கமகமக்கும் நெல்லிக்காய் பிரியாணி

கமகமக்கும் நெல்லிக்காய் பிரியாணி

13 May 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

 

பிரியாணி என்றாலே சைவ ரீதியில் மிகவும் குறைவான வகைகளையே காண முடிகிறது. வெஜிடபிள், பன்னீர், காளான் மற்றும் சோயா வகை பிரயாணிகளை சாப்பிட்டு இருப்பீர்கள். நெல்லிக்காய் பிரியாணி ஹோட்டல்களில் பெரிதாக கிடைக்கப்படாது. இதன் அரிய தன்மையை மனதில் கொண்டுதான் நாங்கள் இதனை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று கீழே குறிப்பிட்டுள்ளோம்.

 

நெல்லிக்காயின் ஆரோக்கிய நலன்கள் ஏராளமானவை. நெல்லிக்காயில் மிகவும் அதிகளவில் ஆண்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின்-ஸி இருக்கின்றன. தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். அதலால் தான் குழந்தைகளுக்கு எப்போதும் எக்காலத்திலும் சிறு வயது முதற்கொண்டு இதனை கொடுப்பார்கள். நெல்லிக்காய் சாப்பிட்டால் புற்று நோய் வராது; இதய துடிப்பும் சரியாக இருக்கும்; ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கொழுப்பு ஏற்படாது. வயிற்றில் எவ்வித ஜீரண கோளாறும் ஏற்படாது. எலும்புகளும் நரம்புகளும் வலுவாக இருக்கும். எப்போதும் சோர்வில்லாமல் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

 

இப்படிப்பட்ட நெல்லிக்காயில் எல்லாருக்கும் பிரியமான பிரியாணி தயாரித்தால்  எப்படி இருக்கும்? யோசிக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. இதோ தயாரிக்கும் முறையை கவனிப்போம்.

 

தேவையானவை

 

 • கொட்டை நீக்கி துருவிய பெரிய நெல்லிக்காய் – பத்து
 • ஒரு கப் பாசுமதி அரிசி
 • நன்றாக துருவிய தேங்காய் – 1/4 கப்
 • பச்சை மிளகாய் – 2
 • கொத்தமல்லி – சிறிதளவு
 • எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
 • வேர்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
 • உப்பு – உங்களின் தேவைகேற்ப

 

செய்முறை

 

 • ஒரு கப் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். பிறகு அதனை தண்ணீரில் இருபது நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
 • இருபது நிமிடங்களுக்கு பிறகு, பாசுமதி அரிசியை உதிரியாக வடித்து எடுத்து கொள்ளுங்கள்.
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்
 • பிறகு பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
 • அதனை எண்ணெயுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 • அதனுடன் துருவிய நெல்லிக்காய், வேர்கடலை, துருவிய தேங்காய் ஆகியன சேர்த்து வதக்கவும்.
 • இக்கலவையுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும். பிறகு அடுப்பிலிருந்து கீழே இறக்கிக் கொள்ளவும்.
 • பிறகு இக்கலவையுடன் வடித்தெடுத்த பாசுமதி சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்
 • இறுதியாக, வாசனைக்காக சாதத்தை அலங்கரிக்க கொத்தமல்லி இலையை மேலே தூவிக்  கொள்ளலாம்.
 • நெல்லிக்காய் பிரியாணி ரெடி!!

 

எப்படி இருக்கிறது இந்த நெல்லிக்காய் பிரியாணி? மறக்காமல் இந்த பிரியாணியை வீட்டிலேயே தயாரித்து பார்க்கவும். நீங்களே தயாரித்த நெல்லிக்காய் பிரியாணியின் புகைப்படத்தை மறக்காமல் ஷேர் செய்யவும். எப்படி இருக்கிறது என்ற உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும். கேட்க ஆவலுடன் இருக்கிறோம்.

 

பேனர் படம்: vahrehvah

 

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you