ப்ரௌன் அரிசி கஞ்சி

ப்ரௌன் அரிசி கஞ்சி

6 May 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

 

ஏன் ப்ரௌன் அரிசி கஞ்சி?

 

 • ப்ரௌன் அரிசியில் மெக்னீசியம், செலினியம், நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) முதலியன மிகவும் அதிக அளவில் இருக்கின்றன.
 • ஆதலால், குழந்தை எப்போதும் சுறுசுறுப்பாகவும், விழிப்புடனும், தெம்பாகவும்,  இருப்பான்
 • ப்ரௌன் அரிசியை சிறுவயதிலிருந்தே குழந்தைக்குப் பழக்குவது மிகமிக நல்லது
 • ஆதலால், முதல் திட உணவாக குழந்தைக்கு இந்த உணவை குழந்தைக்கு ஊட்டலாம்.

 

தேவையானவை:

 

 • 3 டேபிள்ஸ்பூன் அரிசி
 • 9 டேபிள்ஸ்பூன் vதண்ணீர்
 • சிறிதளவு சீரகத்தூள் (ருசிக்காக)

 

தயாரிக்கும் முறை:

 

 • அரிசியை 15 முதல் 20 நிமிடம் வரை நன்றாக தண்ணீரில் ஊறவைக்கவும்
 • 20 நிமிடம் ஆன பிறகு அரிசியைத் தண்ணீரில் நன்றாக கழுவவும்
 • அதற்குப்பின், தண்ணீர் சேர்த்து சற்று நேரம் வேக வைக்கவும்
 • அரிசி நன்றாக வெந்த பிறகு, கரண்டியால் மிகவும் நன்றாக மசிக்கவும்
 • கூடுதலாக இருக்கும் தண்ணீரை உடனே வடித்துவிடவும்.
 • இந்த அரிசி கஞ்சியில் சுவை வேண்டும் என்றால், சிறிதளவு சீரகத்தூளைக் கொஞ்சம்  சேர்த்துக் கொள்ளவும்
 • ப்ரௌன் அரிசி கஞ்சி ரெடி!

 

கவனிக்கவேண்டியவை:

 

 • ப்ரௌன் அரிசியால் கஞ்சியைத் தயாரிக்கும் முன்பு, முதலில் குழந்தைக்கு சாதாரண அரிசியால் அளித்துப்பாருங்கள்.
 • சாதாரண அரிசி குழந்தைக்கு நல்லபடியாக ஒத்துக்கொண்ட பிறகு,  ப்ரௌன் அரிசியால் கஞ்சி தயாரிக்கவும்
 • சாதாரண அரிசியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ப்ரௌன் அரிசி சில குழந்தைக்கு வயிற்றில் சற்று மந்தமான நிலையை உண்டாக்கும். ஆதலால், முதலில் சாதாரண அரிசியில் குழந்தைக்கு கஞ்சியை அளிக்கவும். ஆனால், மறக்காமல் பிறகு ப்ரௌன் அரிசி கஞ்சியையும் கொடுக்கவும்
 • சாதாரண அரிசியை விட ப்ரௌன் அரிசிக்கு தான் சத்து அதிகம், என்பதை மறக்க வேண்டாம்
 • அரிசி உணவுகள் சில குழந்தைகளுக்கு சில நேரங்களில் மலச்சிக்கலை ஏற்ப்படுத்தும். அப்படி ஏதேனும் மலச்சிக்கல் ஏற்ப்பட்டால், உடனே இந்த கஞ்சியை நிறுத்தி விடுங்கள்.
 • சில கால இடைவெளிக்குப் பிறகு, நீங்கள் அரிசி உணவை குழந்தைக்கு ஊட்டத் தொடங்கலாம்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you