வீட்டுல விசேஷமா? – இதோ சோள மாவு அல்வா!

வீட்டுல விசேஷமா? – இதோ சோள மாவு அல்வா!

13 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

பொதுவாக பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், முக்கியமாக குழந்தைகளுக்கு பிடிக்கப்பட்டது,  உணவு வகைகளிலேயே ஸ்வீட்ஸ் தான். காரணம் அது கொடுக்கும் இனிப்பு சுவை. இனிப்பு எப்போதுமே மகிழ்ச்சியைக் குறிக்கும். கர்ப்பிணியின் வளைகாப்பா?குழந்தையின் பிறந்த நாளா? ஏன் ஹோட்டல்களை நம்பி இருக்கிறீர்கள். நீங்களே தயாரிக்கலாம், அரை மணிநேரத்தில்.

 

ஏன் சோள மாவில் அல்வா?

 

 • பொதுவாக சோள மாவு நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்தவை. ஆதலால் எந்த வித அஜீரண பிரச்சனைகள் ஏற்படாது.
 • அதுமட்டுமல்லாமல், சோள மாவு ஃபோலிக் ஆஸிட் நிறைந்தவை. கர்ப்பிணிகளுக்கு மிகவும் இன்றியமையாத உணவிது. காரணம், கர்ப்பிணிகளில் ஃபோலிக் ஆஸிட் குறைவாக இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைகளில் உடல்ரீதியான கோளாறுகள் ஏற்படும்.

 

எப்படி தயாரிப்பது?

 

 • தேவையானவை:
 • சோள மாவு – ½ கப்
 • தண்ணீர் – 2 கப்
 • சர்க்கரை – 1 1/2 கப்
 • நெய் – 3 டீஸ்பூன்
 • முந்திரி – 10
 • ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
 • கலர் – ஒரு சிட்டிகை

 

செய்முறை

 

 • ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர்  ஊற்றிக்கொள்ளவும்
 • அதில் சோள மாவு, சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் கலர் சேர்க்கவும்
 • அந்த கலவையை கட்டி ஏற்படாமல் நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
 • அதற்கு பின், வாணலியில் ஊற்றிக் கொள்ளவும். பிறகு விடாமல் கிளற வேண்டும்.
 • ஒரு தருணத்தில் ஜெல்லி பதம் வந்து விடும்
 • அப்போது ஏலக்காய் தூளும் முந்திரியையும் கலக்கிக்கொள்ளவும்
 • 2 அல்லது 3 நிமிடங்களுக்கு பிறகு அல்வா போன்ற பதம் வந்துவிடும்
 • அப்போது தட்டில் ஒரு துளி நெய் தடவவும்.
 • அந்த தட்டில் அல்வாவை ஊற்றி ஆற வைக்கவும். பிறகு துண்டுகளாக்கி பரிமாறலாம்.

 

சோள மாவு அல்வா ரெடி!!

 

எப்படி இருக்கிறது இந்த சோள மாவு அல்வா? இனி நீங்கள் இந்த பதார்த்தத்தை வெளியிலிருந்து வாங்க வேண்டியதில்லை. மறக்காமல் இந்த அல்வாவை வீட்டிலேயே தயாரித்து பார்க்கவும். நீங்களே தயாரித்த சோள மாவு அல்வாவின் புகைப்படத்தை மறக்காமல் ஷேர் செய்யவும். எப்படி இருக்கிறது என்ற உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும். கேட்க ஆவலுடன் இருக்கிறோம்.

 

பேனர் படம்: bawarchi

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you