• Home  /  
  • Learn  /  
  • அமெரிக்கன் ஸ்நாக்ஸ் – ஹோம்மேட் உருளைக்கிழங்கு ஸ்மைலி – இதோ! இதோ!
அமெரிக்கன் ஸ்நாக்ஸ் – ஹோம்மேட் உருளைக்கிழங்கு ஸ்மைலி – இதோ! இதோ!

அமெரிக்கன் ஸ்நாக்ஸ் – ஹோம்மேட் உருளைக்கிழங்கு ஸ்மைலி – இதோ! இதோ!

13 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

குழந்தைகள் ஆனாலும் சரி; பெரியவர்கள் ஆனாலும் சரி. பசியென்று எவரெவர் கூக்குரல் இடுகிறார்களோ, அவர்களுக்கு இதுவே ஏற்ற ஸ்நாக்ஸ். வயிறு அதற்கு பிறகு 3 மணிநேரம் வரை பசிக்கவே பசிக்காது.

 

அப்படிப்பட்ட ஹோம்மேட் உருளைக்கிழங்கு ஸ்மைலியை  எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று காண்போம்.

 

தேவையானவை

 

  • உருளைக்கிழங்கு – 4 அல்லது 5
  • துருவிய சீஸ் – ½ கப்
  • சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
  • சிவப்பு மிளகாய்த்தூள் – ருசிக்கேற்ப
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – ருசிக்கேற்ப

 

செயல்முறை

 

ஆய்த்த நேரம் – 1 மணிநேரம்

தயாரிப்பு நேரம் – 15 நிமிடம்

 

  • உருளைக்கிழங்குகளை தண்ணீரில் ஊறவைத்து, தோலை உரிக்கவும்
  • இந்த உருளைக்கிழங்குகளை நன்றாக துருவிவிட்டு, பெரிய பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்
  • அதனுடன் துருவிய சீஸ், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் சோள மாவை சேர்த்துக்கொள்ளவும்
  • தண்ணீர் சேர்க்காமல், இதனை கெட்டியாக மாவைப்போல் பிசைந்து கொள்ளவும்
  • 45 – 60 நிமிடங்கள் வரை இக்கலவையை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்
  • ஒரு மணிநேரத்திற்கு பிறகு இந்த மாவிலிருந்து சின்னச்சின்ன உருண்டைகளை எடுத்து, வடையை போல தட்டிக்கொள்ளவும்.
  • ஒரு சிறு கத்தியை பயன்படுத்தி, இரு கண் மற்றும் வாய் வடிவில் அறுக்கவும்
  • வேண்டுமென்றால், இந்த மாவை பயன்படுத்தி நீங்கள் எந்த உருவத்தை வேண்டுமென்றாலும் உருவாக்கலாம்.
  • மீடியம் தீயில், ஒரு ஃப்ரையிங் பான்னில் எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்
  • இந்த ஸ்மைலிகளை க்ரிஸ்ப்பாகவும் கோல்டன் பிரவுன் நிறமாகும்வரையிலும் பொரிக்கவும்.

 

எப்படி பரிமாறலாம்?

 

  • இதனை டொமாட்டோ கெச்சப்புடன் பரிமாறலாம்
  • தயிருடன் பரிமாறலாம்
  • மயோனிஸ் கூட பரிமாறலாம் – இதில் ருசி அதிகம் என்றாலும் அதிகளவில் எடையை கூட்ட வாய்ப்புண்டு. ஆதலால் முடிந்தவரை மயோனிஸ் தவிர்ப்பது நல்லது.
  • ஆரோக்கியம் மீது அதிகளவில் கவனம் வைத்திருப்பவர்கள், எண்ணெய்யில் ஃப்ரை செய்யாமல் ஓவன்னில் பேக் செய்வது நல்லது

 

எப்படி இருக்கிறது இந்த அமெரிக்கன் ரெசிபி? இனி நீங்கள் இந்த பதார்த்தத்தை வெளியிலிருந்து வாங்க வேண்டியதில்லை. காரணம், வெளியிலிருந்து வாங்கும்போது எண்ணெய்யின் தரம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

 

மறக்காமல் இந்த ஸ்மைலியை வீட்டிலேயே தயாரித்து பார்க்கவும். நீங்களே தயாரித்த ஹோம்மேட் உருளைக்கிழங்கு ஸ்மைலியின் புகைப்படத்தை மறக்காமல் ஷேர் செய்யவும். எப்படி இருக்கிறது என்ற உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும். கேட்க ஆவலுடன் இருக்கிறோம்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.