ஒரு பெண் கர்ப்பிணியானவுடன் உடலில் பற்பல கனிமங்களின் குறைபாடுகள் ஏற்படுகின்றன. அவற்றில் பொதுவாக கால்ஷியம் மற்றும் அயர்ன் அளவில் மாற்றம் காணலாம். ஆதலால் நல்லதொரு ஆரோக்கியமான பிரசவத்திற்காக, கர்ப்ப காலத்தில் தினமும் கால்ஷியம் மற்றும் அயர்ன் நிறைந்த உணவுகளையும் மாத்திரைகளையும் சாப்பிடச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
கால்ஷியம் மற்றும் அயர்ன் மாத்திரைகள் ஒரே வேளையில் உட்கொள்ளுவது சரிதானா? அதனால், ஏதேனும் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதா?
- கால்ஷியம் மற்றும் அயர்ன் மாத்திரைகள் ஒரே வேளையில் உட்கொள்ளுவது தவறு. கனிமங்களைக் கலப்பதால், நமது குடல் சரியாக அயர்ன்னை உறிஞ்சாமல் போய்விடும்.
- நாம் உண்ணும் அயர்ன் மாத்திரைகளுக்கு பயன் இல்லாமல் போய்விடும்
எப்படி நமது குடல் அயர்ன்னை உறிஞ்சுகிறது?
- நமது சிறு குடலில் தான், அயர்ன் உறிஞ்சப்படுகிறது.
- சிறு குடலில் ‘எண்டிரோசைட்ஸ்’ என்கிற செல்கள் இருக்கின்றன.
- நாம் உண்ணும் உணவிலுருந்து, இந்த ‘எண்டிரோசைட்ஸ்’ அயர்ன்னை உறிஞ்சு, நம் உடலில் ஊறும் உதிரத்தில் கலக்கிவிடுகிறது.
- சிலரின் குடல் சரியாக அயர்ன்னை உறிஞ்சாமல் போகும். வெறும் 10-15 விழுக்காடு அயர்ன்தான் உதிரத்தில் கலக்கப்படும்.
- ஆதலால் தான், தேவையான அயர்ன் உறிஞ்சப்படாமல், அயர்ன் குறைபாடு ஏற்படுகின்றது.
- சரியான அளவு அயர்ன் மாத்திரைகளை உட்கொண்டால், இதற்கு தீர்வு காணலாம்
அயர்ன் உறிஞ்சப்படும் இந்த செயல்பாட்டில் கால்ஷியமின் பங்கு என்ன?
- கால்ஷியம் நம் சிறுகுடலைச் சரியாக அயர்ன்னை உறிஞ்ச விடாமல் தடுக்கிறது.
- ஏன் என்ற காரணத்திற்கு இதுவரை பதில் இல்லை. எப்படி தடுக்கிறது என்பதற்கும் பதிலில்லை.
- கால்ஷியம் 300 மில்லிகிராமுக்கு அதிகமாக இருந்தால், சிறுகுடலைச் சரியாக அயர்ன்னை உறிஞ்சவிடாது.
- ஆனால், எந்த ஒரு மாத்திரையிலும் கால்ஷியம் அளவு 300 மில்லிகிராம் விட அதிகம்தான்.
- ஆதலால், உறிஞ்சுவதிளிருந்து தடை ஏற்பட்டே தீரும்
பின்பு எப்போதுதான் இந்த கால்ஷியம் மற்றும் அயர்ன் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்?
- கால்ஷியம் மருந்து இரவில் சாப்பிடவும். அயர்ன் மருந்தை காலையில் உட்கொள்ளவும்.
- உடலில் கால்ஷியம் தேவையான அளவு இருந்தால்தான், எலும்பும் நரம்புகளும் திடமாக இருக்கும்
எந்த உணவு வகைகளை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் அயர்ன் அதிகளவில் சிறுகுடலால் உறிஞ்சப்படும்?
- வைட்டமின்-ஸி நிறைந்த உணவு வகைகள் மற்றும் இறைச்சி.
- சரியாக கூற வேண்டும் என்றால், ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ், இறைச்சி மற்றும் கீரை வகை. கீரையில் உள்ள அயர்ன்னை நன்றாக உறிஞ்ச, இந்த ஆரஞ்சு ஜூஸ் உதவியாக இருக்கும்.
- அயர்ன் மாத்திரை சாப்பிடும்போது, டீ மற்றும் முழு தானிய உணவு வகைகளையும் தவிர்க்கவும்
- வெறும் கால்ஷியம் மருந்தைத் தனியாக உட்கொள்ளாமல், வைட்டமின்-டி மருந்தையும் சேர்த்து உட்கொள்ளவும். பால், முட்டை போன்ற உணவையும் சேர்க்கவும்
- முடிந்தவரை, உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவும்
#babychakratamil