பன்னீர் காளான் வடை – யம்மி!

பன்னீர் காளான் வடை – யம்மி!

7 May 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

 

ஏன் பன்னீர் காளான் வடை?

 

பன்னீர் மற்றும் காளான் பொதுவாக புரதச்சத்து நிறைந்தவை. இந்த ரெசிபி பொதுவாக மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பரிமாறுவது நல்லது. பொதுவாக குழந்தைகள் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் மிகவும் சோர்வாக காணப்படுவர். இந்த பன்னீர் காளான் வடையை 2 அல்லது 3 எண்ணிக்கையில் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான தெம்பும், சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் ஏற்படும். பின்பு வெளியே சென்று குழந்தைகளுக்கு விளையாடவோ படிக்கவோ எளிதாக இருக்கும்.

 

தேவையானவை:

 

 • அரை கப்  துருவிய பன்னீர்
 • பொடியாக நறுக்கிய அரை கப் காளான்
 • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு
 • ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் பொடி
 • ஒரு டீஸ்பூன் சோம்பு
 • 2 டீஸ்பூன் அரிசி மாவு
 • 2 டீஸ்பூன் கடலை மாவு
 • தேவையான அளவு உப்பு

 

தயாரிக்கும் நேரம் – 10 நிமிடங்கள்

 

செயல்முறை

 

 • பன்னீர், காளான், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் பொடி, சோம்பு, அரிசி மாவு, கடலை மாவு மற்றும் உப்பு முதலியவற்றை மேலே குறிப்பிட்டுள்ள அளவில் ஒரு விரிந்த பாத்திரத்தில் எடுத்து நன்றாக சேர்த்து பிசைக்கவும்
 • பிசைத்த பிறகு அதிலிருந்து ஒரு சிறு துண்டுகளாக எடுத்து, வடை போல விரிவாக உள்ளங்கையில் தட்டவும்.
 • பிறகு வானலியில் பொறிப்பதற்கான நல்லெண்ணையை தேவையான அளவு ஊற்றி சூடாக்கவும்.
 • சூடான பிறகு, வடைப்போல் விரிவாக உள்ளங்கையில் தட்டிய கலவையை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
 • பொன்னிறமாக மாறியவுடன், வடையை நீங்கள் கரண்டியைப் பயன்படுத்தி வெளியே எடுத்து விடவும்.
 • பன்னீர் காளான் வடை ரெடி! நீங்கள் சாஸ்ஸை ஊற்றி குழந்தைக்கு பரிமாறவும்

 

மறக்காமல் சமைத்து பார்த்து அதன் புகைப்படத்தை ஷேர் செய்யவும். உங்களுக்கு இந்த  ரெசிபி பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும்.

பேனர் படம்: poornimacookbook

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you