உயர் ஆபத்து கர்ப்பமா? - கவனமாக இருக்கவும்!

cover-image
உயர் ஆபத்து கர்ப்பமா? - கவனமாக இருக்கவும்!

 

உயர் ஆபத்து கர்ப்பம் என்றால் என்ன?

 

ஒன்றோ ஒன்றை விட அதிக காரணங்களினாலோ ஒரு கர்ப்பிணியின் பிரசவத்திலோ அல்லது பிறக்க போகும் குழந்தையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ, அந்த நிலைக்கு உயர் ஆபத்து கர்ப்பம் என்று அர்த்தம்.

 

எந்த காரணங்களினால் உயர் ஆபத்து கர்ப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு?

 

கர்ப்பம் தரிப்பதற்கு முன்:

 

 • கர்ப்பிணியின் வயது 17 அல்லது அதற்கும் குறைவாக இருத்தல்
 • கர்ப்பிணியின் வயது 35 அல்லது அதற்கும் மேல் இருத்தல்
 • ஏற்கனவே கருச்சிதைவு ஏற்படுதல்
 • கர்ப்பம் தரிக்கும் முன் எடை குறைவு அல்லது எடை கூடுதலாக இருத்தல்
 • கருவில் இரட்டையர்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் தெரிதல்
 • அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், எய்ட்ஸ், மனச்சோர்வு அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய கோளாறு
 • முந்தைய கர்ப்பத்தில் கோளாறு (அகால பிரசவம் அல்லது மரபணு கோளாறு) இருத்தல்
 • புகைப்பிடித்தல், போதைப்பொருள் மற்றும் மது அருந்துதல்

 

கர்ப்பகாலத்தில்:

 

 • ப்ரேஎக்லாம்ப்ஸியா - அதிக ரத்த அழுத்தம், சிறுநீரில் அதிகளவு புரதம் மற்றும் வீக்கம்
 • கர்ப்பகால நீரிழிவு நோய்
 • கருவில் ஏதேனும் கோளாறு
 • நஞ்சுக்கொடி கருப்பை வாயை மூடுதல்
 • அதிக ரத்தப்போக்கு

 

உயர் ஆபத்து கர்ப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் கர்ப்பிணிகளால் சுலபாமாக குழந்தை பெற முடியாதா?

 

முடியும், ஆனால் மருத்துவர் சொல்வது போல் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.

 • கர்ப்ப காலம் முழுதும்  வேளாவேளைக்கு மருத்துவரிடம் இருந்து தக்க ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்
 • தகுந்த சத்துள்ள உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். பழ வகைகளையும், காய்கறிகளையும். முழுதானியங்களையும் மறக்காமல் உட்கொள்ள வேண்டும்.
 • தகுந்த நேரங்களில் மருத்துவரின் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்
 • மனஅழுத்தத்தையும் முடிந்தவரை குறைவாக்கிக் கொள்ளவும்
 • முடிந்தவரை பல்வேறு தொற்றுநோய்களிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாக்கவும்.
 • சரியான நேரத்தில் எல்லா தடுப்பு ஊசிகளையும் போட்டிருக்க வேண்டும்
 • கர்ப்ப காலத்தில் மறக்காமல் 400 மைக்ரோகிராம் போலிக் ஆஸிட் சாப்பிட வேண்டும்
 • புகை, போதைப்பொருள் மற்றும் மது ஆகியவற்றை  முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!