• Home  /  
  • Learn  /  
  • மார்பக காம்பு (நிப்பிள்) கர்ப்ப காலங்களில் ஏன் நிறம் மாறுகிறது?
மார்பக காம்பு (நிப்பிள்) கர்ப்ப காலங்களில் ஏன் நிறம் மாறுகிறது?

மார்பக காம்பு (நிப்பிள்) கர்ப்ப காலங்களில் ஏன் நிறம் மாறுகிறது?

8 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

ஒரு பெண் வயதிற்கு வந்த பிறகு, அவளின் மார்பகத்தில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அதே போல, அவள் கர்ப்பிணியாகும்போதும், இயற்கையான சுரப்பிகளின் காரணங்களால், மார்பகங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த நிப்பிள்கள் நிற மாற்றம் கொண்டு வருவதில்லை. ஆனால் இந்த நிப்பிளை சுற்றியுள்ள பகுதிதான் நிறம் மாறுகிறது. அந்த பகுதிக்கு பெயர், ஏரியோலா.

 

இந்த நிப்பிள் நிற மாற்றம் நிரந்தரமா?

 

  • சில பெண்களுக்கு இந்த நிப்பிள் நிற மாற்றம் நிரந்தரமாக இருக்க வாய்ப்பு உள்ளன.
  • ஆனால் சிலருக்கு, வெறும் தனது கர்ப்ப காலங்களில் மட்டுமே, நிறம் மாறி கருமை அடைந்திருக்கும். பிரசவ நேரம் நெருங்க நெருங்க, நிப்பிளும் கருமையாகும்.
  • பிரசவத்திற்குப் பின், தாய்ப்பால் ஊட்டுவதோடு நிப்பிளும் பழையபடி தன் அசல் நிறத்தை அடையும்

 

மார்பக காம்பு (நிப்பிள்) கர்ப்ப காலங்களில் ஏன் நிறம் மாறுகிறது?

 

  • கர்ப்ப காலங்களில், சுரப்பிகள் அதிகமாக சுரக்கும். அதன் சுரக்கும் அளவில் அளவற்ற மாற்றங்கள் காணப்படும்.
  • அத்துடன் மெலனின் என்கிற கூறும் அதிகமாக சுரக்கும்.
  • அவ்வாறு சுரக்கும்போது பிக்மேண்டஷன் அதிகமாகும்
  • பிக்மேண்டஷன் அதிகமாவதுடன், நிப்பிளின் நிறமும் மாறி, கூடுதல் கருமையடையும்.
  • அது மட்டுமல்லாமல், புதிதாக பிறந்த குழந்தைக்கு உடனே சரியாக காண இயலாது. நிப்பிள் கருமையாக இருந்தால், குழந்தைக்கு நன்றாக அடையாளம் காண முடியும், என்று பற்பல ஆய்வுகள் விவரிக்கின்றன.

 

கருமையடையாமல் நிப்பிளை எப்படி பாதுகாப்பது?

 

  • வேண்டுமென்றால், நீங்கள் ஏதேனும் சன்ஸ்க்ரீன் லோஷன் நிப்பிளில் புரட்டலாம்.
  • பொதுவாக நீங்கள் அதையே நினைக்க வேண்டியதில்லை. பல்வேறு நேரங்களில் இந்த நிற மாற்றம் வெறும் தற்காலிகமானதாகும்.

 

பொதுவாக நிப்பிள் கருமையடைவதன் மூலக்காரணிகள் என்ன?

  • வாய்வழி கருத்தடை மருந்துகள்
  • பூப்படைதல்
  • கர்ப்பம்
  • நிப்பிளைச் சுற்றி முடி வளர்ச்சி
  • மாதவிடாய் சுழற்சி
  • தாய்ப்பால் ஊட்டல்
  • புற்றுநோய்

 

எப்போது நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்?

 

  • உங்கள் நிப்பிள் கருமையாகும் விஷயத்தை மருத்துவரிடம் மறக்காமல் கூறவும்.
  • இது பயப்பட வேண்டிய விஷயமா இல்லையா என்று மருத்துவர் பரிசோதனை செய்து உறுதியளிப்பார்.
  • ஆனாலும், நிப்பிள் நிற மாற்றம் மட்டுமல்லாமல் கீழ்க்கண்ட வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்:
  • நிப்பிள் கட்டி
  • சிவப்புத்தன்மை
  • அரிப்பு
  • ஒரே ஒரு நிப்பிளில் மற்றும் நிற மாற்றம்
  • நிப்பிளை சுற்றியுள்ள தோல் உரித்தல்
  • நிப்பிளை சுற்றியுள்ள தோல் செதில் செதிலாக விழுதல்
  • கூச்சமடைதல்
  • நிப்பிளிலிருந்து மஞ்சள் அல்லது சிவப்பு நிற வெளியேற்பு

 

ஆதலால் பெரிதாக நிப்பிள் நிற மாற்றத்தை எண்ணி பயப்பட வேண்டாம். ஆனால் முன்பு விவரித்தபடி, மறக்காமல் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அதே போல,  நிற மாற்றம் மட்டுமல்லாது மேலே விவரித்தபடி வேறு ஏதேனும் மாற்றங்களும் உள்ளதா என்று நீங்களே கவனிக்கவும்

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.