காஃபின் என்பது இந்தியர்கள் பலரும் விருப்பத்துடன் அருந்தும் பானம். ஆனால், நீங்கள் கர்ப்பமாக இருந்தால், காஃபின் இருக்கிற காபியை அதிகளவில் அருந்துவது சரியா? ஆபத்து இல்லை. ஆனால், அளவில் நல்ல கட்டுப்பாடு தேவை.
காஃபின் பற்றின சில விவரங்கள்:
- காஃபின்நம் உடலில் ஒரு விதமான தூண்டுதலை உண்டாக்கும். சில நேரங்களில், ரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பையும் அதிகரிக்கும். ஆதலால், கர்ப்ப காலங்களில் சற்று கவனிப்புடன் இருக்க வேண்டும்.
- காஃபின் அருந்துவதால், அதிகளவில் சிறுநீர் கழிப்பீர்கள். ஆதலால், உங்களில் தேகத்தில் நீர் அளவில் குறைபாடு ஏற்பட்டு, உடல் வறட்சி உண்டாக்கும்.
- காஃபின் அருந்தினால் தூக்கம் வராது. இது உண்மைதான். ஆதலால், கர்ப்பிணிகள் இந்த பானத்தை அருந்தும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தான் விழித்திருப்பது மட்டுமல்லாது குழந்தையும் கருவில் தூங்காமல் விழித்திருக்கும்.
- காஃபின் என்பது காபியில் மட்டுமல்ல. டீ, சோடா, சாக்லேட் மற்றும் சில மருந்துகளில் இருக்கின்றன. ஆதலால், இவை அனைத்தையும் அருந்தும்போது, கவனமாக இருக்கவும்.
உண்மையா? பொய்யா?
- காஃபின் பற்பல பிறப்பு கோளாறுகளை ஏற்படுத்துமா?
காஃபின் மிருகங்களில் பற்பல பிறப்பு கோளாறுகளையும், குறைப்பிரசவத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால், மனிதர்களில் அது சரியாக புலப்படவில்லை. ஆதலால், கவனமாக இருப்பதே உகந்தது.
- காஃபின் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?
ஆம், அதிகளவில் காஃபின் அருந்தினால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கிறது
- காஃபின் கருச்சிதைவு ஏற்படுத்துமா?
- 2008 ஆம் ஆண்டில் இந்த தலைப்பில் இரண்டு ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் இவற்றின் முடிவு முற்றிலும் வேறுபட்டுள்ளன.
- ஒரு ஆய்வில் ஒவ்வொரு நாளும் 200 மில்லிகிராம் அல்லது அதைவிட அதிகளவில் காஃபின் அருந்தினால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைப் பார்க்க அதிகம் என்று தெரிவிக்கிறது.
- மற்றொரு ஆய்வில் ஒவ்வொரு நாளும் 200-350 மில்லிகிராம் அளவில் காஃபின் அருந்துவதால், கருச்சிதைவு ஏற்படுமளவு அபாயமில்லை என்று தெரிவிக்கிறது.
- ஆதலால் இதற்கு முடிவாக 200 மில்லிகிராம் விட குறைவாக காஃபின் அருந்த வேண்டும் என்பதே கருத்து.
- துளி கூட கர்ப்பிணிகள் காஃபின் அருந்த கூடாதா?
- அளவு மீறாமல் இருந்தால் எந்த வித அபாயமும் இல்லை என்று தான் எல்லோரும் தெரிவிக்கின்றனர். அந்த அளவு என்பது ஒரு நாளில் 150 முதல் 200 மில்லிகிராம், அதுவே சரியான அளவு.
- ஆனாலும் முடிந்தவரை, கர்ப்ப காலங்களிலும் தாய்ப்பாலூட்டும் காலங்களிலும் காஃபின் அருந்துவதை தவிர்ப்பதே நல்லது.
என்னவாக இருந்தாலும், உங்களின் காஃபின் அருந்தும் அளவை மறக்காமல் மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது. அவரின் ஆலோசனை படி கேட்டு நடந்து கொள்ளவும்.
#babychakratamil