• Home  /  
  • Learn  /  
  • புதிய தந்தையர்களுக்கும் தன் பிறந்த குழந்தையின் மீது பொறாமை ஏற்படலாம் – என்ன செய்வது?
புதிய தந்தையர்களுக்கும் தன் பிறந்த குழந்தையின் மீது பொறாமை ஏற்படலாம் – என்ன செய்வது?

புதிய தந்தையர்களுக்கும் தன் பிறந்த குழந்தையின் மீது பொறாமை ஏற்படலாம் – என்ன செய்வது?

16 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

சட்டென்று இந்த தலைப்பை கேட்டால் பலராலும் ஒப்புக்கொள்ள முடியாது. சிலர் இது முற்றிலும் பொய் என்று எண்ணுவார்கள். ஆனால் அது அப்படி இல்லை. தந்தை ஆன புதிதில் சிலருக்கு தன் பிறந்த குழந்தையின் மீது பொறாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எல்லா நேரமும் இல்லை. ஆனால் ஏதேனும் ஒரு நொடி தருணத்தில் அது நடக்க வாய்ப்பு உள்ளது.

 

பொறாமை ஏற்பட காரணம் என்ன?

 

  • கர்ப்பிணியாகுவதற்கு முன்பு சில பெண்கள் தம் கணவரையே வட்டமிட்டு வருவர். கணவர் சாப்பிட்டாரா? கணவர் நன்றாக தூங்கினாரா? என்றெல்லாம் அன்புத்தொல்லை கொடுப்பார்கள்.
  • ஆனால் அதே பெண்கள் கர்ப்பம் தரித்து குழந்தை பிறந்த பிறகு, அந்த குழந்தையே சுற்றி வருவர்.
  • கணவரால் தனியே எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், பிறந்த குழந்தையின் நிலை அப்படியல்ல. பேசக்கூட தெரியாத பச்சிளம் குழந்தைக்கு முதலில் தாய் தான் ஆதரவு. ஆதலால், தாய்மார்கள் தங்கள் கவனத்தை தம் குழந்தையின் மீது முழுவதுமாக செலுத்துவார்கள்.
  • சட்டென்று தன் மீதிலிருந்த கவனம் அகன்று குழந்தையின் மீது செல்வதால், தன்னை அறியாமல் ஒருவித பொறாமை குணம் கணவர்களுக்கு ஏற்படும்.

 

புது தந்தையர்கள் என்ன செய்ய வேண்டும்?

 

  • முதலில் உங்களுக்கு உங்கள் குழந்தையின் மீது பொறாமை ஏற்பட்டால், உடனே உங்கள் மனைவியிடம் தெரிவியுங்கள்.
  • உங்களை நன்றாக புரிந்த மனைவி உங்களின் மீது கோபப்பட மாட்டார்கள். நிலைமையை புரிந்து தகுந்த தீர்வைத் தருவார்கள்.
  • எப்படி சொல்வது என்று முதலில் நீங்கள் திணறலாம். ஆனாலும், மனதில் வைத்து அதை பெரிது படுத்துவதை விட, வெளியே கூறிவிடுவது நல்லது
  • மனம் விட்டு இதனைக் குறித்து மனைவியிடம் இல்லையென்றால், உங்கள் பெற்றோர்களிடம் அல்லது உங்கள் நண்பர்களிடம் தெரிவிக்கவும். உங்களை நன்றாக புரிந்தவர்கள் என்பதால், உங்களுக்கான தீர்வை கொடுப்பார்கள்.
  • யாரும் இல்லையென்றால், ஒரு மனநல மருத்துவரை அணுகவும். அவரின் ஆலோசனையும் கேட்டு நடக்கவும்.

 

மனம் விட்டு வெளியே சொல்லாமல் இருந்தால் என்ன நடக்கும்?

 

உங்களை அறியாமலையே உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு பெரிய விரிசல் வந்துவிடும். அது உங்கள் வாழ்க்கையை முற்றிலும் தொலைத்து விடும்.

 

குழந்தையுடன் எப்படி தந்தையும் மனரீதியாக நெருங்க வேண்டும்?

 

  • உங்கள் குழந்தையை நீங்களே குளிப்பாட்டவும், டயப்பர் மாற்றவும்.
  • தோளில் இட்டு வெளியே கூட்டிக்கொண்டு செல்லவும்
  • நீங்களே குழந்தையை தொட்டிலில் படுக்க வைக்கவும்
  • நீங்கள் குழந்தையுடன் பேசவும் மற்றும் பாட்டு பாடவும்
  • நீங்களே புட்டிப்பாலில் பாலூட்டவும்.

 

மேற்கூறிய செயல்களை தந்தையர்கள் பின்பற்றினால், குழந்தையுடன் மிகவும் அதிக ஈடுபாடு ஏற்படும்.  பொறாமை ஏற்பட வாய்ப்பே இருக்காது.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.