தந்தையாக போகும் ஆண்களுக்கான 6 கர்ப்ப அறிகுறிகள்!

cover-image
தந்தையாக போகும் ஆண்களுக்கான 6 கர்ப்ப அறிகுறிகள்!

 

பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது, பற்பல அறிகுறிகள் ஒவ்வொரு இடைவெளிகளிலும் காணப்படும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், ஆண்களுக்கும் கர்ப்ப அறிகுறிகள் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கேட்டது சரிதான். ஆண்களுக்கும் பெண்களைப் போல கர்ப்ப அறிகுறிகள் ஏற்படும். கர்ப்பம் தரித்த பிறகு, கணவனும் மனைவியும் உணவுகளை மட்டுமல்ல. கர்ப்ப அறிகுறிகளையும் பகிர்கின்றனர். ஆண்களில் வரும் இந்த மாற்றத்திற்கு, ‘கௌவேட் சின்றோம்’ என்று பெயர்.

 

இந்த அறிகுறிகள் என்னவென்று ஒவ்வொன்றாக தெளிவாக காண்போம்.

 

பதற்றம்:

 

ஆண்கள் பெண்களைப் பார்க்க ரொம்பவுமே கூல்தான். ஆனால் தன் மனைவி கர்ப்பம் தரித்த செய்தியைத் தெரிந்தவுடன் முதலில் பெண்களைவிட ஆண்களுக்கு தான் குதூகலத்தில் பதற்றம் ஏற்படுகிறது. முக்கியமாக, தன் மனைவி அதிக நாட்களுக்குப் பிறகு, பற்பல சிக்கல்களுக்குப் பிறகு கர்ப்பம் தரித்திருந்தால், கணவர்கள் சற்று அதிகமாகவே பதற்றம் அடைவர்.

 

குமட்டல் மற்றும் தலைச்சுற்றல்:

 

பெண்களைப் போலவே ஆண்களுக்கும் குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும். காரணம், அவர்களுக்கு ஏற்படுகிற பதற்றம்தான். உறவினர்களும், தோழர்களும் கணவர்களிடம் வந்தே பற்பல ஆலோசனைகள் அதிகளவில் தருகின்றன. தோழர்கள் தமது அனுபவத்தையும் பகிர்வார்கள். அவற்றை கேட்டு மனதில் ஏராளமான குழப்பங்கள் ஏற்படும். சிலருக்கு மனதின் சமநிலையும் கெட்டுவிடும். தன் மனைவியின் பிரசவத்தைப் பற்றி எண்ணியே, சரியாக உணவு உண்ண மாட்டார்கள். சரியாக தூங்கவும் மாட்டார்கள். அதனால்தான், காலையில் எழுந்தவுடன் குமட்டலும் தலைச்சுற்றலும் ஏற்படுகின்றன.

 

மனநிலை ஊசலாடுதல்:

 

மனைவிகளை விட, கணவர்களின் மனதில் குதூகலம், கவலை, பதற்றம், குழப்பம் என்ற பல்வேறு எண்ணங்கள் தோன்றும். கர்ப்ப காலங்களில், கணவர்கள் தம் குடும்பத்தை, முக்கியமாக தம் தாய் தந்தையை அதிகமாக சார்ந்திருப்பார். அவர்களும் தம் காலங்களில் இந்த சமயத்தைக் கடந்து வந்துள்ளதால், அவர்களின் யோசனை மிகவும் பயனுள்ளதாக அமையும். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் கணவர்களைவிட தனிக்குடும்பத்தில் வாழும் கணவர்களுக்கு மனநிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும். தன் மனைவி அதிக நாட்களுக்குப் பிறகு, பற்பல சிக்கல்களுக்குப் பிறகு கர்ப்பம் தரித்திருந்தால், கணவர்கள் சற்று அதிகமாகவே மனநிலை ஊசலாடும்.

 

உடலுறவு எண்ணங்களில் மாற்றம்:

 

கணவர்கள் சில சமயம் மனைவிகளைப் போல, அல்லது மனைவிகளை விட அதிகளவில் கர்ப்பத்தைக் குறித்துள்ள பதற்றத்திலும் கவலையிலும் இருப்பார்கள். மனதுக்கு சற்று ஓய்வு கிடைக்க, உடலுறவில் சற்று அதிகமாகவே சிலர் கவனத்தைச் செலுத்துவார்கள். சிலர், அந்த மன குழப்பத்தினால் உடலுறவில் துளி கூட கவனம் செலுத்த மாட்டார்கள். எதுவாக இருந்தாலும், கணவர்களிடமிருந்து தீவிரமான உணர்ச்சியை இந்நேரங்களில் எதிர்பார்க்கலாம்.

 

எடை கூடுதல்:

 

சில கணவர்களுக்கு மனைவிகளைப் போலவே வயிறு பெரிதாக ஆரம்பிக்கும். காரணம், ஆண்களுக்கு ‘கார்டிசோல்’ என்ற சுரப்பி அதிகமாக சுரக்கும். இந்த சுரப்பியினால், பதற்றம் அதிகமாகும். பதற்றம் அதிகமாவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவில் மாற்றம் ஏற்படும். இந்த  கார்டிசோல் இந்த அளவுகளை சரிப்படுத்துவதில், திடீரென பசி ஏற்பட வாய்ப்புண்டு. கணவர்களோ, அதிகளவில் உணவை உட்கொள்வார்கள். ஆதலால்தான், எடை கூடி தொப்பையும் வர ஆரம்பிக்கிறது.

 

உடம்பு வலி:

 

பிரசவத்தை எதிர்நோக்கி போகபோக கவலையும் பதற்றமும் அதிகமாவதால், முதுகு வலி, தலை வலி, பல் வலி, நரம்பு வலி, சுளுக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. உடலால் தளர்ச்சி வருவதற்கு காரணமே, மனரீதியான  தளர்ச்சிதான்.

 

மேற்கூறிய அறிகுறிகளை பெரிதாக நினைக்க வேண்டாம்.  இவையும் கடந்து போகும். கணவர்களும் அவர்கள் மனைவியுடன் இருந்து யோகா செய்யலாம். மனதுக்கு சற்று ஓய்வு கிடைக்கும். தேவையில்லாமல் மருந்து சாப்பிட வேண்டியதில்லை.

 

கணவர்களே! நீங்கள் வேறு ஏதேனும் அறிகுறிகளை அனுபவித்து இருக்கிறீர்களா? அப்படியானால், நீங்களும் உங்கள் அனுபவத்தை ஷேர் செய்யவும்!

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!