அம்மா சமையல் – ப்ரோக்கோலி சப்பாத்தி

cover-image
அம்மா சமையல் – ப்ரோக்கோலி சப்பாத்தி

 

ஏன் ப்ரோகோலி?

 

 • மிகவும் சிறிதளவு கலோரி அளவில் அதிக சத்துகளைத் தருவதில், ப்ரோகோலி மிகவும் உகந்தது.
 • எடை கூடுதல், புற்றுநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் ஜீரண கோளாறு ஆகியவற்றை வராமல் தடுக்கும்.
 • அதிக புத்துணர்ச்சியும், முடிக்கும் சருமத்திற்கும் பொலிவு கூடும்
 • வைட்டமின் கே அதிகமாக இருப்பதால், எலும்புகள் திடமாக இருக்கும்
 • ஆண்டிஆக்சிடன்ட்ஸ் அதிகளவில் உள்ளதால், இளமையை கட்டிக்காக்க முடியும்

 

தேவையானவை

 

 • ப்ரோகோலி – ¼ கப்
 • கோதுமை மாவு – 1½ கப்
 • இஞ்சி – சிறிய துண்டு
 • எண்ணெய் – தேவைகேற்ப
 • உப்பு – தேவையான அளவு
 • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிய அளவு

 

செயல்முறை

 

 • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க வைக்கவும்.
 • சுத்தப்படுத்தப்பட்ட ப்ரோகோலியை சூடான தண்ணீரில் சேர்த்தப்பின், 3 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைக்கவும்.
 • நன்றாக ஆறின பிறகு, சுடுதண்ணீரால் வடிகட்டிய ப்ரோகோலி, கொத்தமல்லி, இஞ்சி மற்றும் 2 டீஸ்பூன் ப்ரோகோலியை வேகவைத்த நீர் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
 • வேறொரு பாத்திரத்தில், மிக்ஸியால் அரைத்த விழுது மற்றும் கோதுமை மாவு ஆகியன சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்றாக பிசைக்கவும்.
 • மாவை பிசைக்க, சாதாரண தண்ணீருக்கு பதிலாக ப்ரோகோலியை வேகவைத்த நீரைப் பயன்படுத்தவும்.
 • கூடவே உப்பையும் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
 • பிறகு சாதாரண சப்பாத்தியை சுடுவது போல, சப்பாத்தி திரட்டியில் முக்கோண வடிவில் திரட்டிய பின் தவாவில் சுட்டு எடுக்கவும்.

 

ப்ரோகோலி சப்பாத்தி ரெடி!!

 

மறக்காமல் சமைத்து பார்த்து அதன் புகைப்படத்தை ஷேர் செய்யவும்.

க்ரேவியுடன் சாப்பிட்டு பார்த்து உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால்  மறக்காமல் உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும்.

 

vegehomecooking: vegehomecooking

 

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!