ஓரியோ மில்க் ஷேக்

ஓரியோ மில்க் ஷேக்

7 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

கோடை காலம் துவங்கிவிட்டது. அதிகமாக சுடும் வெய்யிலில், ஜில்லென்று எதைவாயவது அருந்த வேண்டும் என்று மனதில் தோன்றுகிறதா? இதோ ஓரியோ மில்க் ஷேக் உங்களுக்காக!

 

ஏன் ஓரியோ மில்க் ஷேக்?

 

இந்த மில்க் ஷேக்கில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த கோடை காலத்தில் உங்களின் தாகத்தையும் உடனே அடக்கிவிடும். இதைத் தயாரிக்க வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே.

 

தேவையானவை

 

 • 4-5 ஓரியோ பிஸ்கட்ஸ்
 • 2 டேபிள்ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்க்ரீம்
 • 2 டேபிள்ஸ்பூன் வெல்லப்பாகு
 • 1 டேபிள்ஸ்பூன் சாக்லேட் சிரப்
 • 1 ½ குளிர்ந்த பால்

 

செய்முறை

 

 • ஓரியோ மில்க் ஷேக்கைத் தயாரிக்க ஒரு பிலேண்டேர் (கலப்பான்) எடுத்துக் கொள்ளவும்
 • 4 ஓரியோ பிஸ்கட்களை சிறு துண்டுகளாக்கி பிலேண்டேரில் இடவும்
 • அதற்கு மேல், வெண்ணிலா ஐஸ்க்ரீம், வெல்லப்பாகு, மற்றும் சாக்லேட் சிரப் ஆகியவற்றை ஊற்றவும்.
 • மேலாக 1 ½ குளிர்ந்த பாலை ஊற்றவும்.
 • அதற்கு பிறகு, பிலேண்டேரை ஆன் செய்து, அனைத்தையும் நன்றாக கலக்கிக் கொள்ளவும்
 • பின்பு ஒரு கப்பில் முதலில் சாக்லேட் சிரப்பை கொஞ்சம் ஊற்றிக்கொள்ளவும்.
 • அதற்கு மேல், பிலேண்டேரால் கலக்கின இந்த கலவையை மெதுவாக ஊற்றவும்.
 • பிறகு ஒரு ஓரியோ பிஸ்கட்டை இரண்டாக நறுக்கி அந்த கலவைக்கு மேலே அழகுபடுத்தும்படி வைக்கவும்.
 • அதிக சத்துக்காக வேண்டுமென்றால், முந்திரிபருப்பு மற்றும் பிஸ்தாவை பயன்படுத்தியும் அழகுப்படுத்தலாம்.
 • ஓரியோ மில்க் ஷேக் ரெடி!!

 

இது குழந்தைகளுக்கான ரெசிபிதான். ஆனால் தற்போது, பெரியோர்களும் இதனை மிகவும் அதிகமாகவே அருந்துகின்றனர். உணவாகட்டும், பானங்கள் ஆகட்டும். எளிதில் உடனே தயாரிக்க முடியுமென்றால், யார் தான் விரும்ப மாட்டார்…

 

மறக்காமல் இந்த ஓரியோ மில்க் ஷேக்கை அருந்திவிட்டு எப்படி இருக்கிறது என்று கமென்ட்  செய்யவும். இதன் ருசியை மேம்படுத்த உங்களிடம் ஏதேனும் டிப்ஸ் இருந்தாலும் மறக்காமல் ஷேர் செய்யவும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you