பிரசவ நேரத்தில் உதவும் தௌலா – தேவையா?

பிரசவ நேரத்தில் உதவும் தௌலா – தேவையா?

16 May 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

 

தௌலா என்பவர் யார்?

 

 • ‘தௌலா’ என்ற கிரேக்க சொல்லுக்கு ‘உதவும் பெண்’ என்று பொருள். பிரசவ நேரத்தில், தௌலா என்பவர் கர்ப்பிணிகளுக்கு தகுந்த மனரீதியான ஆதரவும், உடல்ரீதியான ஆதரவும், சரியான தகவல்களையும் தருவார்கள்.
 • நமது பழங்காலங்களில் தௌலாக்களின் தக்க ஆதரவால் தான், கர்ப்பிணிகளால் தைரியமாக குழந்தை பெற முடிந்தது.

 

தௌலா என்ன செய்வார்?

 

 • நிம்மதியான நேர்மறையான பிரசவத்திற்கு தௌலா தகுந்த உதவி செய்வார். பிரசவத்திற்கு முன், கர்ப்பிணிகள் எந்த உணவுகளை உண்ண வேண்டும்; எப்படி பிரசவத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கூடவே இருந்து கர்ப்பிணிகளை உதவுவார்கள்.
 • சில நேரங்களில், நீங்கள் டாக்டருடனோ அல்லது நர்ஸ்களுடனோ நல்ல உறவில்  இல்லாத பட்சத்தில், இந்த தௌலாதான் மத்தியஸ்தராக பணியாற்றுவார்.
 • அதுமட்டுமல்லாமல், கீழ்க்கண்ட எல்லாவற்றையும் சொல்லித்தர தௌலா உதவி செய்வார்.

 

  • மூச்சு விடும் முறை
  • ஓய்வு முறை
  • பிரசவ முறை
  • மசாஜ் முறை
  • உணவு முறை
  • மருத்துவமனை சேர்த்தல்

 

தௌலா இருப்பதன் பயன்கள் என்ன?

 

 • தௌலாவின் தொடர் ஆதரவு இருக்குந்தோரும் சுகப்பிரசவத்தின் வாய்ப்பு அதிகம் என்று 2012ல் நடந்த ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
 • பொதுவாக நல்லதொரு பிரசவ நினைவு ஏற்படும்
 • அதிகளவில் வெற்றிகரமான தாய்ப்பாலூட்டல் காணப்படும்
 • தன்னம்பிக்கை பிறக்கும்
 • பிரசவ நேரத்தில் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
 • பிரசவ வலியும் குறைவாக இருக்கும்
 • கர்ப்பிணியை மற்றுமல்லாது அவரின் குடும்பத்திற்கும் தகுந்த ஆதரவாளராக இருப்பார்

 

தௌலா மற்றும் மருத்துவச்சிக்கும் வேறுபாடு என்ன?

 

 • மருத்துவச்சி என்பவள் தகுந்த பயிற்சி எடுக்கப்பட்டவள். நர்ஸ் போன்று இவர் செயல்படுவார். பிரசவம் முதல் தாய்ப்பாலூட்டுதல் வரை மருத்துவச்சி உங்களுக்கு பயிற்சி அளிப்பார்.
 • ஆனால் தௌலா அப்படியல்ல. நீங்கள் கர்ப்பிணியான நாள் முதற்கொண்டு தாய்ப்பாலூட்டுதல் வரை, உங்கள் கூடவே வருவாள். தௌலாக்களுக்கு பொதுவாக சொல்லத்தக்க வண்ணம் எந்த படிப்பும் இல்லை.
 • அனுபவம் தான் அவளின் படிப்பு.

 

தௌலாவும் தந்தையும் சேர்ந்து எப்படி பணியாற்றுவர்?

 

 • உங்களின் பிரசவ நேரத்தில், தௌலா உங்கள் கணவருடன் சேர்ந்து உங்களுக்கு தகுந்த ஆதரவைத் தருவார். எடுத்துக்காட்டாக, நீங்கள் கணவரின் தோள் சாயும்போது, தௌலா உங்களின் முதுகை மசாஜ் செய்வர்.
 • பொதுவாக வீட்டில் பெரியவர்கள் இல்லாத தருணத்தில், கணவர் தனியாக இருப்பார். பல நேரங்களிலும் தன் கர்ப்பிணியான மனைவிக்கு எப்படி ஆறுதல் தருவது என்று தெரியாது. அந்நேரங்களில், தௌலா உதவிக்கு வருவாள்.
 • பிரசவ நேரத்தில், மருத்துவமனையிலும் தௌலா உதவியாக இருப்பாள்.

 

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் கணவருக்கு உங்களை மட்டும்தான் தெரியும். ஆனால், தௌலாவுக்கு குழந்தை பிறப்பு என்னவென்று தெளிவாக தெரியும். இருவரும் சேர்ந்தால், கர்ப்பிணிகளுக்கு சவுகரியம்தான்.

 

பேனர் படம்: birthindia

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you