பன்னீர் பாயசம் – இனிப்போ இனிப்பு!!

cover-image
பன்னீர் பாயசம் – இனிப்போ இனிப்பு!!

 

பாயசங்கள் பற்பல வகைகள் உள்ளன. பண்டிகை நாட்களிலும், திருமண வீடுகளிலும், கோவில்களிலும் பருப்பு பாயசம் இல்லையென்றால் பால் பாயசம் காண முடிகிறது. சில வீடுகளில் அடை பாயசமும் தயாரிப்பார்கள். எங்கேயாவது பன்னீரில் பாயசம் தயாரிக்க முடியும் என்று கேள்விப்பட்டிருக்கீங்களா? உணவில் மாற்றங்கள் கூட கூட ருசியும் அதிகம். அதற்கேற்ப, பன்னீரில் பாயசம் எப்படி தயாரிப்பது என்பதை கீழே விரிவாக குறிப்பிட்டுள்ளோம்.

 

முக்கியமாக குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். அவர்கள் மதிமயங்கி விடுவர். இனி உங்கள் வீட்டில் ஏதேனும் விஷேஷம் இருந்தாலும், சரி. வேறுபட்ட இந்த பாயசத்தை தயாரிக்கலாம். கர்ப்பிணிகளும் இனிப்பை சற்று அதிகமாகவே விரும்புவர். இந்த பாயசத்தை 10 நிமிடங்களில் தயாரித்து விடலாம். ஆதலால், பாசமுள்ள கணவர்களும் இதை தயாரிக்கலாம்.

 

எப்படி தயாரிப்பது?

 

தேவையானவை

 

 • பொடியாக்கப்பட்ட பன்னீர் – ½ கப்
 • பால் – 2 கப்
 • குங்குமபூ – சிறிய அளவு
 • ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
 • சர்க்கரை – 1/4 கப்
 • முந்திரி – 5 துண்டு
 • சோள மாவு – 1 டீஸ்பூன்
 • முந்திரி – 5 துண்டு

 

செய்முறை

 

 • பன்னீர் பாயசம் தயாரிக்க தொடங்கும் முன், முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
 • அதே போல, சோள மாவையும் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
 • பிறகு ஒரு பாத்திரத்தில், பால் ஊற்றவும். அதனை சிறிது நேரம் காய வைக்கவும்.
 • காய்ந்த பின், அடுப்பின் தீயளவை குறைவாக்கிக் கொள்ளவும்.
 • அந்த பாலில், பன்னீர் சேர்த்துவிட்டு 2 நிமிடங்கள் வரை நன்றாக நிறுத்தாமல் கிளறி விடவும்.
 • அதற்கு பிறகு, தண்ணீரில் கரைத்த சோள மாவையும் ஊற்றி 1 நிமிடம் வரையில் நன்றாக கிளறி விடவும்.
 • பிறகு, சர்க்கரையை சேர்க்கவும்.
 • அதனுடன், முந்திரி துண்டு மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து கிளறி விடவும்.
 • பிறகு ஒரு கொதிவந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும்.
 • பால் காய்ந்த பிறகு, 5 நிமிடம் மட்டும் வைத்தாலே போதும்.

 

பன்னீர் பாயசம் ரெடி!!

 

எப்படி இருக்கிறது இந்த பன்னீர் பாயசம்? மறக்காமல்  இந்த பாயசத்தை வீட்டிலேயே தயாரித்து பார்க்கவும். நீங்களே தயாரித்த பன்னீர் பாயசத்தின் புகைப்படத்தை மறக்காமல் ஷேர் செய்யவும். எப்படி இருக்கிறது என்ற உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும். கேட்க ஆவலுடன் இருக்கிறோம்.

 

பேனர் படம்: boldsky

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!