பிரசவ காலங்களில் கர்ப்பிணிகளின் பாதங்கள் நீர் கட்டுவதால், வீக்கமடையும். பாதங்களில் வலியும் ஏற்படும். ஆதலால், நடப்பது கடினமாகிவிடும். சரியான வகை காலணிகளை அணிந்தால் மட்டுமே, இந்த பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும். கருவிலிருக்கும் உங்கள் குழந்தையும் பாதுகாப்பாக இருக்கும்.
நீங்கள் எப்படிப்பட்ட காலணிகளை அணிய வேண்டும் என்று பேபிசக்ரா உங்களுக்குத் தகுந்த ஆலோசனை கொடுக்கும்.
கர்ப்பிணிகள் சரியான காலணிகளை மட்டுமே ஏன் அணிய வேண்டும்?
- பிரசவ காலம் நெருங்க நெருங்க, உங்கள் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படும். உடல் எடை நன்றாக கூடலாம்.
- முடிவில், உங்கள் உள்ளங்கால்களிலும், பாதங்களிலும் அதிக அழுத்தம் ஏற்படும்.
- அத்துடன், மூட்டுவலி, கால் வலி, பாத வலி ஏற்படும்
- சிலருக்கு தசைநாரில் சுளுக்கும் ஏற்படும். வெரிகோஸ் நரம்பும் புடைக்க ஆரம்பித்துவிடும்
- இந்த வலியிலிருந்து விடுபெறவே, சரியான காலணிகளை இந்த நேரங்களில் அணிய வேண்டும்.
கர்ப்பிணிகளின் அணியக்கூடிய சரியான காலணிகள் எப்படி இருக்க வேண்டும்?
- நீங்கள் அணியும் காலணிகள் மென்மையாகவும், உங்கள் எடையை சமாளிக்கும் வண்ணமும் இருக்க வேண்டும்
- நீங்கள் முடிந்தவரை கோர்க்கும் விதமான காலணிகளை அணிய வேண்டும். பக்கில் மற்றும் லேசு இருக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால், ஏழு மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பிணிகளால் குனிய முடியாது. ஆதலால், காலணிகளை அணிவதற்காக குனிவதைத் தவிர்க்கவும்.
- நீங்கள் அணியும் காலணிகள் தட்டையாக இருக்க வேண்டும். இந்த நேரங்களில் ஹீல்ஸ் அணிவதை முற்றிலும் தவிர்க்கவும். உயரமான கூர்மையான ஹீல்ஸை அதிகமாக அணிந்தால், உங்களின் கர்ப்பப்பை கீழே இறங்கவும் வாய்ப்பிருக்கிறது.
- உங்கள் குதிக்கும் பாதங்களுக்கும் நீங்கள் அணியும் காலணிகள் தகுந்த தாங்கைத் தர வேண்டும்
- காலணிகளை வாங்கும்போது ஒரு சைஸ் பெரிதாக வாங்குவது நல்லது. ஏனென்றால், உங்கள் பாதம் நீர் கட்டி அதிகமாக வீங்க வாய்ப்புண்டு.
- காற்றோட்டமான காலணிகளை அணியவும். இந்த நேரங்களில், அதிகமாக வியர்வை பாதங்களிலிருந்து சுரக்கும்.
- மென்மையான விளையாட்டு நேர காலணிகளை (ஸ்போர்ட்ஸ் ஷூஸ்) அணிவதே உத்தமம். கர்ப்ப காலங்களில், நீங்கள் அதிகம் நடக்க வேண்டும். இவ்வித காலணிகளை அணிந்து நடப்பதற்கு எளிதாக இருக்கும்.
- குளிர் காலமாக இருந்தால், காலுறை (சாக்ஸ்) அணிந்து காலணிகளை அணிவது நல்லது.
- தூங்கப்போகும்போது, மறக்காமல் காலணிகளையும் காலுறைகளையும் கழற்றி விடவும். இல்லையெனில், தூக்கத்தில் அதிக சூட்டை இளக்கி விடலாம்.
- நல்ல சப்பல்களையும் காலணிகளாக அணியலாம். வீட்டிலும் அணிந்து நடக்கலாம்.
- நீங்கள் ஷூவையோ அல்லது கட்ஷூவையோ அணிய தீர்மானித்தால், அவை காற்றோட்டமாகவும், எந்த வித அழுக்கும் பதியாமலும் இருக்க வேண்டும்
- நீங்கள் அணியும் காலணிகளால் உங்கள் பாதம் மசாஜ் ஆவது போன்ற எண்ணம் வர வேண்டும். காலணிகளைக் கழற்றினால் போதும் என்ற எண்ணம் வரக்கூடாது.
பேனர் படம்: Doctor soft
#babychakratamil