சாதாரண இட்லிக்கும் மல்லிகை/ஜாஸ்மின் இட்லிக்கும் என்ன வேறுபாடு?
சாதாரண இட்லியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஜாஸ்மின் இட்லி/குஷ்பு இட்லி மல்லிகைப்பூவைப் போலவே மிகவும் மென்மையாகவும், வெள்ளையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
மல்லிகை இட்லி/குஷ்பு இட்லி மட்டும் எப்படி மிருதுவாக இருக்கிறது?
- அரிசி, ஜவ்வரிசி மற்றும் அவல். இவை மூன்றும் இட்லி மாவு தயாரிக்கும்போது சேர்ப்பதால், இட்லி இப்படி மிருதுவாக இருக்கிறது.
- ஹோட்டல்களில் ஒரு சிட்டிகை பேகிங் சோடாவும் பயன்படுத்துவதால், இட்லி ஸ்பான்ஜ் போல இருக்கிறது.
- பேகிங் சோடா வேண்டுமென்றால் சேர்க்கலாம். இது இல்லாமலே, இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.
இட்லியின் பயன் என்ன?
- ஜீரணத்திற்கு உகந்தது இட்லி. ஆதலால்தான் மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கும் குழந்தையை பிரசவித்த பெண்களுக்கும் டாக்டரே இட்லியை கொடுக்குமாறு பரிந்துரைக்கிறார்.
- பின்பு இந்த இட்லியில் ஜவ்வரிசி மற்றும் அவல் இருப்பதால் எடையைக் கூட்டாமல் கட்டுக்குள் வைக்கும். கெட்ட கொழுப்பை உடலில் ஏற விடாது.
- ஜாஸ்மின் இட்லி/குஷ்பு இட்லி ரெசிபி
தேவையானவை:
- அரிசி – 4 கப்
- உளுந்து – 1 ¼ கப்
- ஜவ்வரிசி – ¾ கப்
- வெள்ளை நிற அவல் – ½ கப்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- உப்பு – 2 டேபிள்ஸ்பூன்
செயல்முறை
- அரிசி, உளுந்து, ஜவ்வரிசி, வெள்ளை நிற அவல், மற்றும் வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஐந்து மணிநேரம் வரை நன்றாக ஊற வைக்கவும்.
- ஐந்து மணிநேரத்திற்கு பிறகு, கிரைண்டரில் இட்டு அரைக்கவும்.
- மிக்ஸியை விட கிரைண்டரில் அரைத்தால், இட்லி இன்னும் மென்மையாக இருக்கும்.
- மாவு திட்டு திட்டாக இல்லாமல் நல்ல மென்மையாக இருக்க வேண்டும். அதுவரை, கிரைண்டரில் அரைக்கவும்.
- மாவு ரெடியானவுடன் உப்பை சேர்க்கவும்.
- பிறகு மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இட்லி மாவு 8-12 மணிநேரம் வரை ஃபெர்மென்ட் ஆக விடவும். இந்நேரத்தில் மாவு இருபடி அதிகளவில் ஏறும். இட்லி மாவு ரெடி.
- தேவையான நேரத்தில், இட்லி பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய்யை லேசாக ஊற்றி தடவியப்பின், இந்த இட்லி மாவை ஊற்றவும்
- பிறகு இட்லி குக்கரில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- ஜாஸ்மின் இட்லி/குஷ்பு இட்லி தயார்!!
- மேலே குறிப்பிட்டுள்ள மாவின் அளவுபடி 40 இட்லிகளைத் தயாரிக்கலாம்.
எப்படி பரிமாறுவது?
ஜாஸ்மின் / குஷ்பு இட்லியை சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடியுடன் பரிமாறவும்
மறக்காமல் சமைத்து பார்த்து அதன் புகைப்படத்தை ஷேர் செய்யவும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும்.
#babychakratamil