கர்ப்ப கால சுகாதாரம் – ஏன்? எப்படி?

கர்ப்ப கால சுகாதாரம் – ஏன்? எப்படி?

13 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

எப்படி சத்துள்ள உணவுகளை உண்பதும் தூய்மையான ஆடையை உடுத்துவதும் முக்கியமோ, அதே போல தனிப்பட்ட சுகாதாரமும் மிகவும் முக்கியமாகும். சுகாதாரம் என்பது கை கால் கழுவுவது மற்றும் சுத்தமான இடத்தில் இருப்பது மட்டுமல்ல. தனிப்பட்ட சுகாதாரத்திற்கு இன்னும் பற்பல அம்சங்கள் உள்ளன.

 

ஏன் கர்ப்ப காலத்தில் தனிப்பட்ட சுகாதாரம் மிகவும் இன்றியமையாதவை?

 

கர்ப்ப காலங்களிலும் சரி. பிரசவத்திற்கு பின்னும் சரி. உங்களின் ஒவ்வொரு தீர்மானமும் உங்களை மட்டுமல்ல. உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

 

இக்காலங்களில் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பொதுவாகவே குறைவாக இருக்கும். இதற்கு காரணம் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம். கிருமிகளின் தொடர்போ அல்லது ரசாயனத்தின் தொடர்போ, உங்களை மட்டுமல்ல. உங்கள் குழந்தையையும் அதிகளவில் தாக்க வாய்ப்புள்ளது.

 

ஆதலால், தனிப்பட்ட சுகாதாரம் என்பது கர்ப்பிணிகளுக்கும், புதிதாக குழந்தை பிறந்த  தாய்மார்களுக்கும் மிகவுமே இன்றியமையாதது.

 

எப்படி தனிப்பட்ட சுகாதாரத்தை கர்ப்ப காலங்களில் மேற்கொள்ள வேண்டும்?

 

  1. முடி மற்றும் சரும சுகாதாரம்:

 

  • நீங்கள் என்ன உணவு வகை சாப்பிடுகிறீர்களோ, அவற்றின் ஒரு பங்கு கருவிலிருக்கும் உங்கள் குழந்தைக்கே செல்லும்.
  • ஆதலால் சிலருக்கு சருமமும் முடியும் பொலிவிழக்க வாய்ப்புண்டு. சிலருக்கு அதிகளவில் எண்ணெய் சுரக்கவும் வாய்ப்புள்ளது.
  • ஆதலால் அடிக்கடி குளிப்பதே அவசியமாகும். முடிந்தவரை ஒரு நாளில் இரு தடவை குளிப்பது உத்தமம்.
  • மறக்காமல் ஷாம்பூ மற்றும் குளியல் சோப் இயற்கை தன்மை நிறைந்தவையாக இருக்க வேண்டும். செயற்கை பொருட்களைத் தவிர்க்கவும். சுரப்பியின் மாற்றத்தினால், ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
  • ஆனால் ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள். அதிக நேரம் குளியறையில் நேரம் கழிக்க வேண்டாம், குளித்து விட்டு உடனே வெளியே வரவும்.

 

  1. உடைகள்

 

முடிந்தளவு வியர்வையை உறியும் தன்மையுள்ள காட்டன் ஆடைகளை அணியவும். ஆடை உடலோடு ஒட்டி இல்லாமல், காற்றோட்டமாக இருப்பதே நல்லது. அதே போல, மேடேர்நிட்டி பிரா வாங்கும்போது, நல்ல பேடிங் உள்ள பிராவை தேர்ந்தெடுக்கவும். அப்போது தான், அதிகளவு தாய்ப்பால் ஒழுகுவதை அந்த பேட் உறிந்துவிடும்.

 

  1. தனிப்பட்ட சுகாதாரம்

 

உங்கள் உடலை நன்றாக பார்த்துக்கொள்ளவும், முக்கியமாக உங்கள் அந்தரங்க பகுதியை. இயற்கைதன்மை நிறைந்த சோப்பை யோனிப்பகுதியில் பயன்படுத்தவும். அதே போல, சாப்பிடும் முன் மறக்காமல் கை கழுவவும். சேநிடைசெர் எல்லா நேரமும் மறக்காமல் பயன்படுத்தவும்.

 

  1. பற்களின் சுகாதாரம்

 

கர்ப்ப காலங்களில் நீங்கள் எது சாப்பிட்டாலும், கருவிலுள்ள உங்கள் குழந்தையும் அதுதான் சாப்பிடுகிறான். ஆதலால், உங்கள் பற்களையும் தவறாமல் நன்றாக பார்த்துக்கொள்ளவும். பல் ஈறுகளில் ஏதேனும் வீக்கம் இருந்தால், மறக்காமல் ஓய்ந்மென்ட் பயன்படுத்தவும். சில நேரங்களில், உடலில் ஈஸ்டிரோஜென் அளவு அதிகமாவதால், பற்களில் பிரச்சனை ஏற்படலாம். ஆதலால் மறக்காமல் ஒரு நாளில் இரு தடவை பல் துலக்க வேண்டும். அதே போல, சாப்பிட்டு முடித்தவுடன் மறக்காமல் கொப்பளிக்கவும்.

 

  1. மார்பக சுகாதாரம்:

 

முதல் ட்ரைமெஸ்டேரின் முடிவில் கொலோஸ்ட்ரம் மார்பகத்திலிருந்து வெளியேற ஆரம்பிக்கும். அடிக்கடி இதனை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், மார்பில் அரிப்பு வர வாய்ப்பு உள்ளது. அடிக்கடி பிராவை மாற்றுவது நல்லது. நிப்பிளில் ஏதேனும் காயம் இருந்தால், லோஷனை தேய்க்கவும்.

 

பொதுவாக சுகாதாரம் மிகவும் இன்றியமையாதது. கர்ப்ப காலங்களில் அதன் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகமாக இருக்கும். சீக்கிரமாகவே குழந்தை பிறந்து தாய்ப்பாலூட்ட போவதால், கர்ப்பம் ஆன நாள் முதற்கொண்டு சுகாதாரத்தை பின்பற்றுவது மிகவும் அவசியம்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you