உகந்த சுகப்பிரசவத்திற்காகவும் பிறக்கப்போகும் குழந்தையின் உடல்நலனுக்காகவும் எந்த கோவில்களைச் சென்று தரிசிக்கலாம்?

cover-image
உகந்த சுகப்பிரசவத்திற்காகவும் பிறக்கப்போகும் குழந்தையின் உடல்நலனுக்காகவும் எந்த கோவில்களைச் சென்று தரிசிக்கலாம்?

 

பெரும்பாலான இந்திய குடும்பங்களில், திருமணமாகி ஒரு வருடம் ஆனால் போதும். உடனே மற்றவர்கள், ‘எப்போது குழந்தை பெற்றெடுக்க போகிறீர்கள்?’ என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். கர்ப்பம் ஆனாலும், சுகப்பிரசவத்திற்காகவும் பிறக்கப்போகும் குழந்தையின் உடல்நலனுக்காகவும் கடவுளை நாடுவதும், பற்பல கோயில்கள் சுற்றி வருவதும் வழக்கமாகி விடும்.

 

அப்படி, தமிழ்நாட்டில்  4 பிரபலமான கோவில்கள் என்னவென்று நாம் காண்போம்:

 

  • கருவில் குழந்தை நன்றாக வளர, கருவளர்சேரி அகிலாண்டேஸ்வரி கோயிலை தரிசிக்கவும்
  • எந்த வித பிரசவ கோளாறுகளைத் தவிர்க்க, திருகருகவூர் கர்ப்பரக்ஷாம்பிகை கோயிலை தரிசிக்கவும்
  • உகந்த சுகப்பிரசவத்திற்காக, திருச்சி தாயுமானவர் சுவாமி கோயிலை தரிசிக்கவும்
  • ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க, அன்னை வேளாங்கண்ணி கோயிலை தரிசிக்கவும்

 

  1. கருவளர்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில்

எளிதாக கர்ப்பம் தரிக்க, கருவில் குழந்தையின் வளர்ச்சி சிறக்க, இந்த கோவிலுக்கு சென்று வருவது மிகவும் உகந்தது. இந்த கோவிலில் ஒரு எலுமிச்சை பழமும், ஏழு மஞ்சள் கிழங்குகளும் கிடைக்கப்படும். எலுமிச்சை பழம் புழியப்பட்டு அங்கேயே மனைவியும் கணவனும் குடித்து விடவும். பின்பு ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு, மஞ்சளை நெற்றியில் இட்டுக்கொள்ளவும். எல்லா மஞ்சளும் தீர்வதற்குள் எந்த பெண்ணும் கர்ப்பம் தரித்துவிடுவாள் என்பதே நம்பிக்கை.

 

  1. திருகருகவூர் கர்ப்பரக்ஷாம்பிகை கோயில்

எந்த வித பிரசவ கோளாறுகளைத் தவிர்க்கவே இந்த கோயிலைத் தரிசனம் செய்வது நல்லது. இந்த கோவிலில் கிடைக்கும் ஆமணக்கு எண்ணெய்யை அடிவயிற்றில் தினமும் பூசிக்கொண்டால், எந்த வித கோளாறுகளும், ஆபத்துகளும், கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏற்படாது என்பதே நம்பிக்கை.

 

  1. திருச்சி தாயுமானவர் சுவாமி

சிறந்த சுகப்பிரசவத்திற்கும், நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் இந்த கோவிலைச் சுற்றி வலம் வரலாம். இங்கே பக்தர்கள் கடவுளை வேண்டிக்கொண்டால், சுகப்பிரசவம் உறுதி. நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்த பிறகு, பச்சை வாழையை கடவுளுக்கு அளித்து நன்றி தெரிவிப்பதே, இந்த கோயிலின் ஐதீகம்.

 

  1. அன்னை வேளாங்கண்ணி கோவில்

ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எந்த வித பிரசவ கோளாறுகளும்  இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்றால், இந்த அன்னை வேளாங்கண்ணி கோவிலைத் தரிசித்தாலே போதும். பிறக்கப்போகும் குழந்தைக்கு எந்தவித குறைபாடுகளும், ஊனமும் ஏற்படாது என்பதே இந்த கோயிலின் ஐதீகம்.

 

ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னும், பின்னும் மற்றும் குழந்தை பிறந்த பிறகும் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா கோயில்களுக்கும் ஜாதி மத பேதமில்லாமல் சென்று வருவதே வழக்கம். உங்களுக்கும் இது போன்ற பிரசவத்திற்கு பேர் போன கோயில்கள் தெரிந்திருந்தால், மறக்காமல்  ஷேர் செய்யவும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!