• Home  /  
  • Learn  /  
  • கர்ப்ப கால சுற்று தசைநார் வலியா? – கவனிக்கவேண்டியவை!!
கர்ப்ப கால சுற்று தசைநார் வலியா? – கவனிக்கவேண்டியவை!!

கர்ப்ப கால சுற்று தசைநார் வலியா? – கவனிக்கவேண்டியவை!!

16 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

கர்ப்ப கால சுற்று தசைநார் வலி என்றால் என்ன?

 

  • அடிவயிற்றில் அல்லது இடுப்பு பாகத்தில் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கமோ சுருக்கென்று வலி ஏற்பட்டால், அதற்கு கர்ப்ப கால சுற்று தசைநார் வலி என்று அர்த்தம்.
  • பொதுவாக கர்ப்ப காலங்களில் இந்த அறிகுறியை எல்லோரும் அனுபவிப்பார்கள்
  • இரண்டாவது ட்ரைமெஸ்டேரில், இந்த அறிகுறியை கர்ப்பிணிகளில் காணலாம்.
  • கர்ப்ப கால சுற்று தசைநார் வலி ஏற்பட காரணம் என்ன?
  • கருவிலிருக்கும் குழந்தையை தாங்க தசைநார்கள் கர்ப்பப்பையை சுற்றியிருக்கும். அதிலொன்றுதான் சுற்று தசைநார்.
  • சுற்று தசைநார் கருவின் முன்பாகத்தை, இடுப்புடன் இணைக்கிறது. பொதுவாக  கருவில் உள்ள குழந்தை வளர வளர, இந்த சுற்று தசைநார் அதிகளவில் விரிந்து கொடுக்கும். அத்துடன் சுற்றி உள்ள எலும்புகளை இடிப்பதால், வலி ஏற்படுகிறது.

 

கர்ப்ப கால சுற்று தசைநார் வலியின் அறிகுறிகள் என்ன?

 

  • வலியுடன் சட்டென்று அடிவயிற்றில் இழுத்து பிடிப்பது போல் தோன்றும்
  • பொதுவாக வலது பக்கத்தில் வலி ஏற்படும்; சில நேரங்களில் இரு பாகத்திலும் வலி ஏற்படும்.
  • உடற்பயிற்சியும் சுற்று தசைநார் வலியை ஏற்படுத்தும்
  • அதுமட்டுமல்லாமல், கீழ்க்கண்ட செயல்களை மேற்கொள்ளும்போதும் வலி ஏற்படும்
  • தும்மல்
  • இருமல்
  • குலுங்கி சிரித்தல்
  • படுக்கையில் உருளுதல்
  • நிதானமாக இல்லாமல் சட்டென்று எழுந்து நிற்ப்பது

 

கர்ப்ப கால சுற்று தசைநார் வலிக்கு சிகிச்சை என்ன?

 

  • வலி நிவாரணி மருந்தை உட்கொள்ளலாம். ஆனால், மருத்துவரை மறக்காமல் கேட்கவும்
  • யோகா போன்ற உடற்பயிற்சியை மேற்கொள்ளவும். நீட்சி உடற்பயிற்சியையும் மறக்காமல் மேற்கொள்ளவும்.
  • சட்டென்று வேகமாக எதையும் செய்யாதீர்கள். நிதானத்தை மேற்கொள்ளவும்
  • தும்மல், இருமல் மற்றும் சிரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் முன், வயிற்றையும் இடுப்பையும் கையால் பிடித்துக்கொள்ள வேண்டும்
  • லேசு சூட்டால்ஒத்தடம் கொடுக்கவும். அதிகளவு சூடு வேண்டாம்
  • அதிக சிரமமுள்ள செயல்களை மேற்கொள்ளாதீர்கள்

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

 

  • சுற்று தசைநார் வலியுடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகவும்.
  • அதிகளவு மற்றும் அதிக நேர வலி
  • காய்ச்சல்
  • குளிர்
  • சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல்
  • நடக்கும்போது சிரமம் ஏற்படுதல்
  • இவையல்லாமல், நஞ்சுக்கொடியில் கீரல் போன்ற கர்ப்பகால அபாயங்களினாலும் அதிகளவு சுற்று தசைநார் வலி ஏற்படுகிறது. வயிறு அல்லது சிறுநீரக கோளாறு, குடல் கோளாறு மற்றும் குடலிறக்கம் ஆகிய மூன்று கோளாறுகளினாலும் சுற்று தசைநார் வலி ஏற்படும்.

 

சிலர் சுற்று தசைநார் வலியை குறைப்பிரசவம் என்று தப்பாக எண்ணுவார்கள். ஆதலால், மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியமாகிறது.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.