மகப்பேறு கால குளியல்

cover-image
மகப்பேறு கால குளியல்

 

மகப்பேறு கால குளியலின் மகத்துவம் என்ன?

 

மகப்பேறு கால குளியலுக்கு மகத்துவம் அதிகம். உங்களோடு உங்கள் கருவில் உள்ள குழந்தையும் சேர்ந்து நீராடும் தருணம் அது. சிலருக்கு அந்த குளியல் சிறப்பாக அமைய, பாலைத் தண்ணீரில் கலப்பார்கள். சிலரோ, தண்ணீரில் பூக்களை இடுவார்கள். அந்த பூக்கள் உடலில் படபட ஒரு மென்மையான உணர்வு ஏற்படும். உங்களின் வயிற்றுக்கு பொலிவு அதிகமாக ஏற்படும். மன நிம்மதியுடன் நீண்ட நேர ஓய்வு கிடைக்கும்.

 

குளியல் தொட்டியில் இளஞ்சூட்டு நீருடன் பால், பூக்கள், சுகந்தம், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு. இவையனைத்தையும் கலக்கவும். பூக்களைத் தூவும்போது அதன் காம்பை நீக்கி விடுங்கள். இல்லையெனில் அந்த காம்பு உங்களைக் குத்தி விடலாம்.

 

மசாஜ் தேவையா?

 

ஆமாம். மருத்துவ குணமுள்ள எண்ணெய் கலவையை தயாரிக்க வேண்டும். அந்த எண்ணெய்யை தினமும் வயிற்று பக்கத்தில் பூசி மசாஜ் செய்தால், நீண்ட ஆறுதல் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் சந்தனம், அஸ்வகந்தா, குஷ்ட, ஆமணக்கு ஆகியன கலக்கி, நன்றாக சூடாக்கி, அதன் சாரை மசாஜுக்கு பயன்படுத்துவது நல்லது. மசாஜ் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளெண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

 

கிராமங்களில் பின்பற்றப்படும் குளியல் முறை என்ன?

 

  • தண்ணீரில் புளி இலைகள், பூவரசு, குறுமிளகாய் ஆகியன சேர்த்து கலக்கவும். அதற்கு பின், தண்ணீரை சூடாக்கிக் கொள்ளவும். அந்த நீரால் நீராடவும்.
  • வேப்பிலை என்பது பொதுவாக மருத்துவகுணம் வாய்ந்தது. தண்ணீரில் வேப்பிலையைக் கலக்கி, சூடாக்கி குளித்தாலும் உடல்வலிக்கு அதிக ஆறுதல் கிடைக்கும்.
  • தேய்த்து குளிக்க சோப் பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, பச்சைப்பயறு பொடியை பயன்படுத்தி தேய்த்து குளிக்கவும்.
  • ஒரு துளி மஞ்சள் பொடியுடன் ஒரு டீஸ்பூன் பால் பவுடரை கொண்டைக்கடலை பொடியுடன் சேர்த்து கலக்கவும். சோப்புக்கு பதிலாக இந்த கலவையைப் பயன்படுத்தலாம்.
  • அதே போல, தலைக்கு முடிந்தவரை ஷாம்பூ பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, செம்பருத்தி இலையை அரைத்து அதன் சாரைப் பயன்படுத்தவும்.
  • இல்லையெனில், தலைக்கு வீட்டில் தயாரித்த ஷிக்காகாயைப் பயன்படுத்தலாம். செம்பருத்தி இலை, கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, எலுமிச்சை தோல், வெந்தயம், கறிவேர்ப்பிலை ஆகியன வெய்யிலில் காய வைத்து பவுடராக்கிக் கொள்ளவும். இந்த பொடியை தலைக்குத் தேய்க்க பயன்படுத்தலாம்.
  • மேலே குறிப்பிட்டுள்ள முறைகள் அல்லாது கர்ப்பிணிகளுக்குரிய வேறு ஏதேனும்  குளியல் முறை தெரிந்திருந்தால் மறக்காமல் நீங்கள் ஷேர் செய்யலாம்.

 

பேனர் படம்: sodasippinsister

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!