நீங்கள் இந்தியனா? உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறதா? அப்படியென்றால் எப்படி பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டும் என்று உடனே தெரிந்து கொள்ளவும்.
பிறந்த குழந்தைக்கான இந்த சான்றிதழை வாங்குவது எளிது தான். ஆனால் நாட்களை கடத்தினால், உங்களுக்கு இந்த சான்றிதழை எளிதில் பெற முடியாமல் போகும்.
பிறப்பு சான்றிதழின் பயன் என்ன?
- பிறப்பு சான்றிதழ் என்பது குழந்தையின் முதல் அடையாள சான்றிதழாக கருதப்படுகிறது.
- தனது தாய் மற்றும் தந்தை யார் என்று முதன்முதலாக குறிப்பிடுவதே இந்த சான்றிதழ்தான்.
- இந்த சான்றிதழ் ஒருவரின் வயதையும் கணக்கெடுக்க பயன்படும். இது ஒரு வயதிற்கான ஆதாரமாக கருதப்படுகிறது.
- குழந்தையை பள்ளியில் மற்றும் கல்லூரியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் மிகவும் அவசியம்.
- அடுத்து பெற போகும் ரேஷன் கார்டு, பேன் கார்டு, ஆதார் கார்டு, வோட்டர் கார்டு மற்றும் பாஸ்போர்ட் பெருவதற்கெல்லாம் இந்த சான்றிதழ் பயன்படுகின்றது.
- பிற்காலத்தில் பரம்பரை சொத்து மாற்றத்திற்கு இது மிகவும் முக்கியம்
பிறப்பு சான்றிதழ் பெற என்ன ஆவணங்கள் தேவை?
- பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழ்கள்
- தாயின் பிரசவம் நடந்த மருத்துவமனையிலிருந்து கிடைக்கும் பிறப்பைக் குறித்த ஆதாரம்
- பெற்றோர்களின் அடையாள சான்றிதழ்கள்
- பெற்றோர்களின் திருமண சான்றிதழ்கள்
குழந்தையின் பிறப்பை யார் பதிவு செய்ய வேண்டும்?
- குழந்தையின் பிறப்பு வீட்டில் ஏற்பட்டால், வீட்டிலுள்ள மூத்தவர் அல்லது சொந்தக்காரர் பதிவு செய்ய வேண்டும்
- குழந்தையின் பிறப்பு ஓடும் வண்டியில் ஏற்பட்டால், அந்த வண்டியின் உரிமையாளர் பதிவு செய்ய வேண்டும்
- குழந்தையின் பிறப்பு தர்ம சாலையில் ஏற்பட்டால், அதன் உரிமையாளர் பதிவு செய்ய வேண்டும்
- ஒரு குழந்தை யாருமில்லாமல் தனியே சாலையில் காணப்பட்டால், அந்த ஊரின் போலீஸ் இன்சார்ஜ் பதிவு செய்ய வேண்டும்
- குழந்தையின் பிறப்பு சிறைச்சாலையில் ஏற்பட்டால், அந்த சிறைச்சாலையின் உரிமையாளர் பதிவு செய்ய வேண்டும்
- குழந்தையின் பிறப்பு நர்சிங்ஹோம்மில் ஏற்பட்டால், அந்த ஹோம்மின் உரிமையாளர் பதிவு செய்ய வேண்டும்
- குழந்தையின் பிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்டால், அந்த மருத்துவமனையின் உரிமையாளர் பதிவு செய்ய வேண்டும்
பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ய விலை என்ன?
- பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ய கட்டண விலை ருபாய் 20 மட்டுமே.
- குழந்தை பிறந்து 21 நாட்கள் முடிவதற்குள் பதிவு செய்ய வேண்டும்
- இல்லையென்றால், தாமத கட்டணமும் தர வேண்டி வரும்
யார் மட்டும் எங்கு பிறப்பு சான்றிதழ் வெளியிடுவார்?
இந்தியாவில் பொதுவாக நகராட்சி குழுவை சேர்ந்த பதிவாளர், பிறப்பு சான்றிதழை வெளியிடுவார். நகராட்சி இல்லையென்றால் பஞ்சாயத்து தலைவர் வெளியிடுவார். சில இடங்களில், கிராம நிர்வாக பணியாளரும் வெளியிடுவார்.
பதிவு செய்து எத்தனை நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழை பெறலாம்?
- ஆன்லைன் முறையாக இருந்தால், 7 முதல் 21 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
- நேரடி முறை என்றால், சில நேரங்களில் ஒரு மாதம் கூட ஆகலாம்.
எப்படி பிறப்பு சான்றிதழை பதிவு செய்வது?
ஆன்லைன்:
நேரடி:
- மாநகராட்சி மையத்திலிருந்து பிறப்பு சான்றிதழ் பதிவு விண்ணப்பத்தை வாங்கி எல்லா விவரங்களையும் நிரப்பவும்.
- அதனுடன் மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் நகல்களை சேர்த்து சமர்ப்பிக்கவும்
- எல்லாம் சரிப்பார்த்த பிறகு, 7-15 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ் வீட்டிற்கே நேரடியாக அனுப்பித் தரப்படும்.
- நீங்களே 7 நாட்கள் முடிந்தவுடன், அலுவலகத்தை தொடர்பு கொள்வது நல்லது.
- சில நேரங்களில், குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லை என்றால், போலிஸ் நடவடிக்கை நடக்க வாய்ப்புள்ளது.
யாருக்காவது பிறப்பு சான்றிதழ் இல்லையென்றால் என்ன ஆகும்?
பிறப்பு சான்றிதழ் இல்லையென்றால் இந்தியனாக கருதப்பட மாட்டார்கள். அரசு சலுகைகளும் கிடைக்காது. பள்ளி மற்றும் கல்லூரியில் நுழைய முடியாமல் போகும். ஆதலால், குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் மறக்காமல் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யவும்.
#babychakratamil