மினி அடை – இது எப்படி இருக்கு?

மினி அடை – இது எப்படி இருக்கு?

16 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

வெளி மாநில மக்கள் தமிழ் நாட்டு உணவு என்றாலே இட்லி, ஊத்தப்பம் மற்றும் தோசை ஆகிய மூன்று மட்டும் தான் இருக்கிறது என்று எண்ணுகிறார்கள். ஆனால், அது தவறு. அடை என்ற ஒரு பாரம்பரிய பதார்த்தம் இருக்கிறது. இவ்வுணவில் புரதச்சத்து அதிகளவில் உள்ளது. இதனை சாப்பிட்டால், அதிக நேரத்திற்கு பசி எடுக்காது. தமிழர்கள் பலருக்கும் இந்த உணவை தயாரிக்க தெரியாததாலும், தமிழ்நாடு ஹோட்டல்களிலும் அதிகம் இந்த உணவை காணாததால், இந்த சத்து மிக்க உணவை எப்படி தயாரிப்பது என்று நாங்கள் விவரிக்கிறோம்.

 

மினி அடை ரெசிபி

ஆயத்த நேரம் – 10 நிமிடம்

தயாரிக்கும் நேரம் – 30 நிமிடம்

பரிமாறும் அளவு – 6- 8

 

தேவையானவை

அடை மாவு தயாரிப்பு

 

 • அரிசி – 2 கப்
 • கடலை பருப்பு – ½ கப்
 • துவரம்பருப்பு – ½ கப்
 • உளுந்து – ¼ கப்
 • சிவப்பு மிளகாய் – 3
 • பச்சை மிளகாய் – 1
 • உப்பு – தேவையானவை
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • பெருங்காயம் – ¼ டீஸ்பூன்

 

அடையை அலங்கரிக்க தேவையானவை

 

 • நறுக்கிய வெங்காயம் – தேவையானவை
 • நறுக்கிய தக்காளி – தேவையானவை
 • நறுக்கிய வெள்ளரிக்காய் – தேவையானவை
 • இட்லி பொடி – தேவையானவை
 • சீஸ் – தேவையானவை

 

செயல்முறை

 

 • அரிசி, பருப்பு மற்றும் இருவித மிளகாயை கழுவிவிட்டு, 2-3 மணிநேரம் வரை ஊறவைக்கவும்.
 • அடையை காலையில் சாப்பிட வேண்டுமென்றால், முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும்
 • பிறகு, பெருங்காயம் மற்றும் உப்பு இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். தோசை மாவு போல நல்ல மிருதுவாக மாவு இருக்க வேண்டும்
 • கறிவேப்பிலையை வெட்டிவிட்டு மாவுடன் கலக்கவும். பிறகு 3-4 மணிநேரம் வரை, மாவை புளிக்க வைக்கவும்
 • நான்ஸ்டிக் வாணலியை சூடாக்கவும். பிறகு மாவை எடுத்து அடை அளவுக்கு குட்டியாக ஊற்றவும்.
 • உங்களுக்கு பிடித்தவாறு அடையின் மேல் வெங்காயம், தக்காளி, வெள்ளரி, சீஸ் ஆகியவற்றை துருவிவிட்டு மேலாக அலங்கரிக்கவும்.
 • தோசை சுடுவது போலவே எண்ணெய் ஊற்றி, இரு புறமும் அடையை சுட வைக்கவும்.
 • சுட சுட மினி அடை ரெடி!! சாப்பிட்டு பார்க்கவும்.

 

பெரியோர்கள் மற்றும் அல்லாமல் குழந்தைகளும் நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள்.  இதை காலை உணவாகவும், இரவிலும் சாப்பிடலாம். நீங்களும் தயாரித்து உங்கள் குழந்தைக்கும் இந்த உணவை பரிமாறவும். சாப்பிட்டுவிட்டு எப்பத் இருக்கிறது என்று மறக்காமல் கமெண்ட் செய்யவும்.

 

பேனர் படம்: betterbutter

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you