எல்லோருக்கான சாம்பியன் உணவு - கேழ்வரகு மோர்க்களி

cover-image
எல்லோருக்கான சாம்பியன் உணவு - கேழ்வரகு மோர்க்களி

கேழ்வரகு என்பது தமிழ் கலாச்சாரத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேழ்வரகு கூழ் இல்லாமல் அம்மன் கோயில் திருவிழாக்களும் நாம் எங்கேயும் கண்டதில்லை. அம்மனுக்கு பிடித்த உணவே கேழ்வரகு கூழ்தான். கூழை அம்மனுக்கு பிரசாதமாக தந்தால், அம்மன் நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. ஆதலால்தான், ஆடி மாத அம்மன் திருவிழாக்களில் கேழ்வரகு கூழ்தான் பிரசாதமாக கிடைக்கின்றது. இது ஆன்மீக ரீதியான காரணம். கேழ்வரகின் பயன் என்ன என்பதை பின்வருமாறு காண்போம்.

 

கேழ்வரகு மோர்க்களியின் பயன்கள் என்ன? 

கேழ்வரகு என்பது ஒரு சாம்பியன் உணவு என்றே கூறலாம். பொதுவாக,  கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் மிகவும் சக்தி இழந்து சோர்வுடன் இருப்பார்கள். கேழ்வரகு அதிக புத்துணர்ச்சி கொடுக்கும். ரத்தசோகை இருந்தால் அதையும் குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

கேழ்விரகில், பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும்  மினரல்கள் அதிகம் உள்ளன. இவ்வுணவு எளிதில்  ஜீரணமாகும். இது பச்சிளங் குழந்தைக்கு உகந்த ஒரு உணவாகும், 6 மாதம் முதற்கொண்டு குழந்தைக்கு இந்த உணவை கொடுக்கலாம். 

88% அதிக இரும்புச் சத்து உள்ளதால், தாய்ப்பாலின் சுரப்பும் அதிகமாக இருக்கும் 

க்லூடன் அலர்ஜி இருக்கிறவர்களுக்கும் கேழ்விரகை பரிமாறலாம். இதில் க்லூடன் முற்றிலும் கிடையாது.

 

100 கிராம் சம அளவுக்கான ஊட்டச்சத்து அட்டவணை 

புரதம் – 7.3

நார் – 3.6

சர்க்கரை – 7.2

கேல்ஷியம் - 344

மினரல் – 2.7

வைட்டமின் - 420

பாஸ்பரஸ் - 283

கொழுப்பு – 1.3

 

தேவையானவை 

 • இரண்டு கப் கேழ்வரகு மாவு
 • நான்கு கப் மோர்
 • ஐம்பது கிராம் சின்ன வெங்காயம்
 • ஒரு டீஸ்பூன் கடுகு
 • ஒரு இஞ்ச் துண்டு
 • இரண்டு பச்சைமிளகாய்
 • நான்கு கப் தண்ணீர்
 • 1 டீஸ்பூன் எண்ணெய்
 • தேவையான அளவு உப்பு

 

செயல்முறை: 

 • ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, மோர், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து கரைக்கவும்.
 • பிறகு இஞ்சி, வெங்காயம்,  பச்சைமிளகாய் ஆகிய மூன்று பொருட்களை நன்றாக பொடியாக நறுக்கவும்.
 • மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தீயேற்றவும்
 • அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு இட்டு தாளிக்கவும்
 • அதனுடன், நறுக்கி வைத்த இஞ்சி, வெங்காயம், மற்றும் பச்சைமிளகாய் கூட்டை சேர்த்து வதக்கவும்.
 • நன்றாக வதக்கிய பிறகு, தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
 • கொதித்த பிறகு, கேழ்வரகு மாவு மற்றும் மோரின் கலவையை ஊற்றி மாவு வேகும் வரை கிளறவும். அதற்கு பின், இறக்கி வைக்கவும்.
 • கேழ்வரகு மோர்க்களி ரெடி!!

 

இந்த கோடை காலத்தில் கேழ்வரகு மோர்க்களி சாப்பிடுவதற்கு நல்ல சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். சாப்பிட்டு பார்த்து மறக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யவும். 

பேனர் படம்: telugufoodrecipes 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!