கர்ப்ப காலங்களில் எப்படிப்பட்ட காஸ்மெட்டிக்ஸ் மற்றும் மணப்பொருட்களை பயன்படுத்த வேண்டும்?

cover-image
கர்ப்ப காலங்களில் எப்படிப்பட்ட காஸ்மெட்டிக்ஸ் மற்றும் மணப்பொருட்களை பயன்படுத்த வேண்டும்?

 

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? கர்ப்ப காலத்தில் எல்லாவித காஸ்மெட்டிக்ஸ் (ஒப்பனை பொருட்களையும்) பயன்படுத்த கூடாது. ரசாயன கலவை நிறைந்த பொருட்களைத் தவிர்க்கவும். அப்படி ரசாயன கலவை இல்லாத பொருட்கள் இருக்கிறதா?

 

ஆம், இருக்கிறது. அவை என்னவென்று பின்வருமாறு காணலாம்

 

1. பற்களை வெள்ளையாக்கும் டூத்பேஸ்ட்:

 

 

சில டூத்பேஸ்ட்கள் பயன்படுத்தினால், பற்கள் உடனடியாக வெள்ளையாகும் என்பது ஒரு கருத்து. ஆனால் அப்படி வெள்ளையாக்குவதின் பின்னில் அதிக ரசாயனங்கள்தான் காரணம். இந்த ரசாயனங்கள் கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தினால், பற்களும் ஈரும் வலுவிழந்து போகும். ஆதலால் முடிந்தவரை சாதாரண டூத்பேஸ்ட்டைப் பயன்படுத்துவதுதான் நல்லது.

சில டூத்பேஸ்ட்களில் எஸ்எல்எஸ் (சோடியம் லவ்ரெத் சல்ஃபேட்) கலக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உடலுக்கு கேடு. முடிந்தவரை, நீங்கள் வாங்கும் அத்தனை பொருட்களில் இந்த எஸ்எல்எஸ் இருக்கிறதா என்று சரி பார்க்கவும். இல்லையென்று உறுதியான பிறகே, டூத்பேஸ்ட்டைப் பயன்படுத்தவும்.

 

2. ரசாயனமில்லாத டியோடிரன்ட் (மணப்பொருட்கள்)

 

பற்பல மணப்பொருட்களில் அலுமினியம் ஸிர்கோனியம் என்கிற ரசாயனம் காணப்படும். இந்த ரசாயனம் கர்ப்பிணிகளுக்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் ஆபத்தானவை. இனிமேல், நீங்கள் மணப்பொருட்கள் வாங்கும்போது அது அலுமினியம் இல்லாததாக இருக்க வேண்டும். அதே போன்று எஸ்எல்எஸ், சிலிக்கா, பாராஃபேன், ப்ரோபைலீன் கிலைகோல், டிரைகிலோசன், ஃபார்மால்டீஹைட் முதலியன ரசாயனங்கள் காணப்பட்டால், கர்ப்பிணிகள் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  • இஞ்சி வாசனையுள்ள டியோடிரன்ட்
  • ரோஜா டியோடிரன்ட்
  • லாவென்டர் டியோடிரன்ட்
  • சந்தனம் வாசனையுள்ள டியோடிரன்ட்

மேலே குறிப்பிட்டுள்ள வகைகளைப் பயன்படுத்தலாம்.

 

3. சுத்தப்படுத்திகள் (கிளேன்சர்கள்)

 

பற்பல கிளேன்சர்களில் பாராபேன், சல்ஃபேட், பெட்ரோரசாயனம், மற்றும் ஃப்தலேட் போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆகாது. ஆதலால், இவற்றை முற்றிலும் தவிர்க்கவும்.

 

4. மோய்ஸ்சரைசர்:

 

ரெட்டிநோய்டு மற்றும் சலிஸிலிக் ஆசிட் கலந்த மோய்ஸ்சரைசர்களை முற்றிலும் தவிர்க்கவும். சருமத்திற்கு இவை அதிகமாக தீங்கு விளைவிக்கும். சில நேரங்களில் குழந்தை பிறப்பிலும் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

5. ஷாம்பூ / கண்டிஷனர்

 

ஷாம்பூ அல்லது கண்டிஷனர் வாங்கும்  பொழுதும் மறக்காமல் சல்ஃபேட் இல்லாமலும் இயற்கை தன்மை மிகுதியாகவும் இருக்க வேண்டும்.  

 

மேலே குறிப்பிட்டவாறு, சருமத்திற்கும் முடிக்கும் தேவையான பொருட்களை கர்ப்பிணிகள் கவனமாக வாங்க வேண்டும். முடிந்த அளவு, இயற்கைத்தன்மை நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதே நல்லது.

 

மேலும் கவனிக்கவேண்டியவை: மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவித பொருட்களையும் அதிகளவில் பயன்படுத்த கூடாது. தலைவலி, எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனே நிறுத்திவிடவும். 

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!