16 May 2019 | 1 min Read
Dr. Mrinalini
Author | 86 Articles
குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்காக டயப்பர், ஆடைகள், தொட்டில், முதலியன உடனடியாக வாங்க வேண்டும். அதே போல, தாய்மார்களுக்கு முக்கியமாக மேடேர்நிட்டி பிராஸ் வாங்க வேண்டியது மிகவும் அவசியம். சிலர் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு முதலிலேயே வாங்கி வைப்பார்கள். சிலர் குழந்தை பிறந்த பின்னரே வாங்குவார்கள்.
ஏன் மேடேர்நிட்டி பிரா மிகவும் அவசியமானது?
பொதுவாக குழந்தை பிறந்தவுடன் தாய்மார்கள் பிரா அணிய மாட்டார்கள். காரணம், அவர்களுக்கு அடிக்கடி குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டி இருக்கிறது. பிராவை எப்போதும் கழற்றி அணிவதற்கு சோம்பேறித்தனமாக இருக்கிறது. ஆதலால், அதனை பலரும் அணிவதில்லை.
ஆனால் அது முற்றிலும் தவறு. பிரா அணியாமலிருந்தால், மார்பு தொங்கிவிடும். உங்கள் மார்பு தோற்றத்தை முற்றிலும் கெடுத்துவிடும். ஆதலால், அந்த தவறை ஒரு போதும் செய்யாதீர்கள்.
பிறகு என்ன செய்யலாம்?
இப்போது மார்க்கெட்டில் பலவிதமான சவுகரியம் நிறைந்த பிராக்கள் தாய்மார்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்று முதலில் நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, மேடேர்நிட்டி பிரா என்று எல்லாரும் குறிப்பாக அழைப்பார்கள். அதை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம்.
எத்தனை விதமான மேடேர்நிட்டி பிராக்கள் மார்க்கெட்டில் உள்ளன?
உங்களின் தேவைக்கும் சவுகரியத்துக்கும் ஏற்ப பற்பல மேடேர்நிட்டி பிராக்கள் மார்க்கெட்டில் கிடைக்கப்படுகின்றன. அவற்றில் சிறந்த நான்கு வகை நர்சிங் பிராக்கள் பின்வருமாறு:
1. ஸ்லீப் நர்சிங் பிரா
இந்த பிரா மென்மையான காட்டன் துணியால் நெய்தவையாகும். இரவு நேரத்தில் இதனை அணிந்து கொள்ள முடியும். காரணம், இத்துணி மிகவும் மிருதுவாக இருக்கும். முக்கியமாக சிலருக்கு மார்பகம் மிகவும் பெரிதாக இருப்பதால், இந்த பிரா நல்ல தாங்காக இருக்கும்.
2. மிருதுவான கப் பிரா
இந்த பிராவில் இழுவை தன்மை அதிகமாக இருக்கும் கப் வைத்து தைத்துள்ளதால், மார்பிலிருந்து பால் வெளியேறினால் அந்த கப்பே உறிந்துவிடும். ஆதலால், இந்த பிராவில் ஈரத்தன்மை உணர முடியாது
3. முழுநீள நர்சிங் பிரா
இந்த பிரா மென்மையான காட்டன் துணியால் நெய்தவையாகும். சருமத்திற்கு எந்த வித அரிப்பும் ஏற்படுத்தாது.
4. முன்பாகம் திறந்த நர்சிங் பிரா
சில நர்சிங் பிராக்களில் மார்பு பக்கம் ஒரு ஜிப் வைத்திருப்பார்கள். எப்போதெல்லாம் குழந்தைக்கு பாலூட்ட வேண்டுமோ, அப்போதெல்லாம் அந்த ஜிப்பை கழற்றிக் கொள்ளலாம். ஆதலால், இதனை பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்கும்.
புடவை அணிபவர்களுக்கும் நைட்டி அணிபவர்களுக்கும், முழுவதுமாக பிராவை கழற்ற வேண்டிய அவசியம் வராது. ஆதலால், சிரமமின்றி குழந்தைக்கு பாலூட்டலாம்.
எப்படிப்பட்ட நர்சிங் பிராக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?
பேனர் படம்: amazon
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.