கோடை கால அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. எங்கு பார்த்தாலும் கண்ணைக் கட்டும் வெயில்தான். பொதுவாக ஒவ்வொரு சீசனில் ஒரு சில பழங்கள் அதிகமாக கிடைக்கும். இந்த வெயில் காலத்தில் பழங்களின் ராஜாவாகிய மாம்பழமே பூத்துகுலுங்கும் நேரமிது.
ஸ்வீட்ஸ் பிடிக்காத ஆட்களே இல்லை. அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது ஐஸ்கிரீம் மற்றும் ஸ்வீட்ஸ் தான். ஸ்வீட்ஸ் என்றாலே அதிகமான மக்களுக்கு பிடித்தது லட்டுதான். எல்லோரும் பூந்தி லட்டு சாப்பிட்டு இருப்பீர்கள். மாம்பழ லட்டு சாப்பிட்டதுண்டா? சாப்பிட்டு பாருங்கள். பின்பு வேறு எந்த வித ஸ்வீட்ஸ்ஸும் வேண்டாம் என்றே சொல்வீர்கள்.
ஏன் மாம்பழம்?
- சுடும் வெய்யிலில் மாம்பழம் சாப்பிட்டால் உடலில் தெம்பு வரும். குறைவான கலோரியில் அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களும் மாம்பழத்தில் காணலாம். அதுமட்டுமில்லாமல் அயர்ன், கால்ஷியம் மற்றும் ஆண்டிஆக்சிடன்ட்ஸ் அதிகமாக காணலாம்.
- புற்றுநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை கோளாறு, சருமக்கோளாறு மற்றும் ஜீரண கோளாறு ஆகியவற்றை வராமல் தடுக்கும்.
மாம்பழ லட்டு ரெசிபி:
தேவையானவை:
- 1/2 கப் மாம்பழ கூழ்
- ஒரு கப் தேங்காய் பவுடர்
- 1/2 கப் சுண்டக் காய்ச்சிய பால்
- 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
- 1/2 கப் பொடிப் பொடியாக நறுக்கிய நட்ஸ்
செயல்முறை:
- மாம்பழ லட்டு தயாரிக்க, அடி மிகவும் கனமாக உள்ள பாத்திரத்தை பயன்படுத்தவும்.
- அடுப்பில் வைத்த பிறகு, தேங்காய் பவுடரை இடவும். பவுடர் பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கவும்.
- அதனுடன், மாம்பழக் கூழையும் சேர்க்கவும். பிறகு நன்றாக கலக்கவும்.
- இக்கலவையுடன் ஏலக்காய் பொடி மற்றும் சுண்டக் காய்ச்சிய பாலைச் சேர்த்து, அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
- பதமாக லட்டு பிடிக்க முடிகிற சரியான நிலைக்கு வந்த பின்னர், அடுப்பை அணைத்து விடுங்கள்.
- இக்கலவை நன்றாக ஆறிய பிறகு, சாதாரண லட்டுவைப் போலவே உருண்டை பிடிக்க ஆரம்பிக்கவும்.
- அதே நேரத்தில், ஒரு மீடியம் தட்டில் தேங்காய் பவுடரை தூவிக் கொள்ளவும்.
- உருண்டைகளை அந்த பவுடர் மீது உருட்டி எடுக்கவும்.
சுவை நிறைந்த மாம்பழ லட்டு ரெடி!!
மறக்காமல் சமைத்து பார்த்து அதன் புகைப்படத்தை ஷேர் செய்யவும். சாப்பிட்டு பார்த்து உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும்.
awesomecuisine: awesomecuisine
#babychakratamil