துக்கள் நேரடியாக குழந்தைக்குக் கிடைக்கும்.
 • அடுப்பிலிருந்து இறக்குவதற்கு ஏதேனும் பத்து நிமிடம் முன், இந்த பூண்டைச் சேர்த்தால், உடனடியாகவே பலன் கிடைக்கும்.

 

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you