கர்ப்ப காலத்தில் ஈறுகளிலிருந்து ரத்தம் வருகிறதா? - என்ன செய்வது?

 

கர்ப்ப காலத்தில் ஈறுகளிலிருந்து ரத்தம் வருவது சாதாரணமா?

 

 • சராசரி 50% கர்ப்பிணிகளுக்கு ஈறுகள் திடமில்லாமல் போய்விடுகிறது. ஈறுகள் வீங்கிவிடும். பல் துலக்கினாலும், கொப்பளித்தாலும் ஈறுகளிலிருந்து ரத்தம் வெளியேறும். இதனை ‘கர்ப்ப கால ஜின்ஜைவிடிஸ்’ என்று மருத்துவர்கள் கூறுவர்.
 • கர்ப்ப காலத்தில் சுரப்பிகளின் அளவில் மாறுதல் ஏற்படுவதால், சட்டென்று ஈறுகள் கிருமிகளுக்கு அடிமையாகி விடுகின்றன.
 • ஈறுகளில் சில நேரம் கொப்பளமும் வந்துவிடும். பல் துலக்கும் போது, ஈறுகளில் அழுத்தம் ஏற்படுவதால், ரத்தம் வரும். இதனை கர்ப்பகால பல் கட்டி என்று கூறுவர். ஆனால் எந்த விதத்திலும் வலியோ ஆபத்தோ ஏற்படாது. இந்த கட்டிகள் கர்ப்ப காலங்களில் எந்த பகுதியிலும் வரலாம். ஆனால் பொதுவாக, எல்லா கர்ப்பிணிகளுக்கும் இந்த கட்டி வாயில் தென்படும்.
 • மூன்றேகால் அளவு இன்ச் வரை வளரும். குழந்தை பிறந்தவுடன், இந்த கட்டி காணாமல் போய்விடும்.
 • சாப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும்

 

இந்த கர்ப்ப கால ஜின்ஜைவிடிஸ் கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்குமா?

 

 • கர்ப்ப கால ஜின்ஜைவிடிஸ் உங்களையோ உங்கள் கருவிலிருக்கும் குழந்தையையோ எந்த விதத்திலும் பாதிக்காது.
 • சரியான முறையில் பல் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

 

கர்ப்ப கால ஜின்ஜைவிடிஸ் இருந்தால் குறைப்பிரசவம் ஏற்படுமா?

 

 • கர்ப்ப கால ஜின்ஜைவிடிஸ் இருந்தால் குறைப்பிரசவம் மட்டுமல்ல; எடை குறைவான குழந்தை மற்றும் ப்ரீஎக்லாம்ப்ஸியாவும் ஏற்படும். இந்த கருத்தில் உண்மையிருக்கிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில ஆய்வுகள் இது முற்றிலும் தவறு என்று தெரிவிக்கின்றன.
 • என்ன இருந்தாலும் இந்த ஈறு கோளாறு ஒரு அபாயக்குறியாக தான் கருதப்படுகிறது.

 

கர்ப்ப காலத்தில் எப்படி பற்களையும் ஈறுகளையும் பாதுகாப்பது?

 

 • பற்களை ஒரு நாளில் இரு முறை மறக்காமல் துலக்கவும்.
 • இரவில் உணவு சாப்பிட்ட பிறகு, பல் துலக்கவும்
 • மென்மையான பிரஷையும் ஃப்ளூரைட் இருக்கின்ற டூத்பேஸ்ட்டையும் பயன்படுத்தவும்
 • கொப்பளிக்க மறக்காதீர்கள்
 • ஃப்ளூரைட் உள்ள மவுத் ஃப்ரெஷ்நெரை அடிக்கடி பயன்படுத்தவும்
 • பல் மருத்துவரை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மறக்காமல் சந்திக்கவும். அவரின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்து கொள்ளவும்
 • கர்ப்ப காலத்தில் பல் மருத்துவர் பற்களை ப்ளீச் செய்ய வேண்டும் என்று கூறினால், தயங்காமல் செய்யவும்
 • ஏற்கனவே பற்களில் கோளாறு இருந்தால், மறக்காமல் பல் மருத்துவரை அணுகவும்

 

கர்ப்ப காலத்தில் பற்களில் கோளாறு இருந்தாலும், எப்போது பல் மருத்துவரை அணுக வேண்டும்?

 

 • பல் வலி
 • ஈறு வலி மற்றும் ஈறுகளிலிருந்து ரத்தப்போக்கு
 • ஈறுகளில் வீக்கம்
 • பற்களிலிருந்து கெட்ட வாசனை
 • திடம் இல்லாத பற்கள்
 • வாயில் கட்டி

 

மேலே கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால், பல் மருத்துவரை கர்ப்பிணிகள் உடனே அணுக வேண்டும்

 

#babychakratamil

Pregnancy

தமிழ்

Leave a Comment

Comments (2)Sagana Devi

Daily I m getting blood while brushing. . Wat to do doctor

Sagana Devi

Daily I m getting blood from my mouth.. Wat to do doctor

Recommended Articles