- கொத்து பரோட்டா தமிழ் நாட்டில் மட்டுமே கிடைக்கும் உணவாகும். ஆனால், இதன் உறைவிடம் என்பது கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் விருதுநகரே ஆகும். தமிழகத்தில் மற்ற இடங்களைப் பார்க்க, இந்த ஊர்களில் ருசி சற்று அதிகம். அதே போல, பெயருக்கு ஏற்றவாறு இந்த ஊர்களில் நன்றாக பரோட்டாவை கொத்தி இருப்பார்கள்.
- பொதுவாக இதனை மிஞ்சியுள்ள பரோட்டாவில் தயாரிப்பார்கள். பரோட்டாவை கொத்தி முட்டை அல்லது சிக்கன், வெங்காயம் மற்றும் மிளகாயை சேர்க்க வேண்டும்.
- கன்னியாகுமரி ஸ்பெஷல் முட்டை கொத்து பரோட்டாவை எப்படி தயாரிப்பது என்பதை நாம் காண்போம்.
முட்டை கொத்து பரோட்டா ரெசிபி:
- ஆயத்த நேரம் – 10 நிமிடங்கள்
- தயாரிக்கும் நேரம் – 15 நிமிடங்கள்
- பரிமாறும் அளவு – 4
- தேவையானவை:
- பரோட்டா – 4
- பெரிய வெங்காயம் – 2 (நீள வாக்கில் வெட்டவும்)
- பெரிய தக்காளி – 1 (நன்றாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4
- கரம் மசாலா – 2 டீஸ்பூன்
- முட்டை – 2-3
- கடுகு – கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 5
- புதினா இலை – 5-6
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
செயல்முறை
- பரோட்டாவை நன்றாக கொத்தி வைக்கவும்
- எண்ணெய்யை வாணலியில் சூடாக்கவும். பிறகு, கடுகு மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்
- வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை லேசான பிரவுன் நிறமாகும் வரை வதக்கவும்
- பிறகு தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- பிறகு கரம் மசாலா, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் புதினாவை சேர்க்கவும்
- இந்த கலவையுடன் கொத்திய பரோட்டாவையும் சேர்த்து நன்றாக கலக்கவும். 5 நிமிடங்கள் வரை சமைக்கவும்
- முட்டையை சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்
- கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். கொத்து பரோட்டா தயார்!!
இந்த கன்னியாகுமரி விருதுநகர் ஸ்பெஷல் உணவை வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டு பார்க்கவும். எப்படி இருக்கிறது என்று உங்கள் அனுபவத்தை பரிமாறவும்.
பேனர் படம்: yummyfoodrecipes
#babychakratamil