கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் கர்ப்ப கருவிகள்

cover-image
கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் கர்ப்ப கருவிகள்

 

கர்ப்பிணியாக இருக்கும் எந்த ஒரு பெண்ணும் பிரசவ நேரம் நெருங்க நெருங்க பதற்றமாக இருப்பார். இந்த நேரத்தில் அவர்களுக்கு தேவை அதிகளவில் ஆறுதல். புதிதாக வந்துள்ள இந்த கண்டுபிடிப்புகளால்தான், கர்ப்பிணிகளின் ஒன்பது மாதங்கள் நிம்மதியாகவும் குறைவான மன அழுத்தத்துடனும் இருக்கிறது.

 

இக்காலத்தில் பயன்படுகிற அந்த 5 கர்ப்ப கருவிகள் என்னவென்று நாம் விரிவாக காண்போம்.

 

கருவில் உள்ள குழந்தையை கண்காணிக்க உதவும் கருவி

 

குழந்தையின் இதய துடிப்பை கேட்க ஒவ்வொரு தடவையும் நீங்கள் டாக்டரை அணுக வேண்டியதில்லை. அதிகளவில் பற்பல பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இந்த கைக்கருவி உங்களிடம் இருந்தால், உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் இதய துடிப்பை எப்போது  வேண்டுமானாலும் கேட்கலாம். இதில் ரேகார்டரும் இருப்பதால், உங்கள் குடும்பத்தில் இருக்கிற அனைவருக்கும் நீங்கள் கேட்பிக்கலாம்.

 

கர்ப்ப கால ஹெட்ஃபோன்கள்

 

இந்த ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தி நீங்களும் உங்கள் கருவில் இருக்கிற குழந்தையும் பாட்டு கேட்கலாம். இந்த கருவியில் மாட்டல் ஒன்று இருக்கிறதால், அதனை உங்கள் வயிற்றில் மாட்டிக்கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் உங்களின் கருவிலிருக்கும் குழந்தைக்கும் கேட்பிக்கலாம். இதில் ரேகார்டரும் இருப்பதால், ஏதேனும் இனிமையான சத்தத்தை ரெகார்ட் செய்து உங்கள் குழந்தைக்கு கேட்பிக்கலாம்.

 

பேபி கிக் மொனிடர்

 

குழந்தை உதைக்கும்போது தான் அவன் நல்லவிதமாக உயிரோடு இருக்கிறான் என்று தெரிகிறது. ஆதலால், அந்த உதையே மனதுக்கு சுகத்தை தரும். குழந்தையின் உதைக்கும் பழக்கத்தை இந்த கருவியைப் பயன்படுத்தி கண்காணிக்கலாம். முக்கியமாக பிரசவ தேதி நெருங்க நெருங்க இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக மாறும். கர்ப்பப்பை அதிகமாக சுருங்கி விரிந்தால், குழந்தையின் உதையும் அதிகரிக்கும் என்பது வழக்கம். ஆதலால், உதையின் வேகத்தை இந்த கருவியால் கண்காணித்து, அந்த முக்கியமான நாளுக்காக தயாராக தொடங்கலாம்.

 

குமட்டலிலிருந்து தீர்வு தரும் பயோ பான்ட்

 

காலை நேர குமட்டல் அதிகமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இந்த கருவி அக்குபிரஷர் மூலமாக உங்களுக்கு குமட்டலிலிருந்து தீர்வு கொடுக்கும். இதில் உள்ள சின்ன சின்ன முத்துக்கள் உங்கள் நாடியை அழுத்தி, குமட்டலிலிருந்து உடனடி தீர்வு கொடுக்கும். இதில் எந்த விதமான அபாயமும் இல்லை. எந்தவித ரசாயன கலவையும் இல்லை.

 

குழந்தை வளர்ப்பை தெரிவிக்கும் கடிகாரம்

 

இந்த கடிகாரம் உங்கள் கர்ப்ப வார எண்ணிக்கையை காட்டித்தரும். உங்கள் குழந்தைக்கான தகுந்த பேரைத் தேடிக்கொண்டிருந்தாலும், இந்த கருவி உங்களை சரிவர உதவி செய்யும்.

 

மேலே குறிப்பிட்ட அனைத்தும் கர்ப்ப கால வாழ்வில் இன்றியமையாதவை என்று கூற முடியாது. ஆனால், இவையனைத்தும் இருந்தால், கர்ப்பிணிகளுக்கு சற்று அதிகளவில் சவுகரியம் ஏற்படும் என்ற எண்ணத்தில் இந்த 5 கருவிகளைப் பற்றி விவரித்துள்ளோம்.

 

இவையல்லாமல் உங்களுக்கு வேறு ஏதேனும் கர்ப்ப கால கருவி தெரிந்திருந்தால், மறக்காமல் அதன் பெயரையும் பயனையும் எங்களுக்கு தெரிவிக்கவும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!