• Home  /  
  • Learn  /  
  • முட்டை பனியாரம் ரெசிபி – குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது!
முட்டை பனியாரம் ரெசிபி – குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது!

முட்டை பனியாரம் ரெசிபி – குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது!

7 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

பனியாரம் என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த உணவு. அதே நேரம், இட்லி தோசையைப் போல  எளிதில் நீங்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. முக்கியமாக, தமிழ்நாட்டை விட்டு வெளியேறினால், பனியாரம் என்பது ருசிக்க கிடைக்காது. இந்த கருத்தை மனதில் கொண்டுதான், பனியாரம் அதுவும் முட்டை பனியாரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதை கீழே விவரமாக தந்திருக்கிறேன்.

 

தேவையானவை

  • இரண்டு முட்டை
  • ஒரு கப் இட்லி மாவு
  • பச்சை மிளகாய் – 2
  • சின்ன வெங்காயம் – 25 கிராம்
  • கடுகு – கால் டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

 

செய்முறை

 

  • பனியாரம் தயாரிக்க நான்ஸ்டிக் குழி பனியார கல்லை வாங்கி வைத்துக்கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை நீளவாக்கிலும்; கறிவேப்பிலை மற்றும் பச்சைமிளகாயை பொடி பொடியாகவும் நறுக்கி வைக்கவும்
  • பிறகு, ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கவும்.
  • இட்லி மாவுடன் இந்த முட்டையை சேர்த்து சரிவர கலக்கவும். தேவையான அளவு உப்பையும் இந்த கலவையுடன் சேர்த்துக்கொள்ளவும்.
  • ஒரு வாணலியை எடுத்துக் கொள்ளவும். 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • சூடான பிறகு, உளுத்தம்பருப்பு மற்றும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  • நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு இந்த தாளித்த பொருட்களுடன் முட்டை கலந்த இட்லிமாவையும் சேர்த்து சரிவர கலக்கவும். முட்டை பனியாரம் மாவு ரெடி!
  • நான்ஸ்டிக் குழிப்பனியாரக்கல்லில் சிறுதுளி எண்ணெய்யை ஊற்றி தடவவும்.
  • பிறகு ஒவ்வொரு குழியில், மாவை முக்கால்பாகம் வரும் வரை ஊற்றவும். ஊற்றி அடுப்பில் வேக வைக்கவும்.
  • ஒருபக்கம் பனியாரம் வெந்தவுடன் அதை குச்சியின் உதவியால் மறுப்பக்கம் திருப்பிப்போடவும். பிறகு அந்த பக்கமும் வெந்து விடும்.

 

முட்டைப் பனியாரம் ரெடி!

 

முட்டை பனியாரத்தை புதினா சட்னி அல்லது பொட்டுக்கடலை சட்னியுடன் பரிமாறவும்.  ருசி அபாரமாக இருக்கும்.

 

மறக்காமல் சமைத்து பார்த்து அதன் புகைப்படத்தை ஷேர் செய்யவும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும்.

 

பேனர் படம்: CheezzKitchen

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.