7 Aug 2019 | 1 min Read
P.Tamizh Muhil
Author | 8 Articles
தமிழ் முகிலின் அனுபவம், அனைத்து தாய்மார்களும் வெவ்வேறு சூழ்நிலைகளில் (இடங்களில்) கடந்து வந்திருப்பார்கள். இதோ அவரே நம்முடன் பகிர்கிறார், தாய்ப்பால் குடிக்கும் எனது குழந்தையுடன் வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலையில், புறப்படுவதற்கு முன் பால் புகட்டி விட்டு, குழந்தைக்கு தேவையான திட உணவையும் எடுத்துக்கொண்டு செல்வேன். பெரும்பாலும், வெளி வேலைகள், இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் முடிவதாக இருந்தால் மட்டுமே கைக்குழந்தையுடன் வெளியில் செல்வேன். ஆனால், எல்லா நேரமும், நாம் நினைப்பது நடப்பதில்லையே!!
ஒருமுறை, பெரிய பிள்ளையுடன் பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்தது. வீட்டிலிருந்து கிளம்புகையில், பால் புகட்டி விட்டு, குழந்தைக்கு தேவையான திட உணவையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். பள்ளியில் புதிய சூழ்நிலை கண்டு குழந்தை மிரண்டதோ, இல்லை அரைத்தூக்கத்தில் விழித்துக் கொண்டதோ தெரியவில்லை ஒரே அழுகை, சமாதானம் செய்ய இயலவில்லை. திட உணவையும் உண்ண மறுத்து அழுதது குழந்தை. பால் புகட்டுவதே ஒரே வழி. ஆனால் பள்ளியில் கைக்குழந்தைக்கு எங்கு வைத்து புகட்டுவது?
ஓர் யோசனை தோன்ற, காருக்கு வந்தேன். காரில் பயன்படுத்தும் sunshade அட்டையை, முன் கண்ணாடியை மறைக்குமாறு விரித்து விட்டு, உள்ளே அமர்ந்து பால் புகட்ட, சற்று நேரத்தில் குழந்தையும் உறங்க, பெரிய பிள்ளையின் பள்ளி நிகழ்ச்சியும் நிறைவு பெற, மனநிறைவுடன் நானும் பிள்ளைகளும், வீடு திரும்பினோம்.
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
A