• Home  /  
  • Learn  /  
  • கூடி செயல்பட்டால் கோடி நன்மை! மாற்றத்திற்கு துணை புரிவோம்! – அன்னையர் தின உறுதிமொழி
கூடி செயல்பட்டால் கோடி நன்மை! மாற்றத்திற்கு துணை புரிவோம்! – அன்னையர் தின உறுதிமொழி

கூடி செயல்பட்டால் கோடி நன்மை! மாற்றத்திற்கு துணை புரிவோம்! – அன்னையர் தின உறுதிமொழி

10 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

அன்னையர் தினத்தில், பொதுவாக எல்லோரும் வாழ்த்து மடல்களை அதிகளவில் இணையத்தளத்தில் பரிமாறுவர். பேபிசக்ரா வெறும் வாழ்த்து மடலை மட்டும் அனுப்பாமல், தாய்மை மற்றும் குழந்தையின் நலனுக்காக போராடும் பெண்களுடன் உங்களை இணைக்கிறது. அது எப்படி?

 

உங்களில் பலரும் change.org என்கிற இணையத்தளத்தை கேட்டிருப்பீர்கள். இந்த இணையத்தளத்தின் மூலம் நாம் அரசுக்கு மனு அனுப்பலாம். அதிக மக்களின் ஆதரவு ஏற ஏற, தகுந்த மாற்றங்கள் உடனடியாக ஏற்படும். அதற்கு இந்த இணையத்தளம் வழி வகுத்து தருகிறது.

 

அதே போல, தாய் மற்றும் குழந்தையின் நலனுக்கு வேண்டி பற்பல தாய்மார்கள் Change.org என்கிற இணையத்தளத்தில் பற்பல மனுவை அனுப்பியுள்ளனர். அவை என்னவென்று காண்போம்.

 

  1.     ஜின்சி வர்கீஸ் (மும்பை)

 

சம்பவம்: ஜின்சி வர்கீஸ் என்பவர் தாய்ப்பாலூட்டுதல் பற்றின பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர். தனக்கு குழந்தை பிறந்தவுடன் தன்னை கேட்காமல், தன் குழந்தைக்கு மருத்துவமனையில் புட்டிப்பாலை ஊட்டினார்கள்.

மனு: புட்டிப்பால் ஊட்டுவது தவறு. மருத்துவ ரீதியில் ஏதேனும் அபாயம் இருந்தால் மட்டுமே, புட்டிப்பால் கொடுக்க வேண்டும். ஆனால், அதற்கு முன், கட்டாயம் தாய்க்கு அறிவிக்க வேண்டும்

விளைவு : கிடைத்தது 91000 ஆதரவாளர்கள்

 

  1. சுபர்னா (மும்பை)

 

சம்பவம்: சுபர்னா என்பவர் சிசேரியன் மற்றும் பாதுகாப்பான பிரசவம் பற்றின பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர். சிசேரியன் காரணமாக தான் அதிக நாட்களுக்கு மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார்.  பற்பல ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், சிசேரியன் தாய்மார்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு தம் குழந்தைகளுக்கு பாலூட்ட முடிவதில்லை. குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் எடைகூடுதல் மற்றும் நீரிழிவு நோய் வந்துவிடுகிறது.

மனு: இந்த பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனச்சோர்வைக் கணக்கில் கொண்டு, இந்திய மருத்துவமனைகள் ஒவ்வொன்றும் தாம் செய்யும்  சிசேரியன் அறுவை சிகிச்சையின் எண்ணிக்கையை தனது பிரச்சாரத்தின் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

 

  1. தர்ஷனா (மும்பை)

 

சம்பவம்: குழந்தை பிறந்த முதல் 8-10 நாட்கள் வரை தான் மிகவும் பதற்றத்துடனும், நிதானம் இல்லாமலும் இருந்தார். சில நேரம் சிடுசிடுவெனவும் சந்தேக குணமும் இருந்தது. பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் மனச்சோர்வைப் பற்றி தர்ஷனா கேள்விப்பட்டிருந்தார். ஆதலால், விரைவில் அதை நன்றாக எதிர்கொண்டார்.

மனு: பிரசவத்திற்கு பின் எற்படும் மனச்சோர்வை எதிர்கொள்ள உதவும் ஒரு ஹெல்ப்லைன் வெளியிடும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

  1.     ரிச்சா (டெல்லி)

 

சம்பவம்: ரிச்சா தன் பெண் குழந்தையின் பாதுகாப்புக்கு வேண்டி நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் முதல் நாளில் தன் குழந்தை நீதிமன்ற அறையின் உள்ளே சென்ற போது மிகவும் தளர்ந்துவிட்டாள். அறை மிகவுமே சின்னதாக நெருக்கமாக இருந்தது. தன் குழந்தையால்  நடமாட கூட முடியவில்லை. மூச்சுத்திணறுவது போலிருந்தது. தன் குழந்தை மட்டுமல்ல. வேறு 10-12 குழந்தைகள் இருந்தன. எல்லோரும் எதையோ கூறி வாதாடிக்கொண்டிருந்தார்கள். பிஞ்சுக்குழந்தைகளுக்கு மட்டும் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் திணறி போய் இருந்தனர்.

மனு: நீதிமன்றத்தில் பெரியோர்களின் சத்தமில்லாத, குழந்தைக்கு ஏற்றவாறு ஒரு காற்றோட்டமான அறை அமைக்க வேண்டும்.

 

  1.     தீபிகா அஹுஜா (பெங்களூர்)

 

சம்பவம்: தீபிகா ஒரு குழந்தையை தத்தெடுத்தவர். தனது அலுவலகம் நான்கு மாதங்கள் விடுமுறை கொடுத்ததால், தன் குழந்தையின் வளர்ச்சியை கண்கொண்டு காண முடிந்தது. முக்கியமாக அனாதையில்லத்தின் நினைவு கூட வராமல், குழந்தையை பாசமுடன் வளர்த்த முடிந்தது.

மனு: குழந்தையைத் தத்தெடுத்த பெற்றோர்களுக்கும் தவறாமல் சரிசமமான விடுமுறைகள் அளிக்க வேண்டும். இந்த மனு நேரடியாக வேலை வாய்ப்புத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது உள்ள அரசு விதிமுறைகளின் படி,  தத்தெடுத்த குழந்தையின் பெற்றோர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகாது.

 

  1.     ஆர்த்தி ஷ்யாம்சுந்தர் (மும்பை)

 

சம்பவம்: பல வருடங்களாக ஆணும் பெண்ணும் சமம் என்கிற கொள்கையுடன் பற்பல அலுவலகங்களோடு சேர்ந்து பணியாற்றி வருகிறார். பெண்களின் எண்ணிக்கையை கூட்டினால் மட்டும் ஆகாது. குழந்தை கவனிப்பு முதற்கொண்டு வீட்டிலேயே அதிக வேலைகள் இருக்கும்போது அவள் வேலையிடத்திலும் எப்படி அதிகளவில் பணியாற்ற முடியும்.

மனு: வேலையிடத்திலும் ஆணும் பெண்ணும் சமம்; ஆதலால், தந்தையர்களுக்கும் தந்தைமை விடுமுறையை நிச்சயமாக கொடுக்க வேண்டும்

 

உங்களின் பங்கு:

 

மேலே குறிப்பிட்டுள்ள தாய்களுடன் சேர்ந்து நீங்களும் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கவும். உங்களின் பங்கேற்பு அதிகமாகும்போது, உடனடியே பிரச்சனைகள் பிரச்சாரத்தின் மூலம் தீர்வுக்கு வரும். மாற்றங்களும் சம்பவிக்கும். எதிர்காலத்தில் எல்லோராலும் பயனடைய முடியும்.

 

இந்த அன்னையர் தினத்தை முன்னிட்டு, நாங்கள் இந்த பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். நீங்களும் எங்களுடன் சேர்ந்து, மேற்கூறிய மாற்றங்கள் உடனே நடைபெற ஆதரவு தெரிவியுங்கள். உங்கள் சேவை, நாட்டுக்கு தேவை.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you