கருச்சிதைவு என்றால் என்ன?
கருச்சிதைவு இரு வகைப்படும். எந்தவித தூண்டுதலும் இல்லாமல் கருச்சிதைவு தானாக ஏற்பட்டால், அதை இயற்கையான கருச்சிதைவு என்று கூறலாம். ஆனால் ஒரு பெண்ணே சுயமாக கருச்சிதைவு செய்ய தீர்மானித்துவிட்டால், அதற்கு தூண்டப்பட்ட கருச்சிதைவு என்று கூறப்படும்.
தூண்டப்பட்ட கருச்சிதைவு எத்தனை வகைப்படும்?
- தூண்டப்பட்ட கருச்சிதைவு இரண்டு வகைப்படும்
- மாத்திரை மூலம்
- அறுவை மூலம்
- முதல் ட்ரைமெஸ்டேரில் (முதல் மூன்று மாதங்களில்) இந்த கருச்சிதைவை செய்ய வேண்டும்.
- சில இடங்களில் மருத்துவச்சிகள் கருச்சிதைவு செய்வர். சிலர் மற்றவர்கள் கூறும் கருச்சிதைவு முறைகளைப் பின்பற்றுவர். என்னதான் இருந்தாலும், ஒரு மருத்துவர் கருச்சிதைவு செய்வதே உகந்தது.
- மருத்துவமனையிலோ, கிளினிக்கிலோ செய்வது நன்று.
மாத்திரை மூலம் கருச்சிதைவு எப்படி செய்வது?
- கர்ப்பமாகி முதல் பத்து வாரம் தீர்வதற்குள் செய்ய வேண்டும்
- பிரோஜெஸ்டிரோன் என்ற சுரப்பியைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்தை உட்கொள்ள வேண்டும்
- வழக்கத்தை விட அதிகளவில் உதிரப்போக்கு ஏற்படும். சிலருக்கு இரண்டு வாரம் வரை உதிரப்போக்கு ஏற்படும். மணிக்கு இரண்டைவிட அதிக நாப்கின்கள் பயன்படுத்த நேரிடும்.
- இரண்டு வாரத்தில் மருத்துவரைச் சென்று சந்திக்க வேண்டும்.
- தாங்க முடியாத அளவில் வயிற்றுவலி ஏற்படும். சிலருக்கு காய்ச்சல் ஏற்படும்.
- கருச்சிதைவு சரியாக நடந்ததா என்று மருத்துவர் தேவையான பரிசோதனையை செய்து உறுதிப்படுத்துவார்.
- 97% வெற்றிகரமான விளைவு கிடைக்கும்.
- மாத்திரை மூலம் கருச்சிதைவு ஏற்படவில்லை என்றால், அறுவை மூலம் கருச்சிதைவு முறையை மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்
அறுவை மூலம் கருச்சிதைவு எப்படி செய்வது?
- கர்ப்பப்பையில் உள்ள கருவை கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு முறையால் நீக்க முடியும்
- மேனுவல் வாக்யூம் ஆஸ்பிரேஷன் (எம்விஏ)
- டைலேடேஷன் மற்றும் இவாகுவேஷன் (டி&ஈ)
- எம்விஏ கர்ப்பமாகி முதல் 12 வாரங்களுக்குள் செய்தாக வேண்டும்
- டி&ஈ கர்ப்பமாகி 5 முதல் 20 வாரங்களுக்குள் செய்தாக வேண்டும். பொதுவாக டி&ஈ இரண்டாவது ட்ரைமெஸ்டேரில் செய்யப்படுகிறது.
- இவ்விரு முறையில், மயக்க மருந்தைக் கொடுத்து கருவிருக்கும் பாகத்தை உணர்ச்சியில்லாமல் செய்யப்படுகின்றது. அதற்கு பின், ஒரு குழாயை யோனிவழி கர்ப்பபையில் விட்டு, கரு கலைக்கப்படுகிறது.
- இந்த செயல்முறைக்குப் பிறகு, ஒரு மணிநேரம் கழிந்தவுடன் வீட்டிற்கு செல்லலாம். வீட்டில் ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.
- சிலருக்கு உதிரப்போக்கு தொடரும். வயிற்று வலியும் ஏற்படும்.
- 100% வெற்றிகரமான விளைவு கிடைக்கும்.
கருச்சிதைவு மேற்கொள்ள எந்த அம்சங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?
- இருப்பிடம் – முடிந்தவரை கருச்சிதைவு செய்கின்ற இடம் வீட்டிற்கு பக்கத்திலேயே இருப்பது நல்லது. மாத்திரையால் கருச்சிதைவு செய்யலாம். இருந்தாலும், வீட்டின் அருகில் இருப்பது மிகவும் நன்று
- கால அளவு – அறுவை கருச்சிதைவு 6 முதல் 14 வாரங்களுக்குள் செய்யலாம். ஆனால் மாத்திரை மூலம் செய்யும் கருச்சிதைவு 9 வாரங்களுக்குள் செய்ய வேண்டும்.
- விலை – அறுவை கருச்சிதைவு நாட்கள் நெருங்க நெருங்க விலை அதிகமாகும். கருச்சிதைவு ஒரு மருத்துவமனையில் நடப்பதை விட ஒரு கிளினிக்கில் உள்ள மருத்துவர் நடத்தினால் சற்று விலைகுறைவாக இருக்கும். பொதுவாகவே மாத்திரை மூலம் செய்யும் கருச்சிதைவு, மாத்திரையின் வீரியம் ஏற ஏற விலையும் ஏறும். அதே போல, சில இடங்களில் இவ்விரு கருச்சிதைவு முறைகளுக்கும் விலையில் அதிக வேறுபாடு வருவதில்லை. ஆதலால், நீங்கள் இருக்கும் இடத்தைக் கருத்தில் கொண்டு, எந்த முறை உங்களுக்கு எளிதாக தோன்றுகிறதோ அதையே நீங்கள் பின்பற்றலாம்.
- மனரீதியான நிலை – சிலருக்கு அறுவை என்று கேட்டாலே பயம் ஏற்படும். சிலருக்கு ஊசியைக் கண்டாலும் பயம். அப்படிப்பட்டவர்கள், மாத்திரை மூலம் செய்யும் கருச்சிதைவைத் தேர்ந்தெடுக்கலாம். மற்ற சிலருக்கு வீட்டிலேயே கருச்சிதைவு செய்ய தைரியம் இருக்காது. அந்த சமயங்களில் அறுவை மூலம் கருச்சிதைவைத் தேர்ந்தெடுக்கலாம்.
பொதுவாக கூற வேண்டுமென்றால்,
யார் மாத்திரை மூலம் செய்யும் கருச்சிதைவைத் தேர்ந்தெடுக்கலாம்?
- வீட்டிலேயே கருச்சிதைவு செய்வதில் பயமில்லை
- அறுவையை விரும்பாதவர்கள்
- பல தடவை மருத்துவரை சந்திக்க தயார்
- கர்ப்பமாகி 9 வாரங்கள் தாண்டவில்லை
யார் அறுவை மூலம் செய்யும் கருச்சிதைவைத் தேர்ந்தெடுக்கலாம்?
- ஒரே வருகையில் கருச்சிதைவு முறையை தீர்த்தல்
- கருச்சிதைவு நடக்கும்போது உணர்ச்சியில்லாமல் இருத்தல்
- மருத்துவமனை வீட்டிற்கு பக்கத்தில் இருத்தல்
- அறுவையைக் கண்டு பயமில்லாமல் இருத்தல்
கருச்சிதைவு பாதுகாப்பானதா?
- கருச்சிதைவு செய்தாலும் பிற்காலத்தில் கர்ப்பமாக வாய்ப்பு உள்ளது.
- மருத்துவரால் செய்யப்படுவதால், கருச்சிதைவு பாதுகாப்பானதாகவே இருக்கும்
என்னென்ன கேள்விகளை மருத்துவரிடன் கேட்க வேண்டும்?
- எந்த கருச்சிதைவு முறை எனக்கு சிறந்தது?
- கருச்சிதைவு நேரத்தில் எப்படி இருக்கும் என் நிலை?
- அறுவை மூலம் செய்யப்படும் கருச்சிதைவு முறையில் மயக்க மருந்து கொடுக்கப்படுமா?
- என் உதிரப்போக்கு எத்தனை நாள் வரை தொடரும்?
- என் உதிரப்போக்கு எவ்வளவு கூடுதலாக இருக்கும்?
- மாத்திரை வழி கருச்சிதைவு சரியாகவில்லை என்றால், என்ன செய்வது?
#babychakratamil